OORVASI ,SOUTH INDIAN ACTRESS BORN 1967 JANUARY 25
OORVASI ,SOUTH INDIAN ACTRESS BORN 1967 JANUARY 25 ஊர்வசி (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். குடும்பம் இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தனிமையில் வாழ்ந்த அவர் 2014ஆம் ஆண்டு தனது 47ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[1] நடிகை, இல்லத்தரசி, இயற்கை விவசாய ஆர்வலர் எனப் பன்முகங்களைக் கொண்ட ஊர்வசிக்குப் புத்தக வாசிப்பிலும் அதிக ஆர்வம் உண்டு.லாக்டெளனால் சினிமா ஷூட்டிங் செல்லாமல் இருந்தாலும், குடும்பப் பொறுப்...