DEVIKA ,A LEGEND
DEVIKA ,A LEGEND #அமைதியான_நதியினிலே... #தேவிகா == ஒரு பெண்ணை எப்படி பார்க்கிறோமோ, அதை வைத்துதான் அவர் மதிக்கப்படுகிறார்.. அப்படித்தான் பிரமிளா என்கிற தேவிகாவும் இறுதிவரை மதிக்கப்பட்டார்.. விரும்பப்பட்டார்! முடிவில்லாத ஆர்வமும், இயல்பான நடிப்பும், இடைவிடாத முயற்சியும், கடினமான உழைப்பும், இருந்தால் விரைவில் உச்சத்தை தொடலாம் என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்களில் ஒருவர் தேவிகா! ஒரு பெண்மையின் அத்தனை பண்புகளும் தேவிகாவுக்கு இருப்பதாக டைரக்டர்கள் உணர்ந்துதான் ரகரகமான கேரக்டர்களை தந்திருக்கிறார்கள் போலும்.. அவரது முகம், உடலைவிட, அந்த ஆகாய விழிகளே அனைத்தையும் பேசியது.. உணர்த்தியது.. கரைத்தது! முன்னணி ஜாம்பவான்கள் என்றில்லாமல், 2-ம் கட்ட ஹீரோக்களுடனும் இமேஜ் பார்க்காமல் நடித்து ஏற்றத்தாழ்வுகளை நொறுக்கியவர் தேவிகா. மென்மையான முகம், சாந்தமான தோற்றம், தேவிகாவுக்கு இயற்கையிலேயே அமைந்ததால், அவரது கேரக்டர்கள் உயிரோட்டத்துடன் இருக்கின்றன.. குறிப்பாக "நெஞ்சில் ஓர் ஆலயம்" சீதா போலவே அப்பழுக்கற்ற மனைவி தங்களுக்கு வேண்டும் என அக்கால ஆண்கள் ஒவ்வொருவரையும் விரும்ப செய்தார். ...