RAIN DROPS LYRICS
RAIN DROPS LYRICS
அடக்க முடியாத கவலைகள்…
அழ வைக்கும் அவமானங்கள்…
தொடரும் துரோகங்கள்…
குடும்பத்தின் சண்டைகள்…
சொந்தங்களின் உதாசீனங்கள்…
வேலை பார்க்கும் இடத்தின் வஞ்சகங்கள்…
கொடுக்கமுடியாத கடன் தொகைகள்…
மறக்க இயலாத இழப்புகள்…
இவற்றை எல்லாம் அள்ளி
மூட்டைக் கட்டி
பரணில் போட்டுவிட்டு…
கொண்டாட்டத்துடனும்…
குதூகலத்துடனும்…
உற்சாகமாய் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும்
சாரல் மழைத்துளிகளை
கொஞ்சம் ரசிக்க வாருங்கள்…
முழுதாய் உங்களை
அதன் அழகில் கரைத்து விடுங்கள்…
ஒவ்வொரு துளியையும்
விழிகளுக்குள் நிரப்பி மகிழுங்கள்…
ஏனென்றால்
உங்கள் புலம்பல்கள் என்றுமே தொடர்பவை…
முடிவற்றவை அல்ல…
இந்த மழைத்துளிகள் அப்படியல்ல…
இன்று இப்பொழுது
மண்ணில் சந்தோசமாய்
நடனமாடிக் கொண்டிருக்கும் இவை…
மீண்டும் எப்பொழுது வரும் என்பது
யாருக்கும் தெரியாது…
அதனால் உங்களுக்காக இருக்கின்ற நொடிகளை
நீங்களே இன்பமாக்கிக் கொள்ளுங்கள்…
இந்த வாழ்க்கையை
புரிந்துகொண்டு வாழ முயற்சிப்பதை விட
வாழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்…
பின் எல்லாம் சுகமே….
Comments
Post a Comment