KARUNANIDHI FORMER CHIEF MINISTER
BORN JUNE 3,1924 - AUGUST 7,2018
.கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முன்னெடுத்த திட்டங்கள் குறித்து விரிவாக
கல்வி, மருத்துவம், தொழில்வளர்ச்சி என பல துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாக விளங்குவதற்கு பின்னணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள்தான் காரணமாக இருக்க முடியும். அத்தகைய திட்டங்களை பெருமளவு முன்னெடுத்தவர் கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுவதும் ஏழைச் சிறுவர், சிறுமியர்கள் முதன்முறையாக பள்ளிக்கூடத்தில் காலடி எடுத்துவைத்தனர். ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வந்தது காமராஜர் என்றால் அதை நீடிக்கச் செய்து, அவர்களுக்கான உதவிகளை வழங்கி, பள்ளிகள் மட்டுமல்லாமல், தொழிற்கல்விகள், மருத்துவப் படிப்புகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் அமைத்து, படிப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது பின்னர் வந்த திராவிட கட்சிகள் தான். அதிலும் குறிப்பாக தனது இறுதி மூச்சுவரை அதற்கான பணிகளை மேற்கொண்டுவந்தது கலைஞர் கருணாநிதிதான் என்று அடித்துக்கூறலாம்.
இளமைத் துடிப்புமிக்க சூரியன்
samayam tamil
மிக இளம் வயதிலேயே பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, திமுக எம்எல்ஏ, திமுக பொருளாளர், இந்தியாவிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமைகள் கலைஞரைச் சேரும். பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள், திமுக தலைவராகவே 50 ஆண்டுகள், திரைத்துறையில் 60 ஆண்டுகள் என கலைஞரின் சாதனைகள் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை.
கலைஞர் ஆட்சிக்கு வந்த 1969ஆம் ஆண்டிலிருந்து 1976 வரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக இளமைத் துடிப்ப்புடன் அவர் நட்ட விதைகள் இன்று விருட்சமாய் வளர்ந்துள்ளன. இப்போதும்கூட பல மாநிலங்களில் இல்லாத பல முக்கியத் திட்டங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.
ஆரம்பமே அமர்க்களம்
samayam tamil
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியம், சுற்றுலா வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் போன்றவற்றை உருவாக்கியது கலைஞர். ஆதிதிராவிடர் இலவச கான்கிரீட் வீட்டு வசதி திட்டம், சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதி திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி அமைச்சகம், பிற்படுத்தப்பட்டோர் நல குழு அமைத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது, பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்து கழகங்கள் உருவாக்கம், அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு திட்டம், விவசாய தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை உரிமைச் சட்டம், சேலம் உருக்காலை திட்டம்..
நல் விதையிட்ட வித்தகன்
samayam tamil
15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 876 விவசாயிகளுக்கு வழங்கியது, சிப்காட் தொழில் வளாகங்கள், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் கருணை இல்லங்கள் உருவாக்குதல், கை ரிக்ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண சட்டம், அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு திட்டம், பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திட்டம், மாநில திட்ட குழு உருவாக்கம், காவல் ஆணையம் அமைத்தல்.
எதிர்ப்புகளை உரமாக்கிய கலைஞர்!
samayam tamil
நம்ப முடிகிறதா மேற்சொன்ன திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது என்று. நம்பித்தான் ஆகவேண்டும், அதனால்தான் இங்கு இங்கு போட்டோஷாப் பயன்படுத்தாமலே வளர்ச்சியடைய முடிந்திருக்கிறது.
கலைஞர் தன் வாழ்வில் நீண்ட நெடிய ஓட்டத்தை மேற்கொண்டவர். முதல்வராக அமர்ந்த முதல் ஏழு ஆண்டுகளிலேயே நவீன தமிழ்நாட்டிற்கான அஸ்திவாரத்தை மிக வலுவாக போட்டுவிட்டார். ஆனாலும் அவர் அதற்கு பின் ஆட்சியில் அமர 13 ஆண்டுகள் பிடித்தது. எம்ஜிஆர் என்ற மந்திரச் சொல் தமிழகத்தை மயக்கியிருந்த நேரம் எதிர் வரிசையில் அமர்ந்துகொண்டு அதைவிட பல மடங்கு தமிழ், தமிழ்நாடு வளர்ச்சிக்கு பங்காற்றினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர், ராஜீவ்காந்தி மரணத்தால் தனது ஆட்சியை இழந்தார். அந்த இரண்டு ஆண்டு காலத்தில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மக்கள் நலனுக்கு எவ்வாறு பயன்படுத்தினார் என்பதன் பட்டியலைப் பாருங்கள்..
சமூக நீதி காவலன்!
samayam tamil
தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகைகள், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம், ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், ஈவேரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம், ஆதிதிராவிடர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வருமான வரம்புக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, பின்னர் இது முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியாக மாற்றியமைக்கப்பட்டதும் கலைஞரின் ஆட்சி காலத்தில்தான். கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், வன்னியர் சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோர் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு, ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு நிர்ணயித்து பழங்குடி இனத்தவருக்கு ஒரு விழுக்காடு தனி இட ஒதுக்கீடு, மகளிருக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்.
நவீன சென்னையை வரைந்த ஓவியன்!
.
சென்னையை நோக்கி இன்று உலக நாடுகளின் நிறுவனங்கள் தொழில் தொடங்க போட்டிபோட்டுக்கொண்டு வருகிறது என்றால் அந்த பெருமையும் கலைஞரையே சாரும். 1996ஆம் ஆண்டு மீண்டும் அரியணை ஏறிய கலைஞர் முன்னெடுத்த முத்தான திட்டங்கள் அப்படி..
உயர்கல்வித்துறை உருவாக்கம், நெடுஞ்சாலைத்துறை உருவாக்கம், தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கம், சமூக சீர்திருத்தத் துறை உருவாக்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை உருவாக்கம், சென்னையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம், உழவர் சந்தைத் திட்டம் வருமுன் காப்போம் திட்டம், கால்நடை பாதுகாப்பு திட்டம், பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம், விவசாய தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலனுக்கு என தனித்தனி நல வாரியங்கள், தாய் மொழி வளர்ச்சிக்கு தனி அமைச்சகம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம், தென் குமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை, ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தடைபட்டு கிடந்த உள்ளாட்சி
அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல், கிராமங்கள் தோறும் சிமெண்ட் சாலைகள், வரலாறு காணாத வகையில் ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற பெண்களுக்கு தொழில் கல்லூரி, தொழிற் கல்லூரிகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு, கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம், சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம், சேமிப்புடன் கூடிய மகளிர் சிறு வணிக கடன் திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமைக்கப்பட்டது, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 10,000 சாலை பணியாளர்கள் நியமனம், 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் நியமனம்.
ஓய்வறியா சூரியன்!
.
22 லட்சத்து 40 ஆயிரத்து 239 விவசாய குடும்பங்களுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான நெல்கொள் முதல் விலை உயர்த்தப்பட்டது, மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள் மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டது, கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது, ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்தின் மூலம் பெற்ற கடன் தொகையை வட்டியுடன் 5 கோடியே 25 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது, காவிரி குண்டாறு இணைப்பு திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம், ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம், மேலும் இரண்டு லட்சம் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிட்டார் கலைஞர்.
இலவசங்கள் அல்ல; வாழ்க்கைத் தரம் உயர்த்துதல்!
.
ஒரு கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குதல், 660 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்குதல், ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 27 விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம், 8 லட்சத்து 30 ஆயிரத்து 497 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவில் வாரம் 5 முட்டைகள், முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழங்கள் வழங்குதல், தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பு கட்டணங்களும், பதினோரு லட்சம் மாணவ மாணவியர்களுக்கு 10, 12 வகுப்பு அரசு தேர்வு கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டன.
தலைமுறைகள் போற்றும் நாயகன்!
.
தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து, சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகியஇடங்களில் ஐந்து புதிய அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள், ஒரத்தநாடு, பெரம்பலூர், சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெண்ணாகரம், திருப்பத்தூர், வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள், 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம், நலமான தமிழகம் திட்டம், இலவச அமரர் ஊர்தி சேவை திட்டம், இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு, அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டது, பெரியார் நினைவு சமத்துவபுரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், அடையாறு தொல்காப்பிய பூங்கா, செம்மொழி பூங்கா, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மெட்ரோ ரயில் திட்ட அமைப்பு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றம், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் ரத்து, பறக்கும் சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலைஞர் அரசு மேற்கொண்டது.
வரலாற்றை உருவாக்கியவனுக்கு வாழ்த்துகள்!
.
கலைஞர் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக முன்னெடுத்த இத்தனை திட்டங்கள் அணிவகுத்து நிற்பதால்தான் தமிழ்நாடு இப்போதும் வளர்ச்சியில் முன்னணியில்நிற்கிறது. நிர்வாக ஊழல் குற்றச்சாட்டுகள் திமுக மீது சுமத்தப்பட்டிருந்தாலும் கலைஞர் கருணாநிதி இந்த மக்கள் நலத் திட்டங்களால் என்றென்றைக்கும் நினைவுகூரும் தலைவராக வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.
.
No comments:
Post a Comment