Tuesday 20 September 2016

சென்னை ஷோ பைட் - முகமது அலிக்கு மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்

சென்னை  ஷோ பைட் - முகமது அலிக்கு  மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் 


நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக 
இருந்தது உங்கள் அன்புதான்
-முகமது அலி
















சென்னை வந்து ஷோ பைட் போட்டிகளில் கலக்கிய முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் 
Boxer Muhammad Ali & Jimmy Ellis with CM MGR, jan 1980


"எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்..."என அலியிடம் கேட்டார். 
அதற்கு அலி, 


“சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம்

 இப்படி ஒருவர்  அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.
ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

உணவு அருந்தியபின் உணவு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி,

 'எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்' என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்துநின்றாராம். 


முகமது அலியின் சென்னை விசிட் இப்படிதான் நெகிழ்வாக இருந்தது.
திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடும், வறுவலுமாக சென்னை மக்களிடமும், மக்கள் திலகத்திடமும் இருந்து பிரியாவிடை பெற்ற முகமது அலிக்கும் எம்ஜிஆருக்கும் இருந்த வினோத ஒற்றுமை இருவருமே ஜனவரி ல் பிறந்தவர்கள் என்பதுதான்!

No comments:

Post a Comment