Posts

Showing posts with the label SONAKSHI SINHA

SONAKSHI SINHA ,HINDI ACTRESS BORN 1987 JUNE 2

Image
SONAKSHI SINHA ,HINDI ACTRESS  BORN 1987 JUNE 2 சோனாக்சி சின்கா (Sonakshi Sinha) (பிறப்பு: 2 ஜூன் 1987) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் சத்ருகன் சின்கா மற்றும் பூனம் சின்கா ஆகியோரின் மகளாவார். முதலில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த இவர் பின்னர் தபாங் எனும் திரைப்படத்தில் 2010 ஆம் ஆண்டில் நடித்தார். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு ப்லிம் ஃபேர் விருது உள்ளிட்ட சில விருதுகள் வழங்கப்பட்டன.[1] இளமைப் பருவம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் பாட்னா நகரில் பீகாரி சத்ரிய குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்களும் திரைப்படத் துறையினைச் சார்ந்தவர்கள் ஆவார். பெற்றோரின் மூன்று குழந்தைகளில் இவர் கடைசிக் குழைந்தையாவார். இவரது தந்தையார் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். ஆர்யா வித்யா மந்திர் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியையும் பின்னர் ஆடை வடிவமைப்பாளர் கல்வியை ப்ரேம்லீலா விதல்தாஸ் (Premlila Vithaldas Polytechnic) பட்டயக் கல்லூரியிலும் முடித்தார். திரைப்படத்துறை 2005 ஆம் ஆண்டில் மேரா தில் லேகே தேக்கோ (Mera Dil Leke Dekho) திரைப்படத்த...