அனுபமா ஒரு தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகி பிறப்பு செப்டம்பர் 2, 1968 அனுபமா ஒரு தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகி. ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு பாடல் தான் அனுபமா பாடிய முதல் திரைப்படப் பாடல் ஆகும். தில்லியில் கல்வி பெற்று தமிழகத்தில் கலைத் துறையில் ஈடுபட்ட அனுபமா அம்மையார் இந்தியாவில் மிகப் புகழ்பெற்ற பாடகி ஆவார். ஆஸ்கர் இசை பரிசு பெற்ற ஏ.ஆர்,ரஹ்மனுடன் நல்ல ஒத்துழைப்புறவைக் கொண்டுள்வராவார். 2013ஆம் ஆண்டு முதலாவது தெற்காசிய பொருட்காட்சியின் தலைப்புப் பாடலுக்கான தேர்வில் அவர் பாடிய வீ ஆர் சௌத் ஏசியா எனும் பாடல் வெற்றி பெற்றுள்ளது. அதே ஆண்டு சீனாவின் பண்பாடு மீது ஆர்வம் காட்டிய அவர் தொடர்ந்து சீன வானொலி நிலையம் நடத்திய கவர்ந்திழுக்கும் சீனா எனும் பொது அறிவுப் போட்டியில் கலந்து கொண்டார். சீன மொழியில் அவர் தியேன் மிமி மற்றும் மொ லி ஹுவா சிறப்புப் பரிசு பெற்றுள்ளது. அக்டோபர் திங்கள் அழைப்பின் பேரில் அனுபமா கணவருடன் சீனாவின் பெய்ஜிங் மற்றும் சி ஆன் நகரில் பயணம் மேற்கொண்டார் தமிழில் பாடிய பாடல...