ஒலிம்பிக் 1960 பதக்கத்தை ஒகியோ நதியில்
தூக்கி எரிந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்த முகமது அலி
தேனீயாய் கொட்டுவேன்!
"பிறப்பால் பிரிவினையை உண்டாக்கும் நாட்டிற்காக
விளையாடி வென்ற பதக்கத்தை அணிய விரும்பவில்லை!
"என்றார்.
- முகம்மது அலி
1940களில் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் சுகர் ரே ராபின்சன். இவர்தான் முகம்மது அலியின் ஆதர்சன நாயகனும் கூட. ஒருமுறை அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றார் அலி.
ஆனால் சுகர் ரே, 'இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை...போ ' என்று எரிச்சல்பட நொந்துவிட்டார் அலி. தன்னைப் போல இனி எந்த சிறுவனும் மனம் நோகக்கூடாது என்று அன்று முடிவெடுத்தார் அலி. எத்தனை பிஸியாக இருந்தாலும், யார் எந்த சூழ்நிலையில் ஆட்டோகிராப் கேட்டாலும் மறுக்காமல் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.!
1960ல் நடந்த ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்ற அலி ஒரு அமெரிக்க ரெஸ்டாரண்டில் கருப்பினத்தவர் என்பதால் காபி தர மறுத்ததால் கடுப்பாகி ஒஹியோ நதியில் அந்த பதக்கத்தை விட்டெறிந்தார்.
"பிறப்பால் பிரிவினையை உண்டாக்கும் நாட்டிற்காக விளையாடி வென்ற பதக்கத்தை அணிய விரும்பவில்லை! "என்றார்.
வியட்நாம் யுத்தத்தின் போது கட்டாய ராணுவ சேவையை மதக்கோட்பாட்டை காரணம் காட்டி செய்ய மறுத்த அலி மீது கடுப்பான அமெரிக்கா நான்காண்டுகளுக்கு போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதித்து பதக்கங்களை பறிமுதல் செய்தது.
தடைக்காலத்திற்கு பிறகு முன்பை விட பலத்தோடு களமிறங்கிய அலி "வளையத்திற்குள் பட்டாம்பூச்சியாய் பறப்பேன்.தேனீயாய் கொட்டுவேன்! "என்று தன் சாதனை பயணத்தை தொடர்ந்து அமெரிக்காவை தலைகுனிய வைத்தார்.
No comments:
Post a Comment