அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் நடைமுறைகள் என்ன?
அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் நடைமுறைகள் என்ன? 2017 ஆம் ஆண்டு ஜனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது அமெரிக்கா அதன் அதிபரை தேர்ந்தெடுக்கும் போது வெறும் நாட்டின் தலைவரை மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் தலைவரையும், இந்த உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய ராணுவத்தின் தளபதியையும் தேர்ந்தெடுக்கின்றது. எனவே அது ஒரு முக்கிய பொறுப்பு. அது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். அதிபராக தகுதி பெற்றவர்கள் யார்? அமெரிக்காவின் அதிபராவதற்கு நீங்கள் "இயற்கையான முறையில்" அதாவது அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும், குறைந்தது 35 வயதை கடந்திருக்க வேண்டும், மேலும் அங்கு 14 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். 1933 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்த ஏறக்குறைய ஒவ்வொருவரும், ஆளுநராகவோ, செனெட்டராகவோ, ஐந்து நட்சத்திர ராணுவ தளபதியாகவோ இருந்துள்ளனர். கட்சியின் அதிபர் வேட்பாளராக நியமனமாவதற்கு முன் அல்லது ஊடகங்களின் கவனத்தை பெறுவதற்கும் முன்...