S.P.BALASUBRAMANIAN
S.P.BALASUBRAMANIAN எவ்வளவு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டு போயிருக்கிறார் எஸ்பிபி. சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றை பார்த்தேன். எஸ்பிபி பற்றி எத்தனையோ நல்ல விஷயங்களை எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார். 'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில் சிவாஜியும் பிரபுவும் ஒன்றாக காரில் போய்க்கொண்டு இருந்திருக்கிறார்கள். பிரபு காரில் உள்ள ஆடியோ பிளேயரை ஓட விட்டிருக்கிறார். 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஒலித்திருக்கிறது. பாடலை கேட்க கேட்க சிவாஜியின் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. பக்கத்திலிருந்த பிரபு இதை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். பாடல் முடிந்ததும் சிவாஜி பிரபுவிடம், "பிரபு, இன்னொரு தடவை அந்த பாட்டை போடு." மறுபடியும் பாடல். கண்களை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் சிவாஜி. பாட்டு முடிந்தது. "பிரபு..." "என்னப்பா ?" "இன்னும் ஒரு தடவை அதை பிளே பண்ணு." மீண்டும்... மீண்டும்... மீண்டும்... பிரபு அந்த பேட்டியில் சிரித்துக்கொண்டே சொல்கிறார். "மொத்தம் 50 தடவைக்கு மேலே 'ஆயிரம் நிலவே வா' பாடலை ரசித்து கேட்டார் அப்ப...