SONAKSHI SINHA ,HINDI ACTRESS
BORN 1987 JUNE 2
சோனாக்சி சின்கா (Sonakshi Sinha) (பிறப்பு: 2 ஜூன் 1987) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் சத்ருகன் சின்கா மற்றும் பூனம் சின்கா ஆகியோரின் மகளாவார். முதலில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த இவர் பின்னர் தபாங் எனும் திரைப்படத்தில் 2010 ஆம் ஆண்டில் நடித்தார். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு ப்லிம் ஃபேர் விருது உள்ளிட்ட சில விருதுகள் வழங்கப்பட்டன.[1]
இளமைப் பருவம்
உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் பாட்னா நகரில் பீகாரி சத்ரிய குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்களும் திரைப்படத் துறையினைச் சார்ந்தவர்கள் ஆவார். பெற்றோரின் மூன்று குழந்தைகளில் இவர் கடைசிக் குழைந்தையாவார். இவரது தந்தையார் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். ஆர்யா வித்யா மந்திர் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியையும் பின்னர் ஆடை வடிவமைப்பாளர் கல்வியை ப்ரேம்லீலா விதல்தாஸ் (Premlila Vithaldas Polytechnic) பட்டயக் கல்லூரியிலும் முடித்தார்.
திரைப்படத்துறை
2005 ஆம் ஆண்டில் மேரா தில் லேகே தேக்கோ (Mera Dil Leke Dekho) திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். பின்னர் 2010 ஆம் ஆண்டில் தபாங் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிப்பதற்காக தனது எடையில் 30 கிலோகிராம்களை இழந்தார். அத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விருதினையும், பரவலாக கவனத்தினை அடைந்தார். 2011 ஆம் ஆண்டில் எந்தவித திரைபப்டத்திலும் நடிக்கவில்லை. பின்னர் 2012 ஆம் ஆண்டில் பிரபுதேவாவின் இயக்கத்தில் ரவுடி ரத்தோர் திரைப்படம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களில் நடித்தார். ரவுடி ரத்தோர் திரைப்படம் வெளியான அன்றே 15 கோடி வசூலாகியது. இவர் நடித்த மூன்றாவது திரைப்படமான சன் ஆஃப் சர்தார் (Son of Sardar)
அஸ்வினி திர் தயாரிப்பில் உருவானது. இதில் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்திருந்தார். இத்திரைப்படம் வெற்றிபெறாவிட்டாலும் விமர்சகர்களின் கவனத்தினை ஈர்ந்தது. மேலும் வணிகரீதியிலான வெற்றியையும் அடைந்தது. மேலும் ரைஸ் ஆஃப் த கார்டியன்ஸ் (Rise of the Guardians) திரைப்படத்தின் மொழிமாற்றுப் பணியில் இவர் குரல் கொடுத்திருந்தார். மேலும் இவர் மிலன் லூத்ரியா (Milan Luthria) இயக்கத்தில் அக்ஸய் குமாருடன் இணைந்து நடித்த ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் மும்பை தோபாரா! (Once Upon a Time in Mumbai Dobaara!) திரைப்படம் வணிக ரீதியில் தோல்வியடைந்தது. மற்றுமொரு திரைப்படமான புல்லட் ராஜா (Bullett Raja) திரைப்படமும் வணிக ரீதியில் தோல்வியடைந்தது. இத்திரைப்படத்தில் சைஃப் அலி
கானுடன் இணைந்து நடித்திருந்தார். பின்னர் சாகித் கபூருடன் இணைந்து நடித்த பிரபுதேவா இயக்கிய ஆர்...ராஜ்குமார் (R... Rajkumar) திரைப்படம் ஓரளவிற்கு வணிரீதியிலான வெற்றியை ஈட்டியது. 2014 ஆம் ஆண்டில் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படமான ரியோ 2 திரைப்படத்திற்கு குரல் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். மேலும் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ஹாலிடே: எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டியூட்டி (Holiday: A Soldier Is Never Off Duty) எனும் திரைப்படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்திருந்தார்.
தமிழ் மொழியில்
இந்தி மொழித் திரைப்படங்களில் நடிகையான போதும் தமிழ்த் திரைப்படத்திலும் இவர் நடித்தார். 2014 ஆம் ஆண்டும் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் இவர் நடித்தார். இது இவரது முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.
விலங்குகள் நல ஆர்வலர்
சோனாக்சி சின்கா விலங்குகள் நல ஆர்வல அமைப்பான பீட்டாவுடன் இணைந்து செயல்படுபவர் ஆவார். பீட்டா அமைப்பு தயாரித்த நாய்களையும் பூனைகளையும் தத்தெடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் தோன்றினார்.
நாய்கள் கொலை: கேரள முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த சோனாக்ஷி சின்ஹா!
.
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள முதலைமச்சர் உம்மன் சாண்டிக்கு ட்விட்டர் ஒன்றை போட்டுள்ளார்.
அதில் கேரளாவில் தெரு நாய்களை கொலை செய்வதை தடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சருக்கு அவர் கொடுத்துள்ள ட்வீட்டில் ’இந்த மனிதநேயமற்ற செயலை தயவு செய்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சோனாக்சி சின்ஹாவின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் உம்மன் சாண்டியை ட்விட்டரில் இணைத்து விஷயத்தை பரப்ப வேண்டும் என கேட்டு வருகிறார்கள். இதே போல் நடிகர் விஷால் சில நாட்களுக்கு முன்பு இந்த நாய்கள் கொலைக்கு எதிராக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் தெருக்களில் உள்ள நாய்கள் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கின்றன என அவைகளை கொடூரமாக கொலை செய்து வருகிறார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், சமூக வலைகளில் எதிர்ப்புகள் நடந்து வருகின்றன. இதற்கு விஷால் சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, தினமும் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள வன விலங்கு பூங்காவில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 புலிகளுக்கும், 3 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிவதாகவும் வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் பயந்துபோன பலர் தங்கள் வீடுகளில் வளர்த்த நாய், பூனைகளை சாலைகளில் விரட்டி விடுவதாக சமூக வலைத்தளத்தில் பலர் புகைப்படங்களோடு வெளியிட்டனர். இதனை ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா கண்டித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “செல்லப்பிராணிகளால் கொரோனா பரவுகிறது என்ற தகவலை நம்பி தங்கள் நாய், பூனைகளை வெளியேற்றுபவர்கள் முட்டாள்கள். உங்கள் அறியாமையையும், மனிதநேயமற்ற இதுபோன்ற செயல்களையும் கைவிடுங்கள். கொரோனாவை நாய்கள் பரப்புவது இல்லை. விலங்குகளிடம் அன்பு காட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்தி முன்னணி நடிகர் சல்மான்கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘தபாங் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 24.5 கோடி வசூல் செய்தது. எனினும் குடியுரிமை திருத்த சட்டத்தால் ‘தபாங் 3’ திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகி சோனாக்சி சின்கா கூறியதாவது:- ‘நாட்டில் என்ன நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும், எது முக்கியம் என்று மக்களுக்கு தெரியும், நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் ஒரு திரைப்படத்தை விட முக்கியமானது’ என கூறியுள்ளார்.
மேலும் போராட்டம் குறித்து கேள்வி கேட்ட போது, ‘நான் இந்த நாட்டு மக்களுடன் இருக்கிறேன். அவர்களது உரிமை குரலை நீங்கள் பறிக்க முடியாது’ எனவும் கூறியுள்ளார். சோனாக்சி சின்கா, முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்காவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment