RADHA , TAMIL ACTRESS BORN 1966 JUNE 3
.ராதா (மலையாளம்: രാധ; பிறப்பு சந்திரிகா 3 ஜூன் 1966)[1] ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[2] 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரியான நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து "ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்" என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013வது ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வாழ்க்கை குறிப்பு
திருவனந்தபுரம் மாவட்டம் கல்லராவில் பிறந்த இவருக்கு அம்பிகா மற்றும் மல்லிகா என இரண்டு மூத்த சகோதரிகளும், அர்ஜுன் மற்றும் சுரேஷ் நாயர் என்ற இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவரது சகோதரிகளுள் ஒருவரான அம்பிகாவும் இவரது காலத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவராவார்.
இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் "ராக் அன் ரோல் கிச்சன்" (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை ரிசார்ட் விருதினை வென்றுள்ளன.
இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர், ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
1980 மற்றும் 90களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் இடையே பெருமளவில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அம்பிகாவின் சகோதரியும் ஆவார்.
radha 3
ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.
நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.
நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.
டைரக்டர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய கலைஞர்கள் எவரும் சோடை போனதில்லை. இப்போது அறிமுகமாகியுள்ளவர் ராதா. 'அலைகள் ஓய்வதில்லை' படத்திற்கு யாரை கதாநாயகியாகப் போடலாம் என்று பாரதிராஜா தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது தயாரிப்பாளர் ஆர்.சி.பிரகாஷ் வந்தார். . 'உங்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் பொருத்தமானவளாக இருந்தால் பாருங்கள்' என்று அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்தார்
"இந்தப் பெண் மிகவும் நன்றாக இருக்கிறாளே ! உடனே நேரில் பார்க்க வேண்டும்!" என்றார் பாரதிராஜா.
ஆர்.சி.பிரகாஷ் மூலம் தகவல் கிடைக்கவே சரசம்மாவும், அம்பிகாவும் உதயசந்திரிகாவை பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்றார்கள்.
பாரதிராஜ பல கோணங்களில் அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார் "கொஞ்சம் சிரி" என்றார். . சிரித்ததும், அழத் தெரியுமா என்றதும் கிளிசரின் போடாமலேயே அழுது காட்டினாள் அவள். "வெரி குட், நடிக்கிறியாமா நீ?"என்று கேட்டதும், "சரி சார், நடிக்கிறேன்! என்று ஒப்புக் கொண்டாள் . "அலைகள் ஓய்வதில்லை" படத்தின் கதாநாயகியாக அந்தப் பெண் ஒப்பந்தம் செய்யப்பட்டாள் . அவளது இயற்ப்பெயரான உதயசந்திரிகாவை "ராதா" என்று மாற்றினார் பாரதிராஜா.
ராதாவை சந்திக்கிறோம்.
முதல் முறையாக நடிக்கும் போது படப்பிடிப்பில் உங்கள் அனுபவம் எப்படி?
முதன் முறையாக கேமராவுக்கு முன்னால் நின்ற போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால் டைரக்டர் தைரியம் சொல்லி நடிக்க வைத்தார். ஆனால் முதல் ஷாட் 'ஓகே' என்று டைரக்டர் சொன்ன பின்னாடிதான் நிம்மதியே வந்தது.
நடிப்பில் போதிய முன் அனுபவம் இல்லாத உங்களால் " அலைகள் ஓய்வதில்லை" படத்தில் எப்படி திறம்பட நடிக்க முடிந்தது?
டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நடித்தேன். அவ்வளவுதான்.
தொடர்ந்து நடிப்பதால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட் டீர்களா?
"நோ! நோ! இப்போதும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். தபால் மூலம் படிப்பதால் நோ ப்ராபளம்.
பாரதிராஜாவால் அறிமுகபடுத்தப்பட்டு நல்ல கேரக்டரை ஏற்று நடித்துள்ள நீங்கள், தொடர்ந்து எப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிப்பீர்கள் ?
படம் பார்க்கிற ரசிகர்களுக்கு முழுமையான மன நிறைவை ஏற்படுத்துகிற வகையில் அந்த கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று கருதுகிறேன். கதைக்கும் காட்சிக்கும் கதாபாத்திரத்துக்கும் பொருத்தமாக இருந்தால் அதிக கவர்ச்சியாக கூட நடிக்கலாம்.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ்)
1980 மற்றும் 90களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் இடையே பெருமளவில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அம்பிகாவின் சகோதரியும் ஆவார். adha 3
ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.radha 1 1
அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.
நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். மேலும் மகள்கள் கார்த்திகா துளசி இருவரும் சில திரைப் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
radha 2 1
நடிகை ராதாவிற்கு மும்பையில் உணவு விடுதிகள் உள்ளது. மேலும் கேரளாவில் Uday Samudra Leisure Beach Hotel & Spa, Uday Suites – The Garden Hotel, Uday Backwater Resort’ என மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளது. மேலும் இங்கிலாந்தில் “ராக் அன் ரோல் கிச்சன்” (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது.
No comments:
Post a Comment