UTERUS , OH , MY MOTHER
UTERUS , OH , MY MOTHER பல விதமான Test களுக்கு பின் டாக்டரை சந்திக்கச்சென்றேன், 'இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லம்மா, இந்த வயசுல எல்லா பெண்களுக்கும் வர்ற பிரச்சனை தான், கர்பப்பை Remove பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும், ரெண்டு நாள் ஆஸ்பிட்டலில் இருந்தா போதும், யோசிச்சு சொல்லுங்க' என்று சொல்லிமுடிக்க எத்தனையோ யோசனைகளோடு வீடு வந்தேன். கணவரிடம் சொல்ல, பயப்படாதம்மா ஒண்ணும் ஆகாது, எல்லாரும் பண்ணிக்கிறது தானே என்று தைரியப்படுத்தினார்! மகன்களிடமும் மகள்களிடமும் சொல்ல, இப்போ இருக்கிற Advance technology ல இதெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரண operation ஆபரேஷன் மா, நகத்தை வெட்டி எடுக்கிற மாதிரி Easy யா பண்ணிடறாங்க, பயப்படுறதுக்கு எதுவுமே இல்லை, தைரியமா இரும்மா என்று சமாதானப்படுத்தினார்கள்! எனக்கு மட்டும் தயக்கமாகவே இருந்தது! ஆபரேசன் நாளன்று பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட ஆஸ்பிடலுக்கு வந்துவிட்டார்கள்! என்னுடைய தயக்கம் மட்டும் போகவே இல்லை! ஆபரேசன் முடிந்து சில மணிநேரத்தில் கண்விழித்தேன்! கணவர், குழந்தைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் பார்க்க வந்துவிட்டார்கள்! ஆனால் நான் பார்...