Friday 5 June 2020

LAKSHMI PRABHA ,TAMIL ACTRESS CHARECTER ROLE ARTIST BORN DECEMBER 4,1927




LAKSHMI PRABHA ,TAMIL ACTRESS CHARECTER 
ROLE ARTIST BORN DECEMBER 4,1927



அன்றைய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லன் நாகேந்திர ராவை சிரிப்பால் மயக்கும் வில்லியாகவும், 1950-இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘திகம்பர சாமியார்’ படத்தில் வக்கீல் சட்டநாதன் [டி.பாலசுப்பிரமணியம்] ஜோடியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர், லட்சுமி பிரபா. கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் மனைவி எம்.சரோஜாவின்  உடன் பிறந்த மூத்த சகோதரி ஆவார்.

திருமணத்திற்குப் பின்பே இவர் நடிக்க வந்தார். பட அதிபர் சுப்பிரமணியம் தான் ’கீதகாந்தி’ என்ற படத்தில் அறிமுகம் செய்தார்.

தமிழ்த் திரைப்படங்களில் இவர் பங்கு கொஞ்சமே என்றாலும் பண்பட்ட நடிப்பால் அன்றைய ரசிகர்கள் நெஞ்சம் நிறைந்தவராகத்தான் இவர் திகழ்ந்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும் லட்சுமி பிரபாவும் நெருங்கிய தோழிகள். சந்தியாவுக்கு ஒரு படம் கிடைக்கிறதென்றால் அதில் இவருக்கேற்ற கதாபாத்திரம் இருக்குமேயென்றால் அந்தப் படத்தில் இவருக்கு நிச்சயம் சிபாரிசு செய்து ஒரு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுப்பாராம் சந்தியா.

காட்சிகளில் இவரது நடிப்பு, எந்த கதாபாத்திரமென்றாலும் இவரைப் பேச வைத்தது. ஜெமினி நிறுவனம் தயாரித்த பல படங்களில் இவரை அதிகம் பார்த்திருக்க முடியும்.கிட்டத்தட்ட ஜெமினியின் ஆஸ்தான நடிகை என்று கூட லட்சுமி பிரபாவைச் சொல்லலாம். லட்சுமி பிரபாவின் தங்கை எம்.சரோஜா தங்கவேலு. லட்சுமி பிரபாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி பீரியட் வந்துவிட்டது. திரையுலகிற்கு ஒரு மரியாதையும் கிடைத்தது.




ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆரின் ‘நல்லவன் வாழ்வான்’, ‘ஏழை உழவன்’ உள்ளிட்ட 4 படங்களில் இவர் நடித்துள்ளார். குணசுந்தரி, அபூர்வ சகோதரர்கள், திருடாதே, திகம்பர சாமியார், மாயா பஜார், பட்டணத்தில் பூதம், கைதி கண்ணாயிரம், சக்கரவர்த்தித் திருமகள், மர்மயோகி  போன்ற படங்கள் இவரைப் பிரபலப்படுத்தியவை. திருடாதே படத்தில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்தப்படம் 1970-இல் வெளிவந்த டான்ஸ் மாஸ்ரர் தங்கப்பனின் ‘அன்னை வேளாங்கண்ணி’. இதில் ஜெமினிகணேசனின் அம்மாவாக நடித்துள்ளார்.

இவரது ஒரே மகள் இந்திராணி.டாக்டராக இருக்கிறார். மருமகன் இவரது உறவு அடிப்படையில் சம்பந்தியான பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதாவின் மகனாவார். இவரது கணவர் பெயர் ஈஸ்வரன். இருவரும் தற்போது உயிருடன் இல்லை.

தினத்தந்தி 27.9.1998 நாளிதழிலிருந்து எடுக்கப்பெற்று தொகுக்கப்பெற்றது.

மாயா பஜார் படக்காட்சிகள்

மாயா பஜார் (1957) படத்தில் லக்ஷ்மி பிரபா

Overview (1)

Bornin Warangal, India

Mini Bio (1)


Lakshmi Prabha was born on December 4, 1927 in Warangal, India. She is an actress, known for Dharmadevata (1952), Ulagam Palavitham (1955) and Prapancham (1953).

No comments:

Post a Comment