Saturday 24 September 2016

தமிழ் நாடகங்களின் தந்தை பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் மறைவு 1967 செப்டம்பர் 24



தமிழ் நாடகங்களின் தந்தை 
பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார்
மறைவு 1967  செப்டம்பர் 24




தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் (Pammal Vijayaranga Sambandha Mudaliar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந் தவர். இவரது அப்பா தமிழ் ஆசிரியராக, பிறகு பள்ளி ஆய்வாளராக இருந்தவர். புத்தகங்களையும் வெளி யிட்டுவந்தார். அவர்கள் வீட்டில் தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் ஏராளமாக இருந்தன.

 சிறு வயது முதலே, புத்தகங்களை ஆர்வத் துடன் படிப்பார். புராணக் கதைகளை அம்மா கூறு வார். கோவிந்தப்பர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரியில் பயின்றார்.

 பிறகு, சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். நீதிபதியாகவும் பணியாற்றினார். ஆங்கில நாடகங்கள் அதிகம் பார்ப்பார். 1891-ல் பெல்லாரியில் இருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள் இருப்பதை அறிந்ததும், இவருக்கு நாடகத்தின் மீதான ஈர்ப்பு அதிகமானது.

 சுகுண விலாஸ் சபா என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். சென்னைக்கு வந்த பார்சி நாடகக் குழுவினரின் பிரம்மாண்டமான திரை மற்றும் மேடை அமைப்புகள், சிறப்பான உடை அலங்காரம் இவரைப் பெரிதும் கவர்ந்தன. தீவிர முயற்சி எடுத்து தன் நாடகங்களிலும் அதை செயல்படுத்திக் காட்டினார்.

 தெருக்கூத்துதான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார். ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரையும் நடிக்கவைத்தார்.

 சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.

 22-வது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற ஹாம்லெட், ஆஸ் யு லைக் இட், மெக்பெத் உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார்.


ஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார். மொத்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை.

 இவரது ‘இந்தியனும்-ஹிட்லரும்’, ‘கலையோ காதலோ’ உள்ளிட்ட 30 தமிழ் நூல்கள், அமலாதித்யா, லார்ட் புத்தா உள்ளிட்ட 30 ஆங்கில நூல்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது.

 சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உட்பட பல்வேறு விருது கள், பட்டங்களைப் பெற்றுள்ளார். நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர் 91 வயதில் மறைந்தார்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பம்மல் சம்பந்த முதலியார் (1873 - செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 1873 மாசி முதல் நாளன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ்ப் புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.

நாடக எழுத்துப்பணி[தொகு]
சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், "சுகுண விலாச சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.

நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]
22வது வயதில் அவருடைய முதல் நாடகம் 'லீலாவதி-சுலோசனா' என்ற பெயருடன் அரங்கேறியது.
மொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்.
1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது[1]
1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.
1963 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்.
தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.
தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்[தொகு]
ஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்', 'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வானிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்[தொகு]
பம்மல் சம்பந்த முதலியார் இயற்றி, தமிழ் நாட்டரசு நாட்டுடைமையாக்கிய நூல்களின் பட்டியல்.

தமிழ்[தொகு]
இந்தியனும்-ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
என் சுயசரிதை
என் தந்தை தாயர்
ஒன்பது குட்டி நாடகங்கள்
ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
கள்வர் தலைவன்
காதலர் கண்கள்
காலக் குறிப்புகள்
சபாபதி
சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
நான் குற்றவாளி
சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
தீபாவளி வரிசை
தீயின் சிறு திவலை
நாடகத் தமிழ்
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
பலவகை பூங்கொத்து
மனை ஆட்சி
மனோகரா
மூன்று நகைச்சுவை நாடகங்கள்
யயாதி
வாணீபுர வணிகன்
விடுதிப் புஷ்பங்கள்

No comments:

Post a Comment