MAMTA MOHANDAS ,ACTRESS /SINGER BORN 1985 NOVEMBER 14
MAMTA MOHANDAS ,ACTRESS /SINGER BORN 1985 NOVEMBER 14 மம்தா மோகன்தாஸ் (Mamta Mohandas) இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2006இல் தெலுங்கு படத்திற்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதினையும், 2010இல் மலையாளப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றுள்ளார். இரண்டாவது துணை நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதினை 2010இல் பெற்றுள்ளார். இளமைப் பருவம் மம்தா மோகன்தாஸ் கேரள மாநிலம், கன்னூரை பூர்வீகமாகக் கொண்ட மலையாளக் குடும்பத்தில், அம்பாலபட் மோகன்தாஸ் - கங்காவிற்கு மகளாக நவம்பர் 14, 1984இல் பிறந்தார். 2002 வரை பஹ்ரைனிலுள்ள இந்தியன் பள்ளியில் படித்தார். இவர் பெங்களூரில் உள்ள "மவுன்ட் கார்மல் கல்லூரி"யில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் ஐபிஎம், கல்யாண் கேந்திரா, மைசூர் மகராஜா மற்றும் ரேமண்ட்ஸ் நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.[3][4] தொழில் மம்தா, ஹரிகரன் இயக்கத்தில் 2005...