DRAVIDA MUNNETRA KAZHAGAM FORMED 1949 SEPTEMBER 17
DRAVIDA MUNNETRA KAZHAGAM FORMED 1949 SEPTEMBER 17 திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க. , Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டெம்பர் 17, 1949இல் [2] கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு. அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி. மு. க. வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் Dravida Munnetra Kazhagam தலைவர் மு. கருணாநிதி செயலாளர் நாயகம் க. அன்பழகன் நிறுவனர் கா. ந. அண்ணாதுரை மக்களவைத் தலைவர் இல்லை தலைமையகம் அறிவாலயம், அண்ணா சாலை, , சென்னை – ...