Posts

Showing posts with the label Vilas

Lakshmi Vilas Bank

Image
  Lakshmi Vilas Bank மொரட்டோரியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தில் ரிசர்வ் வங்கி இறுதிக் கட்டப் பணிகளில் இறங்கியுள்ளது. விரைவில் இவ்விரு வங்கிகளும் இணைக்கப்படவுள்ளன. லட்சுமிக்கு என்ன ஆச்சு? சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கி, நாட்டின் பல்வேறு இடங்களில் 566 வங்கிக் கிளைகளையும், 918 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லட்சுமி விலாஸ் வங்கி மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி பெரு நிறுவனங்கள் துறைக்கும் கடன் வழங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கியது. லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்தது. களத்தில் இறங்கிய ரிசர்வ் வங்கி! லட்சுமி விலாஸ் வங்கிக்கு வாராக் கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியது. இவ்வங்கியின் டெபாசிட் தொகை ரூ.31,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாகக் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ...