Showing posts with label ஒலிம்பிக். Show all posts
Showing posts with label ஒலிம்பிக். Show all posts

Wednesday, 21 September 2016

ஒலிம்பிக் பதக்கத்தை ஒகியோ நதியில் தூக்கி எரிந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்த முகமது அலி




ஒலிம்பிக் 1960 பதக்கத்தை ஒகியோ நதியில் 
தூக்கி எரிந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்த முகமது அலி 

"வளையத்திற்குள் பட்டாம்பூச்சியாய் பறப்பேன்.
தேனீயாய் கொட்டுவேன்! 

"பிறப்பால் பிரிவினையை உண்டாக்கும் நாட்டிற்காக 
விளையாடி வென்ற பதக்கத்தை அணிய விரும்பவில்லை! 
"என்றார்.
முகம்மது அலி

1940களில் குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் சுகர் ரே ராபின்சன். இவர்தான் முகம்மது அலியின் ஆதர்சன நாயகனும் கூட. ஒருமுறை அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றார் அலி.


ஆனால் சுகர் ரே, 'இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை...போ ' என்று எரிச்சல்பட நொந்துவிட்டார் அலி. தன்னைப் போல இனி எந்த சிறுவனும் மனம் நோகக்கூடாது என்று அன்று முடிவெடுத்தார் அலி. எத்தனை பிஸியாக இருந்தாலும், யார் எந்த சூழ்நிலையில் ஆட்டோகிராப் கேட்டாலும் மறுக்காமல் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.!

1960ல் நடந்த ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்ற அலி ஒரு அமெரிக்க ரெஸ்டாரண்டில் கருப்பினத்தவர் என்பதால் காபி தர மறுத்ததால் கடுப்பாகி ஒஹியோ நதியில் அந்த பதக்கத்தை  விட்டெறிந்தார்.

"பிறப்பால் பிரிவினையை உண்டாக்கும் நாட்டிற்காக விளையாடி வென்ற பதக்கத்தை அணிய விரும்பவில்லை! "என்றார்.


வியட்நாம் யுத்தத்தின் போது கட்டாய ராணுவ சேவையை மதக்கோட்பாட்டை காரணம் காட்டி செய்ய மறுத்த அலி மீது கடுப்பான அமெரிக்கா நான்காண்டுகளுக்கு போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதித்து பதக்கங்களை பறிமுதல் செய்தது.

தடைக்காலத்திற்கு பிறகு முன்பை விட பலத்தோடு களமிறங்கிய அலி "வளையத்திற்குள் பட்டாம்பூச்சியாய் பறப்பேன்.தேனீயாய் கொட்டுவேன்! "என்று தன் சாதனை பயணத்தை தொடர்ந்து அமெரிக்காவை தலைகுனிய வைத்தார்.

Thursday, 25 August 2016

ஒலிம்பிக் பதக்கங்களை விற்றவர்கள்!





ஒலிம்பிக் பதக்கங்களை விற்றவர்கள்!




உலகின் மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக். இந்தப் போட்டிகளில் கலந்துகொள்வதும் பதக்கங்களை அள்ளுவதும் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை தேடித் தருவதாக இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரும் பதக்கக் கனவுகளோடுதான் செல்கிறார்கள். போட்டியிலும் பங்கேற்கிறார்கள்; போராடுகிறார்கள். இறுதியில் சிலர் பதக்கங்களை ஜெயிக்கிறார்கள். இப்படி ஆண்டுக்கணக்காக உழைத்து, பயிற்சி செய்து, போராடி வென்ற தங்கப் பதக்கங்களைச் சிலர் விற்பனை செய்திருக்கிறார்கள் தெரியுமா? ஏன், எதற்காகப் பதக்கங்களை விற்றார்கள் என்று பார்ப்போமா!

போலந்து நாட்டைச் சேர்ந்த ஒடிலியா, நீச்சல் வீராங்கனை. 1994-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றார். “நான் எத்தனைத் தங்கப் பதக்கங்கள் வென்றாலும் அவற்றை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிடுவேன்” என்று அறிவித்தார். 

பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். போலந்து நாட்டின் முதல் தங்கம் வென்ற நீச்சல் வீரர் இவர். ஆனால், தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்றார். அதில் கிடைத்த பணத்தை, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுக்காக வழங்கிவிட்டார். “பதக்கத்தை வைத்து என் சாதனையை நினைவுகூர வேண்டிய அவசியம் இல்லை. நான் ஒலிம்பிக் சாம்பியன் என்ற பட்டமே என் மனதில் நிறைந்திருக்கிறது!’’ என்கிறார் ஒடிலியா.

அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். தான் கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே 19 வயதில் தங்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.
2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அந்தோனியைப் பாதித்தது. தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்று, அந்தப் பணத்தை இந்தோனேஷியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.






அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். தான் கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே 19 வயதில் தங்கத்தைப் பெற்று சாதனை படைத்தார். 
2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அந்தோனியைப் பாதித்தது. தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்று, அந்தப் பணத்தை இந்தோனேஷியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.





அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் வெல்ஸ், ஐஸ் ஹாக்கி வீரர். 1980-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவரது அணி தங்கப் பதக்கம் வென்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியை மிகவும் உயர்வாகக் கருதினார் மார்க். மரபணுக் குறைபாட்டின் காரணமாக மார்க்கின் முதுகுத் தண்டு சேதமடைந்தது. மருத்துவத்துக்கு ஏராளமாகச் செலவானது.

மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், 20 ஆண்டுகளாகப் பொக்கிஷமாகப் பாதுகாத்த தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு தன்னுடைய மருத்துவத்தைச் செய்து வருகிறார்.

தங்களின் உழைப்பில் கிடைத்த, தாங்கள் உயர்வாக மதிக்கும் தங்கப் பதக்கங்களை நல்ல காரியங்களுக்காக விற்பனை செய்த, இந்த வீரர்கள் வரலாற்றில் கூடுதல் மதிப்பைப் பெற்றிருப்பார்கள் இல்லையா?

Thursday, 18 August 2016

ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டி பிரேசில் ரசிகர்கள் கூச்சல்- கடும் கண்டனம்


ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டி
பிரேசில் ரசிகர்கள் கூச்சல்- கடும் கண்டனம் 







ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் கடந்த ஒலிம்பிக் சாம்பியனை பிரேசில் ரசிகர்கள் கடுமையாக அவமானப்படுத்தி அழச்செய்தது சர்ச்சையாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பொதுவாக எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவுக்குரல் எழுவதைத்தான் பார்த்திருக்கிறோம், ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டு போல்வால்ட் வீரர் ரெனோ லாவிலெனி என்பவரை பிரேசில் ரசிகர்கள் பதக்கமளிப்பு விழா வரை கேலிக்கூச்சலிட்டு அவமானப்படுத்தியது கசப்பான கலாய்ப்பு அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.

போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரேசில் அறிமுக வீரர் தியாகோ பிராஸ் டா சில்வா இறுதியில் ரெனோ லாவிலெனியை எதிர்கொண்டார். இவர் லண்டன் ஒலிம்பிக்கில் போல்வால்ட் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டா சில்வா, லாவிலெனி இருவரும் 5.97மீ என்ற இலக்கைக் கடந்தனர், இது லாவினெலி லண்டன் ஒலிம்பிக்கில் தாண்டிய உயரமாகும். இதனையடுத்து இறுதிப் போட்டியில் 6.03மீ உயரத்தைத் தாண்ட எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இதில் முதல் முயற்சியில் பிரேசில் வீரர் டா சில்வா, பிரான்ஸ் வீரர் லாவினெலி ஆகிய இருவருமே தோல்வி அடைந்தனர். இதனையடுத்த ஆட்டத்தில் பிரேசில் வீரர் டா சில்வா எளிதில் 6.03 மீ உயரத்தைத் தாண்டி தங்கத்திற்கு அருகே தன்னை கொண்டு சென்றார். 

அப்போதுதான் முந்தைய சாம்பியன், 29 வயது பிரான்ஸ் வீரர் லாவிலெனி தாண்ட தனது மார்க்கிற்குச் சென்றபோது மரியாதை குறைவான சில நிகழ்வுகள் நடந்தன.


அதாவது போல்வால்ட்டில் தங்கள் நாட்டுக்கு பதக்கமே கிடைக்காது என்ற நிலையில் தங்கம் வெல்வதற்கு அருகில் தங்கள் நாட்டு வீரர் டா சில்வா இருக்கும் போது லாவிலெனியை வெற்றி பெற விடக்கூடாது என்ற ரீதியில் மைதானத்தில் ரசிகர்கள் கடும் கேலிக்கூச்சல் போட்டனர். அவர் தனது ரன் மார்க்கிற்கு வந்து ஆடத் தயாரான போது கேலிக்கூச்சல் கடுமையாக அதிகரித்தது, லாவிலெனி தனது கட்டை விரலை தாழ்வாகக் காண்பித்து தனது அதிருப்தியை வெளியிட்டார்.

அவரது கவனத்தை சிதைக்கும் குறிக்கோளுடன் அவருக்கு எதிராக பிரேசில் ரசிகர்கள் கூச்சல் போட தனது 3 தாவல் முயற்சிகளிலும் தோல்வி அடைந்து கடும் ஏமாற்றத்துடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். பிராஸ் டா சில்வா தங்கம் வென்றார். 

வெள்ளிப்பதக்கம் பெற்றது கூட அவருக்கு வருத்தமில்லை தான் கேலி செய்யப்பட்டது அவரை காயப்படுத்த தன் அணியினருடன் இணைந்த போது வேண்டா வெறுப்பாக பிரான்ஸ் கொடியை தூக்கி அசைத்தார். அப்போதும் அவரை கேலி செய்யும் விதமான கூச்சல்கள் குறையவில்லை. 


ஆனால் இதோடு பிரேசில் ரசிகர்கள் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை என்று கூறலாம், ஆனால் பதக்கம் வழங்கும் மேடைக்கு இவர் சென்ற போது கூட வெள்ளிப்பதக்கத்துக்குரிய லாவிலெனி பெயரை அறிவித்தவுடன் மீண்டும் கடுமையாக ரசிகர்கள் அவரைக் கேலி செய்யும் விதமாக கூச்சலிட்டனர். லாவினெலிஹின் வெந்த புண்ணில் இது வேலைப்பாய்ச்ச பதக்க மேடையில் பொங்கி வந்த கண்ணீரை அவரால் அடக்க முடியவில்லை. முகத்தை கைகளால் மூடிக் கொண்டு அழுதார். ஐஏஏஎஃப் தலைவர் செபாஸ்டியன் கோ, ஐ.ஓ.சி. தலைவர் தாமஸ் பாக் ஆகியோருடன் போல்வால்ட் லெஜண்ட் செர்ஜீ பபுகாவும் அவரை சமாதானப்படுத்தினர். 

இது குறித்து பிற்பாடு தெரிவித்த லாவிலெனி, “நியாயமான முறையில் நடந்து கொள்ளாதது அருவருப்பாக உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் மரியாதை இல்லாவிட்டால் வேறு எங்கு மரியாதை கிடைக்கும்?” என்றார்.

மேலும் நாஜி ஜெர்மனியில் 1936-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது ஜெஸி ஓவன்ஸுக்கு அளிக்கப்பட்ட மரியாதையுடன் அவர் இதனை ஒப்பிட்டுப் பேசி பிறகு அதனை வாபஸ் பெற்றார், அதாவது உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.

ஒலிம்பிக் லெஜண்ட் மைக்கேல் ஜான்சன் கூறும்போது, “நீங்கள் ஆதரிக்க விரும்புவர்களுக்கு ஆதரவளியுங்கள், ஒரு வீரர் உங்கள் நாட்டு வீரருக்கு எதிராக விளையாடுகிறார் என்பதற்காகவே அவரை கேலி செய்து அவமானப்படுத்தாதீர்கள்” என்றார். 

பிரேசில் கால்பந்து கலாச்சாரம் அப்படியே ஒலிம்பிக்கிலும் அந்நாட்டு ரசிகர்களால் கடைபிடிக்கப் படுவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.


பிரேசிலியர்கள் இவ்வகை கேளிக்கையை "zueira" என்று அழைக்கின்றனர். அதாவது அடுத்தவர் செயல்திறனையே முடக்கும் அளவுக்கு கேலி செய்வது. இது கால்பந்தாட்டத்தின் போது, அதுவும் கால்பந்தாட்டம் ஒரு மதமாக பிரேசிலில் இருக்கும் போது நடைபெறுவது சகஜம், தடுக்க முடியாததும் கூட,

ஆனால் ஒலிம்பிக் போன்ற மிகப்பெரிய புலத்தில் கடும் நெருக்கடியில் அங்கு எந்த வீரருக்கும் நிறைய கவனம் தேவைப்படும். எனவே ஆட்டத்தின் போது கேலிக்கூச்சல் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் இல்லாததைக் காட்டுகிறது என்று நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் தோற்றபிறகு பதக்க மேடை வரை இது தொடர்வதுதான் தற்போது பிரேசில் ரசிகர்கள் மீது கடும் விமர்சனத்தை ஈர்த்துள்ளது