GNANI SANKARAN ,WRITER DIED 2018 JANUARY 15
GNANI SANKARAN ,WRITER DIED 2018 JANUARY 15 ஞாநி என்றும் ஞாநி சங்கரன் என்றும் அறியப்படுபவர் (4 ஏப்ரல் 1954 - 15 சனவரி 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன். சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். பரீக்ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.[1] ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] அப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளிய...