MGR SHAKED HANDS TO PUBLIC - BLOOD FROM NAILS OF OTHERS
MGR SHAKED HANDS TO PUBLIC - BLOOD FROM NAILS OF OTHERS எம் ஜி ஆர் கரங்களில் ரத்தக் கீறல்கள் ANTHUMANI -JEEVAKARULLA _________ "எம்ஜிஆர் என்ற மகா மனிதனைச் சந்தித்தேன்" எனும் தலைப்பில் வார இதழ் ஒன்றில், "சந்தித்தேன்- சிந்தித்தேன்" தொடரில் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அந்த படைப்பு சமூக வெளியில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. 1980-ஆம் மே மாதத்தில் ஆற்காடு முதலி தெருவில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். 1977-ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் 3 ஆண்டுகளுக்குள்ளேயே மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்னர்1980 மே மாதவாக்கில் தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை சந்திப்பதில் எம்ஜிஆர் படு சுறுசுறுப்பாக இருந்த காலகட்டம் அது. "ஆட்சி பறி போய்விட்டது. தேர்தலைச் சந்திக்கிறோம். ஆட்சியை மீட்போமா?" என்ற கவலை இல்லாமல் எம்ஜிஆர் மிகுந்த நம்பிக்கையோடு இருந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் தினமலர் செய்தியாளனாக நான் களமாடிக் கொண்டிருந்தேன். தேர்தல் பிரச்சாரப...