LATHA ,TAMIL ACTRESS FROM ROYAL FAMILY
OF RAMNAD BORN 1953 JUNE 7
லதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். இவர் 1970கள் மற்றும் 1980களில் புகழ்பெற்ற நடிகையாக தென்னிந்திய திரையுலகில் இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது வள்ளியில் ராஜேஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லதா 7, ஜூன் 1953ல் இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர்.[1] இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். 1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்தார்[2][
சென்னை: ராமாவரம் தோட்டத்தில் வைத்து எம்.ஜி.ஆர். ரஜினிகாந்தை அடித்தாரா இல்லையா என்பது குறித்து நடிகை லதா விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் பல ஆண்டுகளாக பேசப்படுகிறது.அந்த லதாவுடன் சேர முடியாத காரணத்தால் அதே பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நடிகை லதா விளக்கம் அளித்துள்ளார்.
பேட்டி நடிகை லதா நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது, நான் பிற நடிகர்களுடனும் நடித்துள்ளேன். ஆனால் எங்கு சென்றாலும் எம்.ஜி.ஆர். லதா என்று முத்திரை குத்திவிட்டார்கள். அதை நான் பெருமையாகவே நினைக்கிறேன். எத்தனை பேருக்கு கிடைக்கும் அந்த பெருமை?. கமலும், ரஜினியும் எனக்கு வேண்டியவர்கள் தான். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எம்.ஜி.ஆரை போன்று ஒருவர் இருந்ததும் இல்லை, இனி வரப் போவதும் இல்லை
எம்.ஜி.ஆர். ரஜினி நடிகை லதாவை ஒரு தலையாக காதலித்து அத்துமீறியதால் எம்.ஜி.ஆர். அவரை ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்தார் என்று கூறப்படுகிறதே என்று பேட்டியின்போது கேட்கப்பட்டது. பாவம் அவரை பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறார்கள் போன்று. ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை என்றார் லதா.
எளிமையானவர் ரஜினி ரொம்ப நல்ல மனுஷன், எளிமையானவர். புகழின் உச்சியில் இருந்தால் கூட முதல் படத்தில் நடித்தபோது எப்படி இருந்தாரோ தற்போதும் அதே போன்று எளிமையாக உள்ளார். நல்ல குடும்ப நண்பர். அவர் வீட்டில் விசேஷம் என்றால் லதா ரஜினிகாந்த் என்னை அழைப்பார். நானும் போவேன். என் வீட்டில் விசேஷம் என்றால் அவர்கள் வருவார்கள் என்று லதா தெரிவித்தார்.
அமைதி ஏன்? எனக்கு கார்த்திக், ஸ்ரீனிவாஸ் என்று இரண்டு மகன்கள். ஸ்ரீனிவாஸுக்கு ரஜினியை மிகவும் பிடிக்கும். ரஜினியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். அதனால் தான் அவரையும் என்னையும் சேர்த்து பேசுகிறார்கள். அவர் அடி வாங்கியதாக இத்தனை ஆண்டுகளாக கூறுகிறார்கள் என்றார் லதா. சம்பவம் நடந்ததாக கால் நூற்றாண்டு காலமாக பேசப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக லதா ஏன் அமைதி காத்தார், இந்த விளக்கத்தை அப்பொழுதே கொடுத்திருக்கலாமே என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏழு சகோதரர்களோடு பிறந்த லதா முதல் வரிசை மாணவியாக இருந்தபோதும் அவருக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரது பெரியம்மா கமலா தெலுங்கு நடிகையாக இருந்து பின்பு இந்தியிலும் நடித்தார். மராட்டியர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நடிப்பதை விட்டுவிட்டார். நடிகர் தேவ் ஆனந்தின் முதல் ஹீரோயின் அவர்தான். இவருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, இவர் தங்கை மகள் லதாவை தன் சொந்தப் பெண் போல கவனித்துக்கொண்டார். ‘‘தான் திரையுலகில் ஜொலிக்க அவரது பெரியம்மாவே இன்ஸ்பிரேஷனாக இருந்தார்’’ என்கிறார் லதா. கமலா தன் செல்லப் பெண்ணாகக் கருதிய லதாவுக்குத் தன் வீட்டில் கிருஷ்ண குமார் என்ற ஆசிரியரை வைத்து கதக் நாட்டியத்தைக் கற்றுக்கொடுத்தார்.
தனக்கு சினிமா சான்ஸ் கிடைத்ததே ஒரு சினிமா கதைப் போலத்தான் என்பதை விவரித்தார் லதா. ‘‘என் பள்ளிக்கூடத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன். பள்ளி விழாவைப் படம் எடுத்த புகைப்படக்காரர் அடுத்து நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் நடித்த மேடை நாடகத்தையும் படம் எடுத்தார். தான் எடுத்த படங்களை மனோகரிடம் காட்டினார். அப்போது இந்தப் பள்ளிவிழா படங்களும் அவற்றோடு கலந்திருந்தன. அவற்றையும் பார்த்த மனோகர் ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்துவிட்டு ‘எம்.ஜி.ஆர் வெளிநாடுகளில் எடுக்கப்போகும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு ஒரு புதுமுகம் தேடி வருகிறார். இந்தப் பெண்ணின் படத்தை அவரிடம் காட்டுவோம்’ எனச் சொல்லியிருக்கிறார். சரியென்று புகைப்படக்காரரும் ஒப்புக்கொண்டார்.
எம்.ஜி.ஆரிடம் பள்ளிவிழாவில் எடுக்கப்பட்ட படங்களை மனோகர் காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ‘இந்தப் பெண்ணின் முகம் சினிமாவுக்கு ஏற்றதாக உள்ளது. அவள் அம்மாவிடம் அனுமதி கேட்டு வாருங்கள்’ என்றார். இன்னொரு விஷயம் அப்போது என் பெயர் நளினி. சினிமாவுக்கு வந்த பின்தான் லதா ஆனேன். பள்ளியில் நளினி யார் என விசாரித்து வீட்டுக்கே வந்துவிட்டனர். மனோகர், என் அம்மாவைப் பார்த்து எம்.ஜி.ஆர் தன் படத்தில் நளினியை நடிக்க வைக்க விரும்புவதாகச் சொன்னதும் அந்த அம்மா, ‘வேண்டாம் சார். ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கிறாள். ஸ்கூல்கூட முடிக்கவில்லை. அவள் அப்பா ராமநாதபுரத்து ராஜா. அவளை சினிமாவில்விட எனக்கு விருப்பமில்லை’’ என்றார்.
அருகில் நின்ற என்னைப் பார்த்து, ‘என்னம்மா உனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமா’ என்று மனோகர் கேட்டதும் ‘ஓ சரி’ என்று சொன்னேன். பெரியம்மாவின் செல்லப்பெண் என்பதால் எனக்குக் கலையார்வம் இருந்தது. மனோகர் அம்மாவிடம் ‘சரி அம்மா... நீங்களே எம்.ஜி.ஆரிடம் வந்து உங்கள் எண்ணத்தை சொல்லிவிடுங்கள்’ என்றார்.
மறுநாள் நானும் அம்மாவும் மதியம் எம்.ஜி.ஆர் ஆஃபீஸுக்கு வந்தோம். அப்போது எம்.ஜி.ஆரும் இயக்குநர் ப.நீலகண்டனும் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ‘வாங்க, உட்காருங்கள்.. சாப்பிடுங்கள்’ என்றார் எம்.ஜி.ஆர். ‘இல்லை... நாங்கள் சாப்பிட்டுத்தான் வந்தோம்’ என்றோம். ‘சரி. பாயசம் சாப்பிடுங்கள்’ என்றார் எம் ஜி ஆர். கீழே அமரப் போனதும் ‘வேண்டாம் சாப்பாடுதான் சாப்பிடவில்லையே; கீழே உட்காரவேண்டாம். சோஃபாவில் உட்காருங்கள்’ என்றார்.
எம்.ஜி.ஆர் சாப்பிட்டு முடித்ததும் ‘உங்கள் மகளை நான் கவனமாகப் பார்த்துக்கொள்வேன். உங்கள் ராஜ குடும்பத்தின் பாரம்பர்யத்துக்கு எந்தவோர் இழுக்கும் வராமல் பார்த்துக்கொள்கிறேன். நடிக்க அனுமதியுங்கள்’ என்றார். நளினி என்ற பெயரில் அப்போது ஒரு நடிகை இருந்ததால் எம்.ஜி.ஆர் என் பெயரை மாற்ற விரும்பினார். என்னை வீட்டில் லல்லி என்றே அழைத்தனர். எம்.ஜி.ஆர் லல்லியை லதா ஆக்கினார்.’’ சுவாரஸ்யமாக விவரித்தார் லதா.
எம்.ஜி.ஆர் லதாவின் அம்மாவிடம் ‘‘லதாவுடன் ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம்’’ என்றார். எதற்கு இந்த ஒப்பந்தம்? என்று நளினியின் அம்மா கேட்டார். ‘‘நாங்கள் ஒரு கதாநாயகியை கஷ்டப்பட்டு பல்வேறு பயிற்சிகளை அளித்து உருவாக்குகிறோம். பிறகு அவர்களின் கால்ஷீட்டுக்கு நாங்கள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. அதனால் ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் செய்கிறோம். அவர் எங்கள் கம்பெனி படங்களில் மட்டும் நடிக்க வேண்டும். பிறகு ஒப்பந்த காலம் முடிந்ததும் வெளி கம்பெனி படங்களில் நடிக்கலாம்’’ என்றார். ஒப்பந்தம் கையெழுத்தானது.
தினமும் பள்ளிக்கூடத்துக்கு வருவது போல லதா காலை ஒன்பது மணிக்குப் பயிற்சிக்கு வந்துவிடுவார். அங்கு வசனப் பயிற்சி அளிக்க பழம்பெரும் நடிகை ஜி.சகுந்தலா இருப்பார். டி.சம்பந்தம் இருப்பார். அவரும் நாடக அனுபவம் உடையவர். பரத நாட்டியப்பயிற்சி அளிக்க தண்டாயுதபாணி பிள்ளை வந்தார். சினிமாவுக்கான டான்ஸ் பயிற்சி அளிக்க புலியூர் சரோஜா இருந்தார். இன்னும் பல டான்ஸ் மாஸ்டர்கள் பயிற்சியளித்தனர். இது போன்ற பயிற்சிதான் முன்பு மஞ்சுளாவுக்கும் அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தை நட்சத்திரமாக இருந்து எம்.ஜி.ஆரின் படக் கம்பெனியில் தன் பதினாறு வயதில் ஒப்பந்தமான மஞ்சுளா பதினெட்டு வயது ஆனதும் தன்னை எந்த ஒப்பந்தமும் கட்டுப்படுத்தாது என்று சொல்லி வேறு கம்பெனி படங்களில் நடிக்கப் போய்விட்டார். இது எம்.ஜி.ஆருக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது. ஆனால் லதா விஷயத்தில் அப்படியிருக்கவில்லை. லதா கடைசி வரை அவரது சொல்படி கேட்கும் பள்ளி மாணவி போலவே நடந்துகொண்டார். இன்றும் ‘எம்.ஜி.ஆரால்தான் எனக்கு இந்தப் புகழும் பேரும் செல்வமும் கிடைத்திருக்கிறது’ என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்.
வசனப் பயிற்சி அளித்த ஜி சகுந்தலா பற்றி இங்கு விரிவாகச் சொல்ல வேண்டும். ஏனென்றால் எப்படிப்பட்ட பயிற்சியாளரை எம்.ஜி.ஆர் லதாவுக்கு நியமித்தார் என்பது தெரிய வேண்டும் அல்லவா. ஜி.சகுந்தலா எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்தில் இடிந்த கோபுரம் [இன்பக்கனவு] நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தவர். பின்பு மந்திரிகுமாரி படம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும் கலைஞர் வசனத்திலும் எடுக்கப்பட்ட போது வசனம் நன்றாகப் பேச தெரிந்தவர் என்பதால் ஜி.சகுந்தலா சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.
தன் கடைசிப் படமான இதயவீணையில் எம்.ஜி.ஆருக்குத் தாயாக நடித்தார்.
ஜி.சகுந்தலா பழைய படங்களில் தான் பேசிய வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் லதாவிடம் பேசிக் காட்டி அதைப் போல லதாவும் பேசுவதற்குப் பயிற்சி அளிப்பார். லதாவுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும்; பள்ளியிலும் அவருக்கு செகண்ட் லாங்குவேஜ் தமிழ்தான்; வீட்டிலும் அவர் பேசுவது தமிழே; என்றாலும் இவையெல்லாம் சினிமாவில் பேசுவதற்குரிய தகுதிகள் ஆகாது. சினிமாவில் ஒரு சொல் உதிர்த்தாலும் அதில் ஓர் உணர்ச்சி பொதிந்திருக்க வேண்டும். எனவே அவருக்கு ஜி சகுந்தலா தமிழ் பேசப் பயிற்சியளித்தார்.
லதாவுக்கு நடிப்பும் சொல்லித் தரப்பட்டது. வசனம் பேசும்போதும் அவர் தன் கை கால்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் வசனம் பேசும்போது எப்படி அதற்கு ரெஸ்பாண்ட் செய்ய வேண்டும். முகபாவம் எப்படி இருக்க வேண்டும் என்றும் டி சம்பந்தமும் ஜி சகுந்தலாவும் லதாவுக்குச் சொல்லிக் கொடுத்தனர். கேமராவுக்கு முன் நிற்பது நகர்வது அடுத்தவர் நடிக்கும்போது அவருக்கு இடையூறு இல்லாமல் இருப்பது லைட்டை முகத்தில் வாங்கி நடிப்பது நிழல் விழாமல் நடிப்பது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பு நடந்தபோது அதனை லதா வந்து பார்க்கும்படி எம்.ஜி.ஆர் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் லதாவுக்கு ‘ஆன் த ஸ்பாட் ஸ்டடி’ அனுபவமும் கிடைத்தது.
லதா பார்க்கச் சிறிய பெண்ணாக இருந்ததால் அவரது எடையை அதிகரிக்க வேண்டி அவருக்கு தினமும் ஐஸ் கிரீம், பாசந்தி, அல்வா என்று சிறப்பு உணவு அடிக்கடி வழங்கப்பட்டது. பின்பு அவர் சற்று உடல் எடை கூடினார். ‘‘எனக்கு மேட்சாக நீ தெரிய வேண்டும் இப்படி ஒல்லியாக இருக்கக் கூடாது’’ என்று அறிவுறித்திய எம்.ஜி.ஆர் அவரை நன்கு சாப்பிட வைத்தார். இதனால் லதாவுக்கு மெள்ள மெள்ள சினிமா நடிகைக்குரிய உடல் வனப்பும் அழகும் கவர்ச்சியும் தோற்றப்பொலிவும் உண்டாயிற்று. பராசக்தி படம் எடுத்தபோது கூட சிவாஜி கணேசன் எடை குறைந்து கன்னத்தில் சதை இல்லாமல் வற்றலாக இருக்கிறார் என்று ஏ.வி.எம் கருதியதால் அவருக்கு மூன்று மாதம் கம்பெனியில் நல்ல சாப்பாடு கொடுத்து உடம்பைத் தேற்றி எடையை அதிகரித்து தோற்றப்பொலிவை கூட்டினர்.
தண்டாயுதபாணி பிள்ளை பரத நாட்டியம் கற்றுக்கொடுத்து அரங்கேற்றமும் நடைபெற்றது. அதிமுக கட்சி தொடங்கியபோது எம்.ஜி.ஆர் லதாவிடம், ‘‘நீ கட்சிக்கு என்ன செய்ய போகிறாய்’’ என்று கேட்டார் பிறகு ‘‘நீ நாட்டிய நாடகம் நடத்து’’ என்றார். சகுந்தலை நாடகத்தை லதா நாட்டியமாக மேடையில் அரங்கேற்றினார். திருச்சி கோவை பவானி மதுரை ஆகிய ஊர்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்தி அதிமுக கட்சிக்காக முப்பத்தைந்து லட்சம் ரூபாய் நிதி திரட்டிக்கொடுத்தார். எம்.ஜி.ஆரால் ஒரு நடிகையாக வார்த்து எடுக்கப்பட்ட லதா தொடர்ந்து அ.தி.மு.க கட்சிக்கும் தொண்டாற்றும் வகையில் அந்தப் பயிற்சிகள் அவருக்கு உறுதியான அஸ்திவாரத்தை அமைத்துத் தந்தன.
மிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. திருமணத்துக்குப் பின் நடிப்பிலிருந்து ஓதுங்கி விட்டார். தற்போது கடந்த ஐந்தாண்டுகளாக அவர் இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார். சமீபத்தில் நடிகை கஸ்தூரி சி.எஸ்.கே. போட்டி குறித்து மேற்கோள் காட்ட எம்.ஜி.ஆர் லதாவை சர்ச்சையான வகையில் பேசினார்.சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா போட்டி குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் ‘‘என்னய்யா இது. ‘பல்லாண்டு வாழ்க’ படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’’ என்று ஒரு சர்ச்சையான டுவீட்டை பதிவு செய்தார். இதற்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் நடிகை லதா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சங்கம் நடிகை கஸ்தூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ‘‘மூத்த கலைஞர்களை கொச்சைப்படுத்துவதும் அவமதிப்பதும் தவறு. நீங்கள் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என கூறப்பட்டுள்ளது. தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கஸ்தூரி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
லதா-இயற்பெயர் நளினி. எம்.ஜி.ஆர் தான் நளினியை லதாவாக்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என்று சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளவர். நடித்து வருபவர்.
பரதநாட்டியத்தில் பெயர் கிடைத்த நிலையில் நாட்டிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்துகொண்டிருந்த லதாவை எம்.ஜி.ஆர்; தான் தயாரித்து இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் 1973-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தார். அதிலிருந்து உரிமைக்குரல், மீனவ நண்பன், சிரித்து வாழ வேண்டும், நீதிக்குத் தலை வணங்கு, நாளை நமதே உள்ளிட்ட எம்.ஜி.ஆர் நடித்த கடைசிப்படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரை 20 படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்துச் சாதனை படைத்தவர். எம்.ஜி.ஆரின் கடைசிக் கதாநாயகியும் இவரே. எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தவர் என்பதால் இப்போதும் இவரை பார்ப்பவர்கள் இவருக்குத் தனி மரியாதை அளிப்பதுண்டு.
1982-இல் ‘தெய்வத் திருமணங்கள்’ படத்தில் நடித்து முடித்த நிலையில் சிங்கப்பூரில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த சபாபதி என்பவருக்கும் லதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பின் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு சிங்கப்பூரிலேயே கணவருடனிருந்தார். இத்தம்பதியருக்கு கார்த்திக், சீனிவாஸ் என்ற இரு புதல்வர்கள். சிறிய இடைவெளிக்குப்பின் 1986-இல் இவரது தாயார் இறந்தபின்னர் மீண்டும் சென்னைக்கு வந்தவர் ராஜ்கிரண் இயக்கி நடித்த ‘பொன்னு விளையற பூமி’ படத்தில் மறு பிரவேசம் செய்தார். அதிலிருந்து கோடீஸ்வரன், மனசுக்குள் வரலாமா, ரெட்டை ஜடை வயசு போன்ற பல படங்களில் நடித்தார்.
திரையுலகில் இவரது நெருங்கிய தோழிகள் காலஞ்சென்ற நடிகை மஞ்சுளாவும் சந்திரகலாவும்.
தினத்தந்தி 21.3.1997-இலிருந்து எடுக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.
“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் 3 கதாநாயகிகள். மஞ்சுளா, சந்திரகலா, லதா ஆகிய மூவரில் மஞ்சுளா எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரனில் அறிமுகம் ஆனவர். சந்திரகலா, சிவாஜி நடித்த “பிராப்தம்” படத்தின் மூலம் பட உலகில் காலடி எடுத்து வைத்தார்.
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லதா, “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் நடித்தது எப்படி?
லதாவே கூறுகிறார்:-
“என் தாயார் லீலாராணி, சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் கான்வென்டில் படித்தவர். என் தந்தை ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சுதேச சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, ஆட்சிப்பொறுப்பை மத்திய அரசே ஏற்றது. அந்தக் காலக்கட்டத்தில், ராஜாஜி மந்திரிசபையிலும், காமராஜர் மந்திரிசபையிலும் என் தந்தை அமைச்சர் பதவி வகித்தார்.என் பெரியம்மா கமலா கோட்னீஸ், இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
எனக்கு ஒரு அக்கா; 3 தம்பிகள்; ஒரு தங்கை. என் அக்காவும், நானும் சென்னை ஹோலிகிராஸ் கான்வென்டில் படித்தோம்.
நான்கு வயதிலேயே, எனக்கு நடனம் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டில் ரேடியோவில் கேட்கும் பாட்டுக்கு நானாக ஆடுவேன். பெரியம்மா நடிகையாக இருந்ததால், நான் நடனம் ஆடுவதை அவர் உற்சாகப்படுத்தனார்.
பெரியம்மா அதோடு நின்று விடாமல், பிரபல நடனக் கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி நான் நடனம் கற்க ஏற்பாடு செய்தார். பெரியம்மா வீடு, அப்போது தி.நகரில் இருந்தது. அங்குதான் மாஸ்டர் வந்து எனக்கு நடனம் கற்றுத் தருவார்.
சினிமாவில் எனக்கு அப்போது பிடித்த ஒரே நடிகை பத்மினி. அவர் நடனம் என்றால் எனக்கு உயிர். பத்மினி நடித்த படம் பார்த்தால், அன்று முழுக்க படத்தில் அவர் ஆடியபடியே ஆட வீட்டில் முயன்று கொண்டிருப்பேன்.
என் அக்காவுக்கு நடனம் என்றால் ஆகாது. மாஸ்டரை பார்த்ததும் ஓட்டம் பிடித்து விடுவாள்!
நடனத்தில் தேர்ந்ததும், பள்ளி விழாக்களில் நடனம் ஆடத் தொடங்கினேன். நடனத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதல் பரிசை பெறும் மாணவியாக இருந்ததால், பள்ளியிலும் எனக்கு நல்ல பெயர். அந்த அளவுக்கு எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பேன்.
அக்கா எனக்கு நேர் எதிர். எந்த நேரமும் அரட்டைதான். இதனால் படிப்பில் பின்தங்கிப்போன அக்கா, தேர்வில் பெயிலாகி என் வகுப்பிலேயே வந்து சேர்ந்து கொண்டார். நான் முன் பெஞ்சில் அமைதியின் வடிவாகவும், அக்கா பின்பெஞ்சில் அரட்டைத் திலகமாகவும்
அறியப்பட்டோம்.சினிமாவுக்குப் போன அனுபவம்
அம்மா எங்களிடம் பாசம் காட்டிய அளவுக்கு கண்டிப்பாகவும் இருந்தார். பள்ளியில் எங்காவது சுற்றுலா அழைத்துச் சென்றால்கூட பாதுகாப்பு கருதி அம்மாவும் எங்களுடன் வந்திருக்கிறார்.
ஒருமுறை பள்ளியில் `ஹெர்குலிஸ்’ என்ற ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றார்கள். படம்தானே என்று அம்மாவிடம் சொல்லவில்லை. எங்களைக் காணாமல் தேடித் தவித்த அம்மாவுக்கு, அப்புறம்தான் நாங்கள் பள்ளியில் இருந்து படம் பார்க்கப்போன விஷயம் தெரிந்திருக்கிறது. வீட்டுக்குப் போனதும் அம்மா அடி பின்னிவிட்டார். அம்மாவுக்கு தகவல் தெரிவிக்காமல் படம் பார்க்கப் போனதால் ஏற்பட்ட கோபம், அம்மாவை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டுபோய் விட்டது. எங்களை எப்படி கண்டிப்பாக வளர்த்திருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேன்.பத்தாவது படிக்கும்போது `கதக்’ நடனமும் கற்றுக்கொண்டேன். கிருஷ்ணகுமார் மாஸ்டர்தான் கற்றுக்கொடுத்தார். நடனப் பள்ளியில் தேறியபோது, ராமராவ் கல்யாண மண்டபத்தில் நடனமாடினேன். பரதம், கதக் ஆடியதோடு வெரைட்டியாக சில நடன வகைகளையும் ஆடிக்காட்டினேன்.
நடனம் சிறப்பாக நடந்து முடிந்தது. அத்தோடு அதை மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்தது. நான்தான் எடுத்துப் பேசினேன். எதிர் முனையில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பேசினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், “சினிமாவில் நடிப்பாயா?” என்று கேட்டார். நான், `நடிப்பதாக இல்லை’ என்று சொல்லி, போனை வைத்து விட்டேன்.அப்போது எங்கள் வீடு அடையாறு போட் கிளப்பில் இருந்தது. மறுநாள் மாலை நான் பள்ளிக்கு போய்விட்டு வீடு திரும்பியபோது, பிளைமவுத் காரில் வந்து இறங்கினார், மனோகர். வந்தவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அம்மாவிடம் “எம்.ஜி.ஆர். தனது படத்தில் உங்கள் மகளை அறிமுகப்படுத்த விரும்புகிறார்” என்று சொன்னார். அம்மா முகத்தில் அதிர்ச்சி.
.'கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கல' - நடிகை லதா கண்டனம்
நேற்று முன்தினம் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் குறித்து நடிகை கஸ்தூரி ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகை லதா கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....
"எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..? கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்.
அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி. இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
.
No comments:
Post a Comment