Showing posts with label RADHA. Show all posts
Showing posts with label RADHA. Show all posts

Thursday, 18 February 2021

MUTHAL MARIYATHAI -MOVIE HAPPENINGS BHARATHIRAJA - SIVAJI GANESAN -RADHA

 


MUTHAL MARIYATHAI -MOVIE HAPPENINGS

BHARATHIRAJA - SIVAJI GANESAN -RADHA


‘நீயும் தோற்கலை; நானும் தோற்கலைன்னு சொன்னார் சிவாஜி சார்!’ - பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ அனுபவங்கள்

நன்றி : இந்து தமிழ் திசை செய்திப்பிரிவு

‘முதல் மரியாதை’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘டேய் நீயும் தோற்கலை, நானும் தோற்கலை. உலகத்தரம் வாய்ந்த படத்தைக் கொடுத்திருக்கேடா’ என்று சிவாஜி சார் மனமுவந்து பாராட்டினார்’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற தலைப்பில் இணையதளச் சேனல் நடத்தி வருகிறார். அதில் தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரையுலக அனுபவங்களையும் மனம் திறந்து பகிர்ந்து வருகிறார்.

நடிகர்திலகம் சிவாஜியை வைத்து பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தை இயக்கினார். இந்தப் படம் குறித்தும் சிவாஜி குறித்தும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அதில் பாரதிராஜா கூறியிருப்பதாவது :


‘’நான் ரசித்த சிவாஜி சார், நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு வருவதற்குக் காரணமாக இருந்த சிவாஜி சார், அவரை நான் இயக்குகிறேன். அவர் எப்படி நடிக்கவேண்டும் என்று நான் சொல்லி நடிக்க வைத்தேன் என்பதையெல்லாம் நான் என் வாழ்நாளில் நடக்கும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

படத்தில், ஒருகாட்சி. சிவாஜி வயலில் வேலை செய்துகொண்டிருப்பார். அப்போது வயலுக்குள் புகுந்துகொண்டு ராதா பரிசலுடன் வருவார். அதில் ஆர்ட் டைரக்டர் சேகரும் நடித்தான். என் நல்ல நண்பன். திறமைசாலி. இப்போது அவன் இல்லை. ஹார்ட் அட்டாக்கால் இறந்துவிட்டான். அந்தக் காட்சியில் அவனும் நடித்திருந்தான்.

அப்படி வயலுக்குள் இறங்கி நடந்து வரும் போது, கிராமத்து ஸ்டைலில் ஒரு காட்டுக்கத்து கத்த வேண்டும் சிவாஜி சார். நகரத்திலேயே இருந்ததால், சிவாஜி சாருக்கு இப்படிக் கத்துவதெல்லாம் தெரியவில்லை. ‘நீ கத்திக் காட்டுடா’ என்றார். நான் ‘ஹோய்.. யாருடா அது?’ என்று கத்திக் காட்டினேன். அதேமாதிரி கத்திப் பேசினார். நடித்துமுடித்துவிட்டு, ‘டேய்... நீ கிராமத்துலேருந்து இப்பதான் வந்திருக்கே. நான் வந்து எத்தினியோ வருசமாச்சு’ என்றார் சிரித்துக் கொண்டே.

ஒரு கலைஞனாக, சிவாஜியுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. நல்ல மனிதர். நல்ல சாப்பாட்டுப் பிரியர். மத்தியான ஷூட்டிங்ல சாப்பிடமாட்டேன். சிவாஜி சார் சாப்பாட்டுப்பிரியர். நன்றாக ரசித்துச் சாப்பிடுவார். நான் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘டேய்... என்னடா சாப்பிடாம இருக்கே? உழைக்கறதே சாப்பிடுறதுக்குத்தாண்டா. உக்காருடா’ என்று சொல்லி என்னை சாப்பிடவைத்தார். மீன் எப்படிச் சாப்பிடவேண்டும், உணவை எப்படி எடுக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தார்.

AMP


’முதல் மரியாதை’ படத்தை 32 நாட்களில் எடுத்து முடித்தேன். சிவாஜி சார் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருணத்தில் இருந்தது. ராதாவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் வேலை. சிவாஜி சார் ஒரு மகாகலைஞன் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்... ‘இன்னியோட உங்க காட்சிகள் முடிஞ்சுதுண்ணே. கிளம்பிடலாம்ணே’ என்று சொன்னேன். ‘ராசா...’ என்று அழைத்தார். அவரின் கண்கள் கலங்கியிருந்தன. ‘ராசா... இம்புட்டு நாள் இங்கேயே நடிச்சேனா. இருந்த இந்த இடத்தைவிட்டு போறதுக்கு மனசு வரமாட்டேங்கிதுடா. ஒவ்வொரு இடமும் எங்கிட்ட ஏதோ பேசுற மாதிரியே இருக்குடா’ என்று கண்கலங்கிவிட்டார். அதான் உண்மையான கலைஞன்.

அதேசமயம், காமெடியாவும் நடந்துப்பார் சிவாஜி சார். அதுவும் எப்படி? கண்கலங்கி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்த சிவாஜி சார்... ‘ராசா... என்னை இப்படி அனுப்பிச்சிட்டு, அப்புறம் ராதாவுக்கு நிறைய சீன் எடுத்து சேத்து வுட்றாதடா’ என்று கிண்டலாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அப்படி நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அவர்’’.

படமெல்லாம் முடித்தாகிவிட்டது. அடுத்து டப்பிங் போவது என் வழக்கம். ஆனால் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு டப்பிங் பேசுவது சிவாஜி சாரின் வழக்கம். எங்களுக்குள் இதுசம்பந்தமாக வாக்குவாதம். நான் கொஞ்சம் சர்வாதிகாரி மாதிரி நடந்துகொள்வேன். என் நண்பன் சித்ரா லட்சுமணன், ‘சார் இது உங்க கம்பெனி படம். வீணா பிரச்சினை வேணாம்’ என்று சொல்ல, அடுத்து மனோராமாவுக்கு சொந்தமான தியேட்டரில், படத்தை ரஷ் போட்டுக் காட்டினேன். சிவாஜி சார், ராம்குமார், பிரபு, நான் எல்லோரும் படம் பார்த்தோம்.

இரண்டு ரீல் பார்த்தார். திருப்தி அவருக்கு. அடுத்து கரண்ட் கட்டாகிவிட்டது. இருபது நிமிடங்கள் காத்திருந்தார். பிறகு சிவாஜி சார், ‘டேய்... நான் சொன்னபடி ரெண்டு ரீல் பாத்துட்டேன். நானும் தோற்கலை. நீ சொன்னபடி முழுசா போட்டுக்காட்டலை. நீயும் தோற்கலைடா. டப்பிங் போயிடலாம்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்.

பிறகு ஒருநாள் டப்பிங் முடிந்தது. ‘ஆஸ்கார் விருது கிடைத்தால் கூட இந்த திருப்தி வந்திருக்காது. அப்படியொரு படம் எடுத்திருக்கே. நீ எங்கே கேமிரா வைச்சே, ஏன் வைச்சே, எதனால அந்த ஷாட் வைச்சே... எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா அற்புதமான படத்தைக் கொடுத்திருக்கே. உலகத்தரமான படத்தைக் கொடுத்திருக்கே’ என்று சிவாஜி சார் மனப்பூர்வமாகப் பாராட்டினார்’



'முதல் மரியாதை' வெளிப்புறப் படப்பிடிப்பில் நடிகை ராதா பிறந்த நாள் கொண்டாட, படத்தின் நாயகன் சிவாஜி கணேசன் அவருக்கு இனிப்பு வழங்கிட,  

அருகில் இயக்குநர் பாரதி ராஜா, சித்ரா லட்சுமணன், குள்ளமணி மற்றும் படப்பிடிப்புக் குழுவினர்


Saturday, 3 October 2020

RADHA,MALAYALAM ACTRESS BORN 1964 JUNE 3

 


RADHA,MALAYALAM ACTRESS BORN 1964 JUNE 3



.ராதா (மலையாளம்: രാധ; பிறப்பு சந்திரிகா 3 ஜூன் 1966)[1] ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[2] 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரியான நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து "ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்" என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013வது ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.


ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


வாழ்க்கை குறிப்பு

திருவனந்தபுரம் மாவட்டம் கல்லராவில் பிறந்த இவருக்கு அம்பிகா மற்றும் மல்லிகா என இரண்டு மூத்த சகோதரிகளும், அர்ஜுன் மற்றும் சுரேஷ் நாயர் என்ற இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவரது சகோதரிகளுள் ஒருவரான அம்பிகாவும் இவரது காலத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவராவார்.


இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் "ராக் அன் ரோல் கிச்சன்" (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை ரிசார்ட் விருதினை வென்றுள்ளன.



இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர், ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

Friday, 5 June 2020

RADHA BHAI ,TAMIL SUPPORTING ACTRESS


RADHA BHAI ,TAMIL SUPPORTING ACTRESS 


.ராதாபாய் – சிறந்த ஒரு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை. தமிழ், தெலுங்குப் படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா, சின்னஞ்சிறு உலகம், ஏழைப்பங்காளன், அத்தை மகள், பதிபக்தி, காதலிக்க நேரமில்லை, என்ன தான் முடிவு, கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்கள் இவர் பங்குபெற்றவை.’பணமா பாசமா’ படத்திலும் ‘சின்னஞ்சிறு உலகம்’ படத்திலும் இவர் கே.சாரங்கபாணியின் மனைவியாக நடித்திருப்பார். காதலிக்க நேரமில்லை படத்தில் வி.எஸ்.ராகவன் மனைவியாக நடித்திருப்பார். ’தெய்வ சங்கல்பம்’ படத்தில் இவர் கல்லூரி விடுதிக் காப்பாளராக கௌரவ வேடத்தில் நடித்திருப்பார்.

இவர் நடிகை குட்டி பத்மினியின் தாயார் என ஏதோ ஒரு பத்திரிகையில் படித்ததாக நினைவு..
இவர் நடித்த மேலும் சில படங்கள்:-

டாக்டர் சாவித்திரி [1955], உயிரா மானமா [1968], இருவர் உள்ளம் [1963], தெய்வ சங்கல்பம் [1972], ராஜபார்வை [1981] , படித்தால் மட்டும் போதுமா [1962],



வானம்பாடி 1963], பூமாலை [1965], ஆயிரங்காலத்துப் பயிரு [1963], குறவஞ்சி [1960], வாழ்க்கை வாழ்வதற்கே [1964], உடன் பிறப்பு [1993], அவள் வருவாளா [1998], ’பார் மகளே பார்’ [1963] , கை கொடுத்த தெய்வம் [1964]

Wednesday, 3 June 2020

RADHA , TAMIL ACTRESS BORN 1966 JUNE 3




RADHA , TAMIL ACTRESS BORN 1966 JUNE 3




.ராதா (மலையாளம்: രാധ; பிறப்பு சந்திரிகா 3 ஜூன் 1966)[1] ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[2] 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரியான நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து "ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்" என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013வது ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வாழ்க்கை குறிப்பு
திருவனந்தபுரம் மாவட்டம் கல்லராவில் பிறந்த இவருக்கு அம்பிகா மற்றும் மல்லிகா என இரண்டு மூத்த சகோதரிகளும், அர்ஜுன் மற்றும் சுரேஷ் நாயர் என்ற இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவரது சகோதரிகளுள் ஒருவரான அம்பிகாவும் இவரது காலத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவராவார்.



இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் "ராக் அன் ரோல் கிச்சன்" (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை ரிசார்ட் விருதினை வென்றுள்ளன.



இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர், ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

1980 மற்றும் 90களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் இடையே பெருமளவில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அம்பிகாவின் சகோதரியும் ஆவார்.

radha 3
ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.





டைரக்டர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய கலைஞர்கள் எவரும் சோடை போனதில்லை. இப்போது அறிமுகமாகியுள்ளவர் ராதா. 'அலைகள்  ஓய்வதில்லை' படத்திற்கு யாரை கதாநாயகியாகப் போடலாம் என்று பாரதிராஜா தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது தயாரிப்பாளர் ஆர்.சி.பிரகாஷ் வந்தார். . 'உங்கள் படத்தில்  கதாநாயகியாக நடிக்கப்  பொருத்தமானவளாக இருந்தால் பாருங்கள்' என்று அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்தார்
"இந்தப் பெண் மிகவும் நன்றாக இருக்கிறாளே ! உடனே  நேரில் பார்க்க  வேண்டும்!" என்றார் பாரதிராஜா.

ஆர்.சி.பிரகாஷ் மூலம் தகவல் கிடைக்கவே சரசம்மாவும், அம்பிகாவும் உதயசந்திரிகாவை பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்றார்கள்.

பாரதிராஜ பல கோணங்களில் அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார் "கொஞ்சம் சிரி" என்றார். . சிரித்ததும், அழத் தெரியுமா என்றதும் கிளிசரின் போடாமலேயே அழுது காட்டினாள் அவள். "வெரி  குட், நடிக்கிறியாமா நீ?"என்று கேட்டதும், "சரி சார், நடிக்கிறேன்!  என்று ஒப்புக் கொண்டாள் . "அலைகள் ஓய்வதில்லை"  படத்தின் கதாநாயகியாக அந்தப் பெண் ஒப்பந்தம் செய்யப்பட்டாள் . அவளது இயற்ப்பெயரான உதயசந்திரிகாவை "ராதா" என்று மாற்றினார் பாரதிராஜா.

ராதாவை சந்திக்கிறோம்.

முதல் முறையாக நடிக்கும் போது  படப்பிடிப்பில் உங்கள் அனுபவம் எப்படி?

முதன் முறையாக கேமராவுக்கு முன்னால் நின்ற போது கொஞ்சம் பயமாகத்தான்  இருந்தது. ஆனால் டைரக்டர் தைரியம் சொல்லி நடிக்க வைத்தார். ஆனால் முதல் ஷாட் 'ஓகே' என்று டைரக்டர் சொன்ன பின்னாடிதான் நிம்மதியே வந்தது.

நடிப்பில் போதிய முன் அனுபவம் இல்லாத உங்களால் " அலைகள்  ஓய்வதில்லை" படத்தில் எப்படி திறம்பட நடிக்க முடிந்தது?

டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நடித்தேன். அவ்வளவுதான்.

தொடர்ந்து  நடிப்பதால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட் டீர்களா?

"நோ! நோ! இப்போதும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். தபால் மூலம் படிப்பதால் நோ ப்ராபளம்.

பாரதிராஜாவால் அறிமுகபடுத்தப்பட்டு நல்ல கேரக்டரை ஏற்று நடித்துள்ள நீங்கள், தொடர்ந்து எப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிப்பீர்கள் ?

படம் பார்க்கிற ரசிகர்களுக்கு முழுமையான மன நிறைவை ஏற்படுத்துகிற வகையில் அந்த கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று கருதுகிறேன்.  கதைக்கும் காட்சிக்கும் கதாபாத்திரத்துக்கும் பொருத்தமாக இருந்தால் அதிக கவர்ச்சியாக கூட நடிக்கலாம்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ்)


1980 மற்றும் 90களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் இடையே பெருமளவில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அம்பிகாவின் சகோதரியும் ஆவார். adha 3
ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.radha 1 1
அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். மேலும் மகள்கள் கார்த்திகா துளசி இருவரும் சில திரைப் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

radha 2 1
நடிகை ராதாவிற்கு மும்பையில் உணவு விடுதிகள் உள்ளது. மேலும் கேரளாவில் Uday Samudra Leisure Beach Hotel & Spa, Uday Suites – The Garden Hotel, Uday Backwater Resort’ என மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளது. மேலும் இங்கிலாந்தில் “ராக் அன் ரோல் கிச்சன்” (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது.