Posts

Showing posts with the label mohamed ali

DIRECTION ACTION DAY , JINNAH EXECUTES REHEARSAL MURDERS,RIOTS AUGUST 16,1946

Image
DIRECTION ACTION DAY ,  JINNAH EXECUTES REHEARSAL  MURDERS,RIOTS AUGUST 16,1946 லீகுக்கு ஆதரவான நாளிதழ்களில் 16-ம் தேதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்​கான திட்டமிடல் வெளியானது. அதன்படி, அன்று இரண்டு மணிக்கு பெரிய பொதுக் கூட்டமும் பிரார்த்தனையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதையட்டி சிறப்புப் பேரணி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. நிலை​மையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு செய்யத் தொடங்கியது. அதே நேரத்தில், கடைகளைத் திறந்துவைத்து வழக்கம் போல வியாபாரம் செய்ய வேண்டும், முஸ்லிம் லீகின் மிரட்டலுக்கு நாம் பயந்துவிடக் கூடாது என்று இந்து விசுவாசிகளாக உள்ள காங்கிரஸ் உறுப்​பினர்கள் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டனர். ஒருவேளை, தாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுக்க மக்கள் படை தயாராக உள்ளது என்று காங்கிரஸ் பிரமுகர் பிரபுல்ல சந்திர கோஷ் அறிவித்தார். இதைக் கேட்டு முஸ்லிக் லீக் கடும்கோபம் அடைந்தது. திறந்துவைக்கப்படும் கடைகளைச் சூறையாடுவோம் என்று உணர்ச்சிவேகத்தில் அவர்களும் அறிவித்தனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தால், அரச...

ஒலிம்பிக் பதக்கத்தை ஒகியோ நதியில் தூக்கி எரிந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்த முகமது அலி

Image
ஒலிம்பிக் 1960 பதக்கத்தை ஒகியோ நதியில்  தூக்கி எரிந்து  உலகத்தின் கவனத்தை ஈர்த்த முகமது அலி  "வளையத்திற்குள் பட்டாம்பூச்சியாய் பறப்பேன். தேனீயாய் கொட்டுவேன்!  "பிறப்பால் பிரிவினையை உண்டாக்கும் நாட்டிற்காக  விளையாடி வென்ற பதக்கத்தை அணிய விரும்பவில்லை!  "என்றார். -  முகம்மது அலி 1940களில் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் சுகர் ரே ராபின்சன். இவர்தான் முகம்மது அலியின் ஆதர்சன நாயகனும் கூட. ஒருமுறை அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றார் அலி. ஆனால் சுகர் ரே, 'இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை...போ ' என்று எரிச்சல்பட நொந்துவிட்டார் அலி. தன்னைப் போல இனி எந்த சிறுவனும் மனம் நோகக்கூடாது என்று அன்று முடிவெடுத்தார் அலி. எத்தனை பிஸியாக இருந்தாலும், யார் எந்த சூழ்நிலையில் ஆட்டோகிராப் கேட்டாலும் மறுக்காமல் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.! 1960ல் நடந்த ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்ற அலி ஒரு அமெரிக்க ரெஸ்டாரண்டில் கருப்பினத்தவர் என்பதால் காபி தர மறுத்ததால் கடுப்பாகி ஒஹியோ நதியில் அந்த பதக்கத்தை  விட்டெறிந்தார். "பிறப்பால் ...

சென்னை ஷோ பைட் - முகமது அலிக்கு மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்

Image
சென்னை  ஷோ பைட் - முகமது அலிக்கு  மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்  நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக  இருந்தது உங்கள் அன்புதான் - முகமது அலி சென்னை வந்து ஷோ பைட் போட்டிகளில் கலக்கிய முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்  Boxer Muhammad Ali & Jimmy Ellis with CM MGR, jan 1980 "எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்..."என அலியிடம் கேட்டார்.  அதற்கு அலி,  “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம்  இப்படி ஒருவர்  அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது. ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமா...