ஆந்திர சிவாஜி நாகேஸ்வர ராவ்
பிறப்பு 1920 செப்டம்பர் 20
தொடர்ந்து 75 ஆண்டுகளாகப் பல்வேறு வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை தெலுங்கு மொழிக்கான பிலிம்பேரின் சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கிறார். இந்திய அரசின் பத்ம விபூசண், தாதாசாஹெப் பால்கே விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
நாகேசுவரராவ் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடாவுக்கு அருகில் உள்ள வேங்கடராகவபுரம் (இப்போது ராமாபுரம் என அழைக்கப்படுகிறது[4]) என்ற ஊரில்[5] அக்கினேனி வேங்கடரத்தினம், அக்கினேனி புன்னம்மா ஆகிய தம்பதியருக்கு ஐந்தாவது கடைசி மகனாக நாகேசுவர ராவ் பிறந்தார்.
இவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே தந்தை இறந்து விட்டார்.[3] சகோதரர்களும் தந்தையின் வேளாண்மைத் தொழிலைக் கவனித்து வந்தனர்.
நடிப்பு[தொகு]
நாகேசுவரராவ் தொடக்கப்பள்ளி வரையே படித்தார். பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நாடகங்களில் நடிப்பதற்கு இவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. சிறு வயதில் மிக அழகாக இருப்பார். இதனால் இஅவ்ருக்குப் பெண் வேடங்களே அதிகமாகக் கிடைத்தன.[6] பள்ளிப்படிப்பில் அக்கறை கொள்ளாமல் பொழுதுபோக்காக வெளியில் நடக்கும் நாடகங்கலிலும் நடித்து வந்தார். ஸ்தானம் நரசிம்மராவ் என்ற பிரபல நாடக நடிகருடன் சிறு சிறு பாகங்களை ஏற்று நடித்து வந்தார்.[3] தம்பியின் நாடக நடிப்பில் கிடைத்த புகழை எண்ணிப் பெருமைப் பட்ட அவரது தமையனார் அவரை திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர எண்ணினார்.
தர்ம பத்தினி என்ற திரைப்படத்தின் காட்சிகள் சில கோலாப்பூர் நகரில் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பைக் காண தமையனாருடன் சென்றார் நாகேஸ்வரராவ். படத்தில் ஒரே ஒரு நிமிடம் தோன்ற ஒருவர் தேவையாக இருந்தது. கூட்டத்தில் இருந்த நாகேசுவரராவ் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். இதுவே இவர் நடித்த முதலாவது திரைப்படம் ஆகும்.[3] அடுத்ததாக, சிறீ இராஜேசுவரி பிலிம் கம்பனி தயாரித்த தல்லி ப்ரேமா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டு சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனாலும் அவரது காட்சிகள் எதுவுமில்லாமலேயே இத்திரைப்படம் 1941 இல் வெளிவந்தது.[3]
அரிச்சந்திரா, கனகதாரா, விப்ரநாராயணா, தெலுகு தல்லி, ஆசைஜோதி, சத்யான் வேஷணம் ஆகியன இவர் நடித்த பிரபல நாடகங்களாகும்.[7].
திரை உலக பங்களிப்புகள்[தொகு]
நடிகராக[தொகு]
தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 256 படங்களில் நடித்துள்ளார்.
தேவதாசு, லைலா மஜுனு, அனார்க்கலி, பிரேமாபிசேகம், பிரேம நகர், மேக சந்தேசம் என்பன அவர் நடித்த பிரபல திரைப்படங்களில் சிலவாகும்[5].
தயாரிப்பாளராக[தொகு]
1956ல் ஆந்திர மாநிலம் அமைக்கப் பட முன்னதாக தெலுங்கு மொழிப் படங்கள் அப்போதைய மதராசு மாகாண தலை நகராக இருந்த சென்னையிலேயே தயாரிக்கப்பட்டன.
ஆந்திர மாநிலம் அமைந்த பின்னர் தெலுங்கு பட தயாரிப்பை ஐதராபாத்துக்கு மாற்ற வேண்டுமென பல தலைவர்கள் விரும்பினார்கள்.
1963ல் நாகேசுவர ராவ் தெலுங்கு பட தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது என ஐந்து அம்ச திட்டமொன்றை ஆந்திர மாநில அரசுக்கு கொடுத்தார். ஐதராபாத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் ஒரு திரைப்பட தயாரிப்பு கலைக்கூடத்தை உருவாக்கினார். அவரது மனைவி பெயரில் இந்த அன்னபூரணா ஸ்டூடியோ (Annapurna Studio) ஆகத்து 13, 1975ல் நிறுவப்பட்டது[8] .
நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு
ரஜினி நடித்த `பெத்தராயுடு'
வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்
தமிழில் வெளிவந்த "நாட்டாமை'' படம், தெலுங்கில் "பெத்தராயுடு'' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. 25 வாரங்கள் ஓடிய இப்படத்தின் வெற்றி விழாவில் ரஜினிக்கு பெரிய தங்கக்காப்பை பழம்பெரும் நடிகர் ஏ.நாகேசுவரராவ் அணிவித்தார்.
தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் "நாட்டாமை.'' இதில் கதாநாயகனாக சரத்குமாரும், அவருடைய தந்தையாக விஜயகுமாரும் நடித்தனர்.
ரஜினி யோசனை
தெலுங்கு நடிகர் மோகன்பாபு, ரஜினியின் நண்பர். அவர் தெலுங்கில் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார்.
"நாட்டாமை படம் நன்றாக இருக்கிறது. அதை தெலுங்கில் எடுக்கலாம்'' என்று ரஜினி யோசனை தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல; பட அதிபர் ஆர்.பி.சவுத்திரிக்கு போன் செய்து, நாட்டாமை கதை உரிமையை மோகன்பாபுவுக்கு வாங்கித்தந்தார்.
நண்பரின் கோரிக்கை
"தெலுங்குப் படத்தில் நீங்களும் நடிக்க வேண்டும்'' என்று ரஜினியிடம் மோகன்பாபு கேட்டுக்கொண்டார்.
"சரி. தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் நான் நடிக்கிறேன்'' என்று ரஜினி கூறினார்.
மோகன்பாபுவின் "ஸ்ரீலெட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ்'' பேனரில், "பெத்தராயுடு'' தயாராகியது. ரவிராஜா பின்னிரெட்டி டைரக்ட்செய்தார்.
பானுப்பிரியா, ஆனந்தராஜ் ஆகியோரும் நடித்தனர்.
வெள்ளி விழா
படம் 1995 ஜுன் 15-ந்தேதி திரையிடப்பட்டது.
25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
வெற்றி விழா
இந்தப்படத்தின் வெற்றி விழா, திருப்பதியில் நடந்தது. வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில், பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில், ஒரு லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
விருதுகள்[தொகு]
பத்மஸ்ரீ, 1968[8]
பத்ம பூசன், 1988[8]
ரகுபதி வெங்கையா விருது, 1989[5]
தாதா சாகேப் பால்கே விருது, 1990[8]
என்.டி.ஆர். தேசிய விருது, 1996[5]
பத்ம விபூசண், 2011[8]
இறப்பு[தொகு]
தமது 90வது அகவையில் புற்றுநோய் வாய்ப்புற்றிருந்த நாகேசுவரராவ்
2014 சனவரி 22, அன்று ஐதராபாதில் காலமானார்[9].
No comments:
Post a Comment