Posts

Showing posts with the label DURBAR

1911 MARCH 12 DELHI DURBAR

Image
1911 MARCH 11 DELHI DURBAR  .தர்பார் என்பது பெர்சிய மொழிச் சொல். அரசவை என்று சொல்லலாம். தர்பாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் முகலாயர்கள். மாபெரும் சபைதனில் முகலாயப் பேரரசர் தலைமையில் கூடுவார்கள். தர்பாருக்கான நிகழ்ச்சி நிரலில், பேரரசரைப் புகழ்ச்சியால் சொறிந்துவிடும் உரைகள் பிரதானமானவை(அந்தப் பாரம்பர்யமே இன்றைக்குச் சட்டசபை வரை தொடருகிறது). தர்பார் நிகழ்வுகளைக் கண்டுகளிக்கப் பிற ராஜ்யங்களின் / தேசங்களின் விருந்தினர்கள் வருவதும் வாடிக்கை. விருந்தினர்கள் பேரரசருக்குப் பரிசுகள் அளிப்பதும், பதிலுக்குப் பேரரசர் விருந்தினரைப் பரிசுகளால் குளிப்பாட்டித் தன் செல்வாக்கை நிரூபிப்பதும் வழக்கம். ஏதாவது மகிழ்ச்சியான தருணம் என்றால், கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுவார்கள். வியாபார விஷயங்களைப் பேசுவார்கள். எப்போதாவது தர்பாரில் மக்கள் நலத் திட்டங்கள்கூட அறிவிக்கப்படுவதுண்டு. டெல்லி தர்பார் காலனி ஆதிக்க இந்தியாவில் மூன்று முறை டெல்லியில் தர்பார் கூட்டப்பட்டது. ‘நாங்களே உங்களை ஆட்சி செய்கிறோம். நீங்கள் அனைவருமே எங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்’ என்று பிரகடனப்படுத்தும்விதமாக, பி...