NAGESH நாகேஷ் , ஆசியாவின் சார்லி சாப்ளின்
பிறப்பு 1933 செப்டம்பர் 27 - 2009 JANUARY 31
நடிகர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மனதில் பதிவது என்பது அவ்வளவு பெரிய விஷயமல்ல. பாட்ஷா, வேலு நாயக்கர், அலெக்ஸ் பாண்டியன், etc etc. ஹீரோக்களுக்கு இது சரி, எத்தனை நகைச்சுவை நடிகர்களின் பாத்திரப்பெயர் நமக்கு நினைவில் இருக்கின்றது. அவ்வளவாக நினைவில் இருக்காது. ஏனென்றால நாம் அங்கு பார்ப்பது நகைச்சுவை நடிகர்களைத்தான், பாத்திரங்களை அல்ல. அதற்கு பெயர் அவ்வளவாக அவசியமில்லாதது. விதிவிலக்கு வெகு சிலர் நாகேஷ், வடிவேலு.
நாகேஷ் என்றவுடன் நினைவில் வருவது படங்களல்ல, தருமியும், வைத்தியும், ஓஹோ ப்ரொடெக்ஷன் செல்லப்பாவும்தான்.
இத்தனைக்கும் ஒரிஜினலுக்கும் சினிமாவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தும் சினிமாவில் இல்லாத காட்சியில் கூட நாகேஷ்தான் தெரிந்தார். அந்தளவிற்கு அதற்கு உயிரை கொடுத்திருக்கின்றார். வைத்தியாக நடித்துக் கொண்டிருக்கும் போது கேமராவிற்கு பின்னால் அவருக்கு இருந்த கஷ்டங்களை படிக்கும் போது அதனோடு எப்படி நடிக்க முடிந்தது என்று ஆச்சர்யமளிக்கின்றது.
இது போன்று பல விஷயங்களை கொண்ட தொகுப்பு நான் நாகேஷ் என்னும் இப்புத்தகம். நாகேஷின் வாழ்க்கை வரலாறு எல்லாம் அல்ல. நாகேஷுடன் அமர்ந்து கொண்டு அவரது பழங்கதைகளை பேசி, அதில் கிடைத்ததை வைத்து தேற்றியிருக்கின்றார்கள்.
குண்டுராவ் நாகேஷ், தாராபுரத்தில் பிறந்து வளர்ந்த கன்னட பிராமணர். அப்பா ரயில்வே உத்தியோகஸ்தர், நாகேஷும் ரயில்வே க்ளார்க். அலுவலக நாடகத்தில் சிறு வேடத்தில் நடிக்க ஆரம்பித்து, சினிமாவில் நுழைந்து தனி இடத்தை பிடித்தவர்.
நகைச்சுவையுணர்ச்சி இயல்பாக இருக்க வேண்டும், பயிற்சியினால் எல்லாம் வராது. நாகேஷின் இயல்பான குறும்புதான் அவருக்கு அப்படிப்பட்ட ஸ்கீரின் ப்ரெசென்ஸை தந்திருக்கின்றது. விடுமுறை தர மறுத்தவரை கடுப்படிக்க உள்ளாடைகளுடன் அலுவலகத்திற்கு செல்வது, தாலுகா ஆபிசில் அமர்ந்து கொண்டு, செய்யாத வேலைக்கு ராஜினாமா தருவது என்று குசும்பு கொப்பளிக்கும் ஆசாமியாகவே இருந்திருக்கின்றார்.
நாம் பார்க்கும் நாகேஷின் முகத்திற்கு பின்னால் இருப்பது மூன்று முறை அடுத்தடுத்து தாக்கிய அம்மையின் திருவிளையாடல். அந்த தாழ்வுணர்ச்சி அவரிடம் பல காலம் இருந்திருக்கின்றது. அதை மீறி வென்றது அவருக்குள் இருக்கும் கவலையில்லாத மனிதன்.
எதற்கும் துணிந்த, கவலைப்படாத, சரி என்று பட்டதை செய்யும் குணம். அந்த தைரியம் இருந்ததால்தான், சாதரண வயிற்றுவலிக்காரனாக வந்து "வயிறு வலிங்க" என்னும் ஒரு வரி வசனத்தை பேச வேண்டிய காட்சியை, தயங்காமல் விஸ்தாரித்து, சிறந்த நடிகர் பரிசையும் தட்டி செல்ல முடிந்தது. அதுவும் எம்.ஜி.ஆரிடம் இருந்து. அதே தைரியம்தான் "நீ புது நடிகன், பெரிய நடிகரோடு நடிக்கிறோம்னு பயப்படாம நடி" என்ற சிவாஜியிடம் "புது நடிகனோட நடிக்கிறோம்னு நீங்க உங்க நடிப்ப கோட்ட விட்டுடாதீங்க" என்று கூற வைத்துள்ளது.
நாகேஷை உருவாக்கியது பாலச்சந்தர் என்ற ஒரு பிம்பம் உண்டு, ஆனால் கே.பிக்கு முன்னரே அவர் பல நாடகங்களில் நடித்துள்ளார் என்பதும், திரைப்படத்தில் முக்கிய வேஷத்தை தந்து ஒரு புதிய பாதையை அமைத்தவர் ஶ்ரீதர் என்பதும் புதிய தகவல்கள்.
நாகேஷ் என்ன செய்தார், இயக்குனர் சொன்னதை செய்தார், நடித்தார் என்று கூறலாம். ஆனால் இயக்குனரையும் மீறி பல இடங்களில் அவரது சொந்த சரக்கும் உள்ளது. தருமியின் பல வசனங்கள் அவரது சொந்த வசனங்கள். "அவனில்லை அவன் வரமாட்டான்", வைத்தி பேசும் "மெயினே சும்மா இருக்கு, சைடு நீ ஏம்பா துள்ற" இது எல்லாம் அவரது சொந்த சரக்கு. சிவாஜியுடனான அவரது உரையாடல் அப்படியே சர்வர் சுந்தரத்திலும் இருக்கும், சிவாஜிக்கு பதில் மனோரமா.
நாகேஷுக்கு பொருத்தமானது நகைச்சுவை பாத்திரங்களும், சாதரணர் பாத்திரங்களும்தான். சோக பாத்திரங்கள் என்றால் கொஞ்சம் அதிகமாகவே பிழிந்துவிடுவார். சும்மா இல்லாமல் அவரை அம்மாதிரி பாத்திரங்களில் நடிக்க வைத்து கொஞ்சம் வீணடித்து விட்டனர். நடுவே மதுவால் துவண்டு மீண்டு வந்தும் கலக்கியுள்ளார். அதைப் பற்றி அவர் கூறுவது, அவருக்கும் ஒரு பெண்ணிற்குமான உரையாடல்
"நாகேஷா நீங்கதான் போய்ட்டீங்களாமே"
"உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தேன், இப்போ எல்லாம் சரியாடுச்சி"
"அதான் நீங்க போய்ட்டீங்கனு பேப்பர்க்காரனே போட்டுட்டானே"
நிஜ வாழ்க்கையில் கற்பனையை விட சுவாரஸ்யமான நகைச்சுவை கிட்டும்.
கட்டுரைகளுக்கு தொடர்ச்சி எல்லாம் ஏதுமில்லை. துண்டு துண்டான விஷயங்கள். கல்கியில் தொடராக வந்தது. ரஜினி கமல் இல்லாமல் சினிமா ஏது, அதனால் அவர்களை பற்றி இரண்டு பகுதிகள். ஜெயகாந்தனை பற்றி ஒரு பகுதி, பல பிரபலங்களை பற்றிய விஷயங்கள் என்று போகின்றது. சில விஷயங்கள் போரடித்தாலும், பல சுவாரஸ்யமானவை. குறை என்றால் கட்டுரைகளை சரியாக முடிக்காததுதான். ஒரு விஷயத்தை படித்தால் ஏதாவது மனதில் தோன்ற வேண்டும், பல கட்டுரைகளை படித்தால், "அப்படியா அதுக்கு என்ன இப்போ" என்றுதான் தோன்றுகின்றது.
நாகேஷ் என்னும் ஒரு மனிதனை முழுவதும் தெரிந்து கொள்ள இது உதவாது. நாகேஷ் பற்றி சில தகவல்களை, சினிமாதாண்டிய நாகேஷை, சினிமா உலகை பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
” நான் சிவாஜிக்கு அடுத்து நாகேஷிடமிருந்துதான் அதிகம் கற்றுக்கொண்டேன். ஒருவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைவிட அவர் விஷயம் உள்ளவர் என்று தெரிந்தால் அவரை மதிக்கத் தெரிந்தவர் நாகேஷ். பாராட்டு, ஷீல்டு இதிலெல்லாம் அவருக்கு ஆர்வமில்லை. இவை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டவற்றில் சில. அவரது உடலைப் பார்த்துவிட்டு ஐந்து நிமிடம்தான் அழுதிருப்பேன்.
அப்புறம் அவரது அற்புதமான நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வர பக்கத்தில் இருந்தவர்களுடன் அவற்றை நினைவுகூர்ந்து மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன். இதுபோல வேறு யாருக்குச் சாத்தியம்? இப்போது இருக்கிறாரே, அந்த உயிரற்ற உடல்போலக்கூட மிகவும் தத்ரூபமாக என் படத்தில் நடித்திருக்கிறார். நம்மவர் படத்தில் அவருடன் நடித்தது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம். அவருக்காக நான் எழுதிய காட்சிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்ததும், அதற்காக நாகேஷுக்குச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததிலும் எனக்குதான் பெருமை.”
கமல்ஹாசன் என்னிடம் இப்படி நாகேஷ் பற்றி நெகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்த இடம், சென்னை பெசன்ட் நகர் மின் தகன மையம். நாகேஷின் வீட்டிலிருந்து புறப்பட்ட அவரது இறுதி ஊர்வலம் இன்னும் பெசன்ட் நகர் வந்தடையவில்லை. ஏற்கனவே அங்கே வந்து காத்துக்கொண்டிருந்தார் கமல். “இது பேட்டி காண்பதற்கான இடமோ, தருணமோ இல்லை. ஆனாலும், அடுத்த இதழ் கல்கியில் “நாகேஷ்: சிரிப்பு சூப்பர் ஸ்டார் ” என்று ஒரு கவர் ஸ்டோரிக்குத் திட்டமிட்டிருக்கிறோம்.
அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன்” என்றபோது கமல் ரொம்ப கேஷுவலாக “நீங்கள் கேட்கவில்லையென்றாலும்கூட நான் இங்கே நாகேஷ் பற்றிதான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்திருப்பேன்” என்று சொல்லிவிட்டுச் சொன்ன விஷயங்கள்தான் இவை.
நாகேஷ் தன் வாழ்க்கையைப் பற்றி இந்த உலகத்திலேயே என்னிடம்தான் ரொம்ப விரிவாகப் பேசி இருக்கிறார் என்று நான் பெருமையுடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள முடியும். சினிமா மூலம் கோடிக்கணக்கானவர்களைச் சிரிக்கவைத்த, சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிற நாகேஷ் சொந்த வாழ்க்கையில் பட்ட அவமானங்கள், வேதனைகள், ரணங்கள், சந்தோஷங்கள், சவால்கள் என்று சகலமான விஷயங்களையும் அவரே என்னிடம் சொல்ல, அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு வருடத்துக்கு வாராவாரம் கல்கியில் தொடராக எழுதியது எனக்குக் கிடைத்த அரிய பாக்கியம்.
கல்கியில் அவரது வாழ்க்கை அனுபவங்களை எழுதலாம் என்ற நோக்கத்துடன் அவரைச் சந்தித்துப் பேசியபோது, சுமார் ஒரு மணிநேரம் நிறைய பேசிவிட்டு “இவற்றையெல்லாம் எதற்காகப் பத்திரிகையில் எழுதவேண்டும்? அதனால் யாருக்கு என்ன பயன்? ” என்று ஒரு போடு போட்டார். நானும் உடன் வந்திருந்த புகைப்படக்காரர் யோகாவும் அரை மணி நேரம் பேசி அவரைச் சம்மதிக்கவைத்தோம்.
அதன்பிறகு ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவர் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. பழைய விஷயங்களை நகைச்சுவை கொப்பளிக்கத் தேர்ந்த ரசனையுடன் குரலில் ஏற்ற இறக்கம் கொடுத்து அவர் மீண்டும் நினைவு கூரும்போது என்னை மறந்து சிரித்துவிடுவேன்.
நாகேஷின் இயற்பெயர் நாகேஸ்வரன். அப்பா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரிசிக்கரே என்ற ஊரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். குடும்பம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் வசித்தது. அப்பா ரொம்பக் கண்டிப்பான மனிதர். வீட்டில் நாகேஷுக்குச் செல்லப்பெயர் குண்டு ராவ்.
எஸ்.எஸ்.எல்.சி. முடித்த கையோடு கோவை பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் இன்டெர்மீடியட் சேர்ந்தார். இரண்டாவது வருடப் பரீட்சைக்குச் சில நாள்கள் முன்பாகக் கடும் அம்மை தாக்கியது. அது குணமடையும் தருவாயில் இரண்டாவது தாக்குதல். அடுத்து மூன்றாம் தடவையும் தாக்கியது. பிழைத்ததே பெரிய விஷயம்தான். பால் வழியும் முகத்தில் அம்மை தனது ஆட்டோகிராஃபைக் கிறுக்கிவிட்டுப் போனது. மனம் வெறுத்த நாகேஸ்வரன் வீட்டை விட்டு வெளியேறினான்.
இலக்கிலா வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. பலவிதமான வேலைகள். ஹைதராபாதில் ஒரு கூலித் தொழிலாளியாகக்கூட வேலை பார்த்திருக்கிறார். நாகேஷின் டான்ஸ் மூவ்மென்ட்களைத் திரையில் பார்த்து பிரமித்துச் சிரிக்கிறோமே, அதற்குப் பின்னால்கூட ஒரு கதை இருக்கிறது. ஒரு படத்தில் அவர் சரியாக நடனம் ஆடாதது கண்டு டைரக்டர் நாகேஷின் மனம் புண்படும்படியாக கமெண்ட் அடித்துவிட்டார். அன்று இரவுமுழுக்க அறைக் கதவைச் சாத்திக்கொண்டு, கிராமஃபோன் ரெக்கார்டு ஒலிக்க உண்ணாமல் உறங்காமல் பயிற்சி செய்து மறுநாள் டைரக்டரை ஆச்சரியப்படுத்தி மனதுக்குள் வெட்கப்பட வைத்தார் நாகேஷ்.
மைலாப்பூர் கபாலி கோவில் தெப்பக்குளத்தின் படிகட்டுகளில் உட்கார்ந்துகொண்டு வற்றிப் போன தெப்பக் குளத்தைப் பார்த்து “அந்தப் பழைய நாள்கள் இனிமே வருமா? ஊஹூம்… வராது.. வரவே வராது… ” என்று தனக்குத்தானே புலம்பிய கிருஷ்ணசாமி அய்யர் என்பவர்தான் நாகேஷின் மிகப் பிரபலமான தருமி கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன்.
டைரக்டர் ஏ. பி. நாகராஜன் தருமி சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு சின்னக் கோடு போட்டார். நாகேஷ் ரோடு இல்லை, ஒரு தங்க நாற்கரச் சாலையே போட்டுவிட்டார். இன்றைக்கும் டி.வி.யில் தருமி நாகேஷ் – சிவாஜி காட்சியைப் பார்த்து ரசிக்கும் உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா? திருவிளையாடல் படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு நாகேஷுக்கு அழைப்புகூட அனுப்பவில்லை.
ஒருகட்டத்தில் நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினாலும் அவரது நகைச்சுவை உணர்ச்சிமட்டும் என்றுமே குறையவில்லை. ஒருமுறை இன்றைய நகைச்சுவை நடிகர்கள் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அடித்த நச் கமெண்ட்: “சிலருக்கு டைமிங் சென்ஸ் நல்லா இருக்கு; சிலருக்கு டைம் நல்லா இருக்கு!”
வாழ்க்கையை வெகு எதார்த்தமாக எதிர்கொண்டவர் நாகேஷ். பண விஷயத்தில் அவர் வெகு கறாரான மனிதர் என்று சினிமா உலகில் சொல்வார்கள். ஆனால் தனிப்பட்டமுறையில் மிக எளிமையானவர். “எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே?” என்பார். சினிமா உலகத்தினரது வீட்டு வரவேற்பறையில் அவர்கள் வாங்கிய ஷீல்டுகளை ஷோ கேஸ் அமைத்துக் காட்சிக்கு வைப்பது சகஜம், ஆனால் நாகேஷ் வீட்டில் ஒரு ஷீல்டைக்கூடப் பார்க்க முடியாது. தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது நாகேஷுக்குப் பிடிக்காத விஷயம்.
”சிரித்து வாழ வேண்டும்” என்ற தலைப்பில் வெளியான நாகேஷின் வாழ்க்கை அனுபவத் தொடருடைய முதல் அத்தியாயத்துடன் நாகேஷ், அவரது மூன்று மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்று அனைவரும் இருக்கும் ஒரு குரூப் ஃபோட்டோ போட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அந்த ஆசையை அவரிடம் தெரிவித்தபோது “அப்படி ஒரு ஃபோட்டோ இல்லை” என்றார்.
“பரவாயில்லை. ஒரு நாள் அனைவரையும் உங்கள் வீட்டுக்கு வரச்சொன்னால் ஒரு ஃபேமிலி குரூப் ஃபோட்டோ எடுத்துவிடலாம்!” என்றேன். ஆனால் “அதெல்லாம் சாத்தியமில்லை!” என்று சொல்லிவிட்டார். “இது என்ன சார் பெரிய விஷயம்? ஃபோன் நெம்பர் கொடுங்க! நானே பேசி ஏற்பாடு செய்திடறேன்” என்று வற்புறுத்தியபோது ‘இதை விட்டுடேன்! பிளீஸ்!” என்று சொல்லி அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
2009 ஜனவரியில் அவர் மரணம் அடைவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே உடல் நலமில்லாமல் இருந்தார். அவ்வப்போது அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். அப்படி ஒரு நாள் அவர் வீட்டுக்கு நான் சென்றிருந்த சமயம் இயக்குனர் கே. பாலசந்தரும் அங்கே வந்திருந்தார். தன் நெடுநாளைய நண்பனின் கைகளை வருடிக்கொடுத்தபடி “ராவுஜி! எப்படிடா இருக்கே?” என்று கே.பி. கேட்டார்.
பேச முடியாத நிலையிலும் நாகேஷின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை. அந்தச் சிரிப்பு இன்னும் என் மனத்தில் நிழலாடுகிறது.
அன்று நாகேஷைப் பற்றிப் பழைய நினைவுகளை அசைபோட்டார் கே.பி. “நீர்க்குமிழி படப்பிடிப்பின் முதல் நாள் நாகேஷ் என்னை ’சார்’ என்று அழைத்தபோது எனக்குச் சங்கடமாக இருந்தது. இத்தனை நாளும் வாடா போடா என்று பேசுகிற நீ திடீரென்று என்னை சார் என்று கூப்பிட்டால் கிண்டல் பண்ணுவதுபோல இருக்கு” என்று நான் அவனிடம் சொன்னேன்.
அப்போது அவன் என்னைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய் “நாம ரெண்டு பேரும் நெருங்கின நண்பர்கள்தான். ஆனால் நீ இங்கே டைரக்டர்; நான் நடிகன். நான் உனக்கு மரியாதை தரவேண்டும்; அப்போதுதான் யூனிட்டில் எல்லோரும் உனக்கு உரிய மரியாதை தருவார்கள்” என்றான்.”
”நாகேஷ் ஒரு கிரியேடிவ் ஜீனியஸ். காட்சியைச் சொல்லிவிட்டு ரிகர்சல் பார்க்கிறபோது சொன்னபடி செய்வான். அடுத்து டேக் போகிறபோது தானாகவே இன்னும் ஏதாவது சேர்த்துக்கொண்டு காட்சியைப் பிரமாதப்படுத்திவிடுவான்.
உதாரணமாக, வணக்கம் சொல்லியபடி உடம்பை வளைக்கிறதுபோல் ஒரு காட்சி. டேக்கின்போது வளைந்துகொண்டே வந்தவன் தானாகவே “இன்னும் கூடக் குனிய முடியும், ஆனா தரை இருக்கு” என்று ஒரு வசனத்தைச் சொல்லி அசத்திவிட்டான்” என்றார் கே.பி. நாகேஷின் மறைவுக்குப்பிறகு கே. பாலசந்தரது கவிதாலயா தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகத்தின் தொடக்கத்தில் நாகேஷின் படத்தை வைத்து அவரை உருக்கமாக நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் அவர்.
நாகேஷ் இன்று நம்மிடையே இல்லை; எனது ஆழ்ந்த அனுதாபங்கள்- அவரது குடும்பத்தினருக்கு அல்ல; அந்த மகத்தான கலைஞனை உரிய முறையில் கௌரவிக்கத் தவறிய இந்திய அரசாங்கத்துக்கு.
எஸ். சந்திர மௌலி
திரைப்பட உலகில் 1000 படங்களில் நடித்த பழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று. நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். இவர் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன், இவர் சாதிக்க தடம் பதித்த இடம் சென்னை. சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார். சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார். சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். எனினும் சினிமாவில் இருந்த ஆர்வம் காரணமாக நாடகத்தில் நடித்து வந்தார். பிழைப்புக்காக அவர் ஓட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்துள்ளார். இதன் காரணமாகவே சர்வம் சுந்தரம் படத்தில் அனுபவித்து நடித்தார்.
ஒருமுறை அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார். அதன் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் அவர் சினிமாவில் நடிக்க வந்தார்.
காதலிக்க நேரமில்லை படம், நாகேஷ் நகைச்சுவையில் ஒரு மைல்கல். ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் மிகச் சிறந்த நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவில், நடிகர் நாகேஷாகவே வந்து அசத்தியிருப்பார். பின்னர் படிக்காதவன் படத்தில் ரஜினியின் வளர்ப்புத் தந்தையாக நடித்து நெகிழ்ச்சி தந்தார்.
நடிகர் கமலுடன் மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர் என அந்தப் பட்டியல் தசாவதாரம் வரை தொடர்ந்தது. குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அவர் 'நடித்த' ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோனதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.
நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகேஷுக்குக் கிடைத்தது.
நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 – ஜனவரி 31, 2009) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உட்பட 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர். 1967-இல் வெளிவந்த “அபராதி” என்ற மலையாளப் படத்தில் இவர் ரெங்காச்சாரி என்ற பெயரில் தட்டான் என்ற கதாபாத்திரத்தில் கௌரவ வேடம் தாங்கி நடித்தாரென்றாலும் அக்கதாபாத்திரத்தில் தனது சொந்தக் குரலில் பேசி நடித்து அவ்வேடத்தில் மிளிர்ந்து நின்றார்; கௌரவ வேடம் என்பதே தெரிந்து கொள்ள முடியாத வண்ணம் அற்புதமாக நடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க சந்தர்ப்பமில்லை.
வாழ்க்கைச் சுருக்கம்
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாநிலத்தவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார். தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.
நடிப்புத் துறையில்
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய ‘டாக்டர் நிர்மலா’ நாடகத்தில், ‘தை தண்டபாணி’ என்ற பாத்திரத்தில் “தை, தை” என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், ‘தை நாகேஷ்’ என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை ‘தாய்’ என்று மாற்றி படித்ததால் இவர் “தாய் நாகேஷ்” என அழைக்கப்பட்டார். 1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார் திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன்,எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார்.மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும். தமிழ்க் கொங்கு வலைத்தளத்திலிருந்து நாகேஷைப் பற்றி கிடைத்தது. நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து – கவிஞர் கண்ணதாசன்
தாராபுரம் கொழிஞ்சிவாடியில் குழந்தைப் பருவத்தில் வளர்ந்து, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்து இணையற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்த நாகேஷ் இயற்கை எய்திவிட்டார். பலருக்கும் இரண்டு பெயர் வீட்டில் இருக்கும்: official பெயர் (கல்வி, கோயில், …) பயன்பட நாகேஸ்வரன். முதன்முதலில் நடித்த நாடகத்தில் நாகேஸ்வரனுக்கு முதற்பரிசு அளிக்கிறேன் என்று இந்த official பெயர் சொல்லிப் பரிசளித்தவர் எம்ஜிஆர். நாகேஷைக் கூப்பிடச் செல்லப்பெயர்: குண்டுராவ்.
மணியன் எழுதிய ‘டாக்டர் நிர்மலா’ நாடகத்தில், ‘தை தண்டபாணி’ என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் ‘தை நாகேஷ்’ ஆனது. ஆங்கிலத்தில் Thai என்பதை ‘தாய்’ என்று மாற்றிவிட்டார்கள்” என்பர். தை, தக்கா என்று மேடையில் குதித்து அமர்க்களம் செய்து எம்ஜிஆரிடம் பரிசு பெற்றவர் நகைஞர் நாகேஷ்!ஆட்டுக்கல்லைப் போல் தான் – ஆண்டவன்! ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார். சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல் தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற தன்வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருக்கிறார்.அபூர்வ ராகங்கள் படத்தில் நாகேஷைக் கவிஞர் கண்ணதாசன் வாழ்த்திய விருத்தம் ஒன்று உண்டு. சூரி என்ற மருத்துவராக மறைந்த நாகேஷ் நடிக்க, கவியரசர் தானாகவே வருவார்.அந்த விருத்தத்தைத் தருகிறேன்:அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர் பெருமருந்து உயர்பக்தி என்பதைப் பெரியவர்பலர் பேசுவர் சுரமருந்தென எதனையோதரும் சூரி என்ற மருத்துவர் கரிமெலிந்தது போல்மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே !சுர மருந்து = medicine for fever (சுரம் = காய்ச்சல் நோயின் வடசொல்). ‘யானை மெல்லிசானால் தோல்போர்த்திய உடம்பிருக்குமே அப்படி நாகேஷின் உடல்வாகு, அவர் காலமெல்லாம் வாழி’ என மங்கலிக்கிறார். பாட்டைக் கேட்டு நாகேஷ் ‘அதுதான் கண்ணதாசன்’ என்று வியப்பார், ‘அதுதான் (டாக்டர்) ஃபீஸ்’ என்று அதிர்வெடியைப் போட்டுவிட்டு எழுந்து செல்வார் கவிஞர் 🙂 தமிழர் நெஞ்சினில், காணொளிகளில் காலமெல்லாம் வாழ்க!நடிகர் நாகேஷ் ”ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகன் ஆக்கினார்கள்!” தமிழ்ப்பட உலகில் தான் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில் கூட நினைத்தது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னால், மாம்பலம் கிளப் ஹவுஸ் விடுதியில், படுக்க இடமின்றி ‘மொபைல் நாகேஷா’கத் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் தனக்கு ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனைகூடச் செய்து பார்த்தது கிடையாது.”காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள்; கைதட்டினார்கள். ‘நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான்’ என்று அவர்களே முடிவுகட்டிவிட்டார்கள். ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்” என்கிறார் நாகேஷ்.1933-ம் வருஷம் செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர் நாகேஷ். நிஜப்பெயர் குண்டுராவ். 1951-ம் வருஷம் மார்ச் மாதம் 17-ம் தேதியைத் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார். அன்றுதான் அவருக்கு வைசூரி போட்டது. அதன் பலனாக அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிக் அழுதார். தன் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று நினைத்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர், படிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத் சென்று ரேடியோ கம்பெனி ஒன்றில் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு சென்னையில் குடியேறி, ரயில்வே ஆபீசில் என்.ஜி.ஓ-வாக வேலைக்கு அமர்ந்தார்.”உண்மையைச் சொல்கிறேன்… எனக்குக் கொடுத்த சம்பளம் தண்டம். நான் ஒழுங்காகவே வேலை செய்யமாட்டேன். நாடக வசனம்தான் உருப்போட்டுக்கிட்டிருப்பேன். நாலு மணி அடிச்சா ஏதாவது சாக்கு சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். ஒரு நாள், மேல் அதிகாரி எனக்கு அனுமதி கொடுக்கமாட்டேன்னுட்டார். ‘அப்படின்னா நான் போன வாரம் கடனா கொடுத்த எட்டணாவைத் திருப்பிக் கொடுங்க, சார்!’ என்று கேட்டு எல்லார் எதிர்லேயும் அவர் மானத்தை வாங்கிவிட்டேன். பாவம், அவர்கிட்டே எட்டணா கூட இல்லே. மரியாதையா என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார்.எப்படி எனக்கு நடிப்பில் ஆசை வந்ததுன்னு கேட்கறீங்களா… சொல்றேன். ஒரு நாள் மாம்பலம் தேவி பாடசாலையில் ஒரு நாடக ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதுலே ஒரு காரெக்டர் சரியா டயலாக் பேசவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான் டைரக்டரைப் பார்த்து ‘இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமே’ என்று சொல்லிப் பேசிக் காட்டினேன். ஆனால், அவர் என்னை அலட்சியப்படுத்திவிட்டார். அன்று முதல் எனக்கு நாடகத்திலே நடிக்கணும்னு ஒரு வெறி ஏற்பட்டது. ஆபீஸ்லே ‘எங்கே இன்பம்?’ என்று ஒரு நாடகம் போட்டாங்க. அதுலே ஒரு சீன்லே நடிச்சு நல்ல பெயர் வாங்கினேன். அவ்வளவு தான்… நாடகப் பித்து நல்லா பிடிச்சுடுச்சு. அப்போதுதான் வீரபாகு என்கிறவர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி, ‘தாமரைக் குளம்’ என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே வேலையை விட்டுட்டுப் போய் அதுலே நடித்தேன். ஆனால், பெயரும் வரல்லே; எதிர்பார்த்த பணமும் வரல்லே..!”அதற்குப் பிறகுதான் நாகேஷ் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. நாகேஷை தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லி, சாப்பாடும் டானிக்கும் கொடுத்து, நல்ல பர்ஸனாலிட்டியாக்கப் பாடுபட் டார். பட முதலாளிகளிடமும் டைரக்டர்களிடமும் முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ”சார், இவனுக்கு ஒரு சிறு பாகம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டு மானால் என் கான்ட்ராக்டில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள் ளுங்கள்” என்று சொல்லுவாராம். ”பாலாஜி எனக்குச் செய்த உதவி களை நான் சாகும்வரை மறக்க முடியாது” என்று சொன்னபோது நாகேஷின் கண்கள் கலங்கின.எல்லோரையும் சிரிக்க வைக்கும் தான், சொந்த வாழ்க்கையில் சிரிக்கமுடியவில்லை என்கிறார் அவர். அதுவும் இந்த சினிமா வாழ்க்கையின் காரணமாக, சாகும் தறுவாயில் இருந்த தன் தாயாரைக் காணமுடியாமலேயே போய் விட்டதை நினைத்து நினைத்து ஏங்குகிறார். ”இந்தப் போலி வாழ்க்கை அருவருப்பைத் தருகிறது. மனைவியுடன் பேசும்போதுகூட சினிமாவில் நடித்த ஒரு சீன்தான் ஞாபகம் வருகிறது. ஆப்த நண்பனிடம் ‘நாளைக்குக் கட்டாயம் ஆறு மணிக்குச் சந்திக்கிறேன்’ என்றால், அவன் ‘என்னடா, உண்மையா சொல்றயா, இல்லே இதுவும் நடிப்பா?’ என்கிறான். எது அசல், எது போலி என்றே புரியமாட்டேங்குது சார்” என்கிறார் அவர்.”வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். ‘கலையைக் காப்பாற்றுகிறேன்’ என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ‘கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது’ என்று எல்லோரும் நினைத்தால், கலையும் பிழைக்கும்; நாமும் பிழைக்கலாம்” என்கிறார்.மணியன் எழுதிய ‘டாக்டர் நிர்மலா’ நாடகத்தில், ‘தை தண்டபாணி’ என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் ‘தை நாகேஷ்’ ஆயிற்றாம். ஆங்கிலத்தில் Thai என்பதை ‘தாய்’ என்று மாற்றிவிட்டார்களாம்.நாகேஷூக்கு ஒரே ஒரு ஆசை… ‘அமெரிக்கா சென்று நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்!’நன்றி:-http://nganesan.blogspot.in/2009/02/nagesh.html நன்றி:- விக்கிப்பீடியா
CK.Nagesh-Nageswaran C. Krishna Gundu Rao; 27 September 1933 – 31 January 2009.aged-76. The great Comedy, Hero, Charactor, Villain Actor and Director in Thamizh Movies. Comedian in Telugu and Hindi movies. He acted in over 1,000 films from 1958 to 2008. ’சவாலே சமாளி’ [1971] படத்தில் நகைச்சுவை சக்கரவர்த்தியின் பெயர்

No comments:
Post a Comment