Posts

Showing posts with the label போல்வால்ட்

ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டி பிரேசில் ரசிகர்கள் கூச்சல்- கடும் கண்டனம்

Image
ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டி பிரேசில் ரசிகர்கள் கூச்சல்- கடும் கண்டனம்  ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் கடந்த ஒலிம்பிக் சாம்பியனை பிரேசில் ரசிகர்கள் கடுமையாக அவமானப்படுத்தி அழச்செய்தது சர்ச்சையாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பொதுவாக எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவுக்குரல் எழுவதைத்தான் பார்த்திருக்கிறோம், ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டு போல்வால்ட் வீரர் ரெனோ லாவிலெனி என்பவரை பிரேசில் ரசிகர்கள் பதக்கமளிப்பு விழா வரை கேலிக்கூச்சலிட்டு அவமானப்படுத்தியது கசப்பான கலாய்ப்பு அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரேசில் அறிமுக வீரர் தியாகோ பிராஸ் டா சில்வா இறுதியில் ரெனோ லாவிலெனியை எதிர்கொண்டார். இவர் லண்டன் ஒலிம்பிக்கில் போல்வால்ட் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டா சில்வா, லாவிலெனி இருவரும் 5.97மீ என்ற இலக்கைக் கடந்தனர், இது லாவினெலி லண்டன் ஒலிம்பிக்கில் தாண்டிய உயரமாகும். இதனையடுத்து இறுதிப் போட்டியில் 6.03மீ உயரத்தைத் தாண்ட எல்லை நிர்ணயிக்கப்பட்டது....