ADOOR GOPALAKRISHNAN , CULTURAL DIRECTOR OF MALAYALAM CINEMA
ADOOR GOPALAKRISHNAN , CULTURAL DIRECTOR OF MALAYALAM CINEMA உலகப் புகழ்பெற்ற கேரள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan) பிறந்தநாள் இன்று (ஜூலை 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் கிராமத்தில் (1941) பிறந்தவர். கலைத் திறன்மிக்க, குறிப்பாக கதகளி ஆடுவதில் சிறந்து விளங்கிய குடும்பம் என்பதால், சிறு வயதிலேயே கலைகளில் திறன் பெற்றிருந்தார். 8 வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். * பள்ளிப்படிப்பு முடிந்ததும் புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, திரைக்கதை மற்றும் சினிமா இயக்கத்தில் பட்டம் பெற்றார். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். திண்டுக்கல் அருகே அரசு அதிகாரியாக சிறிதுகாலம் பணியாற்றினார். * திருவனந்தபுரம் சித்திரலேகா ஃபிலிம் சொசைட்டி, சித்திரலேகா ஃபிலிம் கோ-ஆபரேட்டிவ் ஆகிய அமைப்புகளை நிறுவினார். இவை கேரள திரைப்படக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. இவரது முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ 1972-ல் வெளிவ...