Posts

Showing posts with the label RAJESHKANNA

RUDOLPH VALENDINO, MGR, RAJESHKANNA WORLD SUPERSTARS

Image
RUDOLPH VALENDINO, MGR, RAJESHKANNA  WORLD SUPERSTARS ருடோல்ஃப் வாலென்டினோ என்று ஒரு உச்ச நட்சத்திரத் திரை நடிகர் இருந்தார் அமெரிக்காவில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு. திரைப்படம் எனும் தொழில்நுட்பம் பிறந்த அதே ஆண்டில் இத்தாலியில் பிறந்தவர்! ஆரம்பகால மௌனப்படங்கள் பலதில் காதல் நாயகனாகவும் சாகச நாயகனாகவும் நடித்து அக்காலத்தைய அமெரிக்க வெகுஜனக்கலையின் வழிபாட்டு உருவமாக அவர் மாறினார். 19 வயதில் நடிக்க ஆரம்பித்து 23 வயதில் உச்ச நட்சத்திரமாக மாறிய அவர் இளம் பெண்களாலும் ஆண் அழகை விரும்பும் ஆண்களாலும் ‘லத்தீன் காதலன்’ என்று அழைக்கப்பட்டு, அவர்களது காம இச்சையின் உச்சபட்சக் குறியீடாக மாறினார்.  நடிப்புத்திறனை விட அவரது உடல் அசைவுகளும் மயங்கின கண்களும் திடமான உடற்கட்டும்தான் ரசிகர்களைக் கவர்ந்தன. ஆறு ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் சோபித்த அவர் தனது 31 வயதில் குடல் சீழ்ப்புண் காரணமாக இறந்துபோனார். வெறிகொண்ட அவரது ரசிகர்களால் நியூயார்க் நகரின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்தது. அவரது பல தீவிர ரசிகைகளும் சில ரசிகர்களும் தற்கொலை செய்துகொண்டனர்! தன்னைத்தானே அழிக்கத்தூண்டும் அளவில் மக்...