ANIRUTH RAVICHANDRAN ,MUSIC DIRECTOR BORN 1990 OCTOBER 16
ANIRUTH RAVICHANDRAN ,MUSIC DIRECTOR BORN 1990 OCTOBER 16 அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichander), ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்திற்காக வொய் திஸ் கொலவெறி டி என்ற ஒற்றைப் பாடல் வெளியிட்டதில் மிகவும் பிரபலமடைந்தவர். இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.[1] அனிருத் ரவிச்சந்திரன், இந் திய திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பாடகராகவும், வெள்ளித்திரையில் சில கௌரவ தோற்றங்களில் தோன்றி நடித்து வருகிறார். பிறப்பு / திரையுலக அறிமுகம் அனிருத் ரவிச்சந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரர் மகன். இவரது தாயார் லட்சுமி ஒரு நடன கலைஞர் ஆவார். லதா ரஜினிகாந்தின் மருமகன். ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்-யின் உறவினர் மகன். அனிருத் ஜினகஷ் என்ற இசைக்குழு பள்ளியில் பயின்றார். அவரது 21-ம் வயதில் '3' படத்திற்கு இசையமைக்க ஆரம்பித்தார். இ...