ORU THALAI RAGAM -RAJENDAR
ORU THALAI RAGAM -RAJENDAR ஒருதலை ராகம் பட பூஜை. படம் சூப்பர் ஹிட்டாகி கோடி கோடியாகப் பணம் வரணும். சுற்றியிருந்தவர்கள் வாழ்த்து சொன்ன ஐயரை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். படத்தில் நடிப்பவர்களில் ஒரு முகம் கூட தெரிந்த முகம் கிடையாது. படப்பிடிப்பு ஒழுங்காக நடந்து முடிந்து, சிக்கல் எதுவுமின்றித் திரையரங்கில் சொன்ன தேதியில் வெளியாகுமா என்பதே சந்தேகம். இந்த நிலையில் படம் சூப்பர் ஹிட்டாகி கோடிக்கணக்கில் கொட்டவேண்டும் என்று வாழ்த்துகிறாரே என்று பூஜையில் கலந்துகொண்ட படக்குழுவினருக்கு ஆச்சர்யம். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த வாக்கு பலித்தது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என ஒரு படத்தின் முக்கியப் பொறுப்புகள் அனைத்தையும் சுமந்தவர் டி. ராஜேந்தர் என்கிற டி.ஆர். தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், எந்தத் துறையிலும் சாதித்துக் காட்டலாம் என்று தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பாடம் போதித்தவர். அடுக்கு மொழி வசனம் இவரது படங்களில் ஸ்பெசல் . இவரது படங்களின் பாடல்களில் செட்டிங் குகள் அழகானவை. இளையராஜாவின் பாடல்கள் பேசப்பட்டப் போது இவரது இசையும் ரசிக்க வைத்தது....