TAMIL, MALAYALAM SINGER JEYACHANDRAN BIOGRAPHY
TAMIL, MALAYALAM SINGER JEYACHANDRAN BIOGRAPHY ஜெயச்சந்திரன் பாடல்கள் எனது டவுசர் காலப் பருவத்திலேயே திரைப்படப்பாடல்கள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்த முத பாட்டு இதுதான் . மெளன கீதங்கள்ல வருமே " மூக்குத்திப் பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா" இந்தப் பாட்டு தான். 0 நான் அஞ்சாப்பு படிக்கிற வரைக்கும் எங்க வீட்டில ரேடியோவோ , டேப் ரெக்கார்டரோ கிடையாது. நான் ஆறாப்பு படிக்கும் போது எங்கம்மாவுக்குக் கொஞ்சம் ஒடம்பு சரியில்லாமப் போச்சு , அதுக்கப்புறம் எங்கம்மா சாமிப்பாட்டு கேட்குறதுக்காக எங்க ஐயா நேஷனல் டேப் ரெக்கார்டரும் கண்ணன்சாமிப் பாட்டு கேசட்டு ரெண்டும் வாங்கிக் கொடுத்தாரு , ஐ ஜப்பான் டேப்பு ஜப்பான் டேப்புனு எந்நேரமும் சந்தோசமா அது பக்கத்துலயே கெடப்பேன்.எனக்கு ரெண்டு அண்ணன்மாரு இருக்காங்க , எங்க மூத்த அண்ணனுக்கு யேசுதாஸ் பாட்டுன்னா ரொம்பப்பிடிக்கும் , சிவகாசில இளையராஜா மியூசிக்கல்ஸ் , பாபு மியூசிக்கல்ஸ் இருந்துச்சு .. அங்க தான் ரொம்ப கேசட்டு பதிஞ்சிருக்கோம் 0 ஸ்ரீவில்லிபுத்தூர்ல ரெண்டு பேரு பார்ட்னராச் சேந்து தளபதி மியூசிக்கல...