Showing posts with label mahatma. Show all posts
Showing posts with label mahatma. Show all posts

Tuesday, 10 July 2018

MAHATMA GANDHI - CHARLIE CHAPLIN MET 1931 SEPTEMBER 22








MAHATMA GANDHI - CHARLIE CHAPLIN 
MET 1931 SEPTEMBER 22



வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது,

இந்தச் சந்திப்பு எப்படி நடைபெற்றது என்பது குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள், மாற்றுகருத்துகள், கற்பனைகள் இன்றும் உலவி கொண்டேயிருக்கின்றன. எரிக் பிளாம் எழுதிய சாப்ளின் பற்றிய புத்தகத்தினை வாசித்த போது அதில் இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க நிகழ்விற்காக லண்டன் வந்திருந்த சாப்ளின் தானே விரும்பி காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டிருந்தார், ஒரு நடிகரோடு தான் பேசுவதற்கு என்ன இருக்கிறது என அவரது வேண்டுதலை காந்தி நிராகரித்துவிட்டார்,

சாப்ளின் ஈஸ்ட் எண்ட் எனும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்தவர், ஏழை எளிய மக்களின் விருப்பத்திற்குரியவர், நம் காலத்தின் மிக முக்கியமான கலைஞன் என்று சரோஜினி நாயுடு எடுத்துச் சொன்னபிறகே காந்தி இந்தச் சந்திப்பிற்கு ஒத்துக் கொண்டார், காந்தி சட்டம் பயில லண்டன் வந்த போது அதே ஈஸ்ட் எண்ட் பகுதியில் தான் குடியிருந்தார், ஆகவே சந்திப்பிற்கு அது ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது

சாப்ளின் ஏன் காந்தியை சந்திக்க ஆர்வம் கொண்டார், லண்டன் வந்திருந்த சாப்ளின் முன்னதாகப் பெர்னார்ட் ஷா, ராம்சேமெக்னால்ட், ஹெச்.ஜி.வெல்ஸ்,சர்ச்சில் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அன்றைய சமூக அரசியல் நிலவரங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார், அதைத் தொடர்ந்தே காந்தியை சந்திக்க விரும்பினார் சாப்ளின்,


லண்டனின் பெக்டன் ரோடில் வசித்துவரும் இந்திய மருத்துவரான டாக்டர் கத்தியாலின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது, தனது நண்பர்களுடன் காந்தி டாக்டரை சந்திக்க வந்திருந்தார், அன்று மாலை ஆறரை மணிக்கு சாப்ளின் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கபட்டிருந்த்து, காந்தி, சாப்ளின் என இரண்டு முக்கியப் பிரமுகர்கள் வருகிறார்கள் எனக் கேள்விபட்டு மக்கள் சாலை முழுவதும் பெரும் திரளாகத் திரண்டிருந்தார்கள், சாப்ளின் காரில் வந்தபோது பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு அளிக்கபட்டது, மரங்களின் மீது ஏறிக் கொண்டு கத்தியால் வீட்டினுள் என்ன நடக்கிறது என்பதைக் காண மக்கள் முண்டியத்தார்கள்

காந்திக்கு சாப்ளினின் திரைப்படங்கள் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவர் பற்றிய அறிமுகத்தை உதவியாளர்கள் தயாரித்துத் தந்திருக்கிறார்கள், சாப்ளினுக்குக் காந்தி இங்கிலாந்தே பயப்படும் சர்ச்சிலை மிரட்டு மிரட்டென மிரட்டுகிறாரே என ஆச்சரியம், முதல்மாடியில் இருந்த சிறிய அறையில் அந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது

சாப்ளின் இந்தச் சந்திப்பில் காந்தியிடம் அவர் ஏன் இயந்திரங்களை எதிர்க்கிறார், இயந்திரமயமாவது காலத்தின் தேவைதானே, இயந்திரங்கள் மனித உழைப்பின் அடுத்தக் கட்ட வளர்ச்சியில்லையா, அதை ஏன் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள், மனித அறிவின் வளர்ச்சியில், விஞ்ஞானத்தின் துணையோடு உருவாக்கபட்டவை தானே இயந்திரங்கள், இவற்றை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் எனக் கேட்டிருக்கிறார்,

அவரது விமர்சனத்தை மௌனமாகக் கேட்டுக் கொண்ட காந்தி தனக்கு இயந்திரங்களின் மேல் ஒரு கோபமும் இல்லை, மனித உழைப்பு முடக்கபட்டுவிடும், மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகிவிடுவதை மட்டுமே நான் எதிர்க்கிறேன், இந்தியாவில் உள்ள கனரக இயந்திரங்களில் பெரும்பான்மை காலனிய ஆட்சியின் காரணமாக உருவாக்கபட்டவை, ஆகவே அங்கே இயந்திரங்களும் காலனியத்தின் அடையாளங்கள் தான், அதற்கு மாற்றாகவே ராட்டையில் நூல் நூற்கவும், மனித உழைப்பில் உருவான பொருளாதார வளர்ச்சியையும் முன்வைக்கிறேன் என்று காந்தி பதில் சொன்னார்

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது காந்தி தனது ஒரு டாலர் கடிகாரத்தைக் கையில் எடுத்து மணி ஏழு ஆகிவிட்டது, அது தங்களின் பிரார்த்தனை நேரம், விருப்பமிருந்தால் அதில் கலந்து கொள்ளுங்கள் எனச் சாப்ளினை அழைத்திருக்கிறார்,

அந்தச் சிறிய அறையில் இருந்த ஒரு சோபாவில் சாப்ளினை உட்கார சொல்லிவிட்டு காந்தியும் அவரது நண்பர்களும் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்,

காந்தி எளிமையாகத் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்வதை வியப்போடு பார்த்த சாப்ளின், சோபாவில் அமர்ந்து இருப்பது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறியிருக்கிறார், அந்தச் சந்திப்பின் முடிவில் காந்தி சரோஜினி நாயுடு சாப்ளின் ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள், இந்தச் சந்திப்பினை பற்றிப் பிபிசி ரேடியோ அன்றிரவு விரிவாக அறிவித்தது, பின்னாளில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக உருமாறியது.

காந்தியின் எண்ணங்களை உள்வாங்கிக் கொண்டே சாப்ளின் பின்னாளில் தனது மார்டன் டைம்ஸ் படத்தில் இயந்திரம் ஒன்றினுள் தான் மாட்டிக் கொள்வது போன்ற காட்சியை வைத்தார் என்று கூறுகிறார் எரிக் பிளாம்

Monday, 28 May 2018

SAVARKAR -A PLANNED MURDERER OF MAHATMA GANDHI BORN 1883,MAY 28







SAVARKAR -A PLANNED 
MURDERER OF MAHATMA GANDHI 
BORN 1883,MAY 28





காந்தியை கொலை செய்ய ஆசீர்வதித்த டுபாக்கூர் தேசிய போராளி சவர்க்கார் பிறந்த நாள் இன்று
சாவர்க்காரும் - பகத்சிங்கும் ஒன்றா?

பார்ப்பனர்கள்தான் எவ்வளவுக் “கெட்டிக்காரர்கள்!” கெட்டிக் காரர்கள் என்று நாம் சொல்லுவது நயவஞ்சகமாக எப்படியெல்லாம் காய்களை நகர்த்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதாகும்.

சில தலைவர்கள் பற்றி சுருக்கமாக வரலாறுகளைக் கூறுவது போன்ற சந்தடி சாக்கில், அவாளின் இஷ்ட தெய்வமான ஆசாமிகளை ஓகோ என்று உருவகப்படுத்திக் காட்டி விடுவார்கள்.

அதிலே “தினமலர்” ஏட்டுக்குத்தான் முதல் பரிசு!
“யார் இவர்கள்?” என்ற தலைப்பில் ரவீந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, ராஜீவ் காந்தி, ராஷ் பிகாரி போஸ், ஜவகர்லால் நேரு இவர்களைப்பற்றி குறிப்புகளைத் தந்துவிட்டு, இறுதியாக இந்தப் பட்டியலில் சாவர்க்காரும் திணிக்கப்பட் டுள்ளார்.

அதன் விவரம் இதோ:

“வீர சாவர்க்கர் (1883-1966): விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற முழுப் பெயருடைய இவர் புரட்சிவாதி. ரஷ்யா, அயர்லாந்து, எகிப்து மற்றும் சீனா வரை இவரது புரட்சி இயக்கத்தின் தொடர்பு பரவியிருந்தது.

பிரிட்டிஷ் அரசு விதித்திருந்த தடையை மீறி பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இவரது புத்தகங்களை வெளியிட்டன. 1910-இல் நாசிக் கலெக்டர் ஜாக்சன் துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை மேல் விசாரணைக்காக கப்பலில் அழைத்து வந்தனர். அதிலிருந்து தப்பிய இவர் கரையை அடைவதற்குள் ஸ்காட்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷ், பகத்சிங் போன்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். இந்தியா விடுதலை அடைந்த பின் இவர் இந்து மகாசபை கட்சியை நிறுவினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது வரலாறு என்ற பெயரில் சிப்பாய் கலகத்தின்போது நடைபெற்ற வரலாற்றுக் குறிப்புகளை பதிவு செய்தார்.
இது “தினமலர்” (26.4.2008) வெளியிட்டுள்ள குறிப்பாகும்.

இதனைப் படிப்போர் என்ன கருதுவார்கள்? சுபாஷ் சந்திரபோசுக்கும், பகத்சிங்குக்கும் முன்னோடி இந்த வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்று தானே கருதுவார்கள்?

பெயரில்தான் “வீர” சாவர்க்கார் என்று இருக்கிறதே தவிர - இவர் எத்தகைய கோழை என்பதை உண்மையான தகவல்களை அறியும் எவரும் முடிவுக்கு வருவார்கள்.

அந்தமான் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். 50 ஆண்டுகள் அவருக்குத் தண்டனை என்றெல்லாம் புகழ் புராணம் படிக்கிறார்களே - இவர் 50 ஆண்டுகாலம் சிறையில் கழித்தாரா? அப்படி கழிக்கவில்லையானால், அவர் சிறையிலிருந்து எப்படி வெளியில் வந்தார்? இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலில்தான் உண்மையான சாவர்க்கார் வெளிச்சத்துக்கு வருகிறார்.

அந்தமான் சிறையில் இருந்த அந்த மூன்று ஆண்டுக்குள் ளேயே நான்கு முறை மன்னிப்பு எழுதிக் கொடுத்த கடைந்தெடுத்த கோழை மனிதர்தான் இந்த சாவர்க்கர். அந்த மன்னிப்புக் கடிதத்திலும் அவர் என்ன குறிப்பிட்டு இருந்தார்? “என்னை விடுதலை செய்தால் நான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாச மாக இருப்பேன்” என்றல்லவா எழுதிக் கொடுத்தார். இல்லை என்று இந்தத் “தினமலர்”, “தினமணி”, “சோ” வகையறாக்களால் மறுக்க முடியுமா?

இவரைப் போய் பகவத்சிங்குக்கு முன்னோடி என்று கூறுவது - மாவீரன் - நாத்திகச் செம்மல் பகவத் சிங்கைக் கொச்சைப்படுத்து வதாகும்.
தூக்குக் கயிறை முத்தமிட்ட அந்தக் கடைசி நேரத்தில்கூட பகத்சிங் கம்பீரமாகவே நின்றான். அரசிடம் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டான். பாச உணர்வின் காரணமாக தனது தந்தையார் கருணை மனு அனுப்பியதற்காக அவரை மிகவும் கடிந்து கொண்டு இருக்கிறார்.

தன்னை விடுதலை செய்யவேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சரணாகதி அடைந்த சாவர்க்காரை அந்த மாவீரனோடு ஒப்பிடலாமா? அப்படி ஒப்பிடுவது கடைந்தெடுத்த மோசடியல்லவா? சுண்ணாம்பை வெண்ணெய் என்று காட்டும் கயவாளித்தனம் அல்லவா?

அதேபோல மாவீரர் சுபாஷ் சந்திரபோஸோடு ஒப்பிட்டு “தினமலர்” எழுதுகிறது. பாமர மக்கள்தானே “தினமலரை”ப் படிக் கிறார்கள். படித்தவற்றையெல்லாம் அப்படியே நம்பி ஏமாறக்கூடிய வர்கள் இந்தப் பாமரர்கள் என்கிற திமிர் பிடித்த எண்ணம்தான் இப்படியெல்லாம் தகிடுத்தத்தமாக இந்தக் கூட்டத்தால் செய்திகளை வெளியிட முடிகிறது.

மதச்சார்பற்ற சக்திகள் இதில் விழிப்பாக இருந்து இதுபோன்ற புரட்டுச் செய்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்து கிறோம்.

Tuesday, 30 January 2018

1948 january 30 mahatma gandhi shot dead





1948 january 30
mahatma gandhi shot dead






70 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 
1948 ஜனவரி 30. 

மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”

சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”

பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்

யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.

அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.


மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.

கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”

அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!

என் உயிர் போகட்டும்!

காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.

மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.

“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.

“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.

காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”

தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.

தனியாள் திட்டமா கொலை?

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.

இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம்

Monday, 2 October 2017

MAHATMA GANDHI - SOME THOUGHTS



MAHATMA GANDHI - SOME THOUGHTS




கடந்த வாரம் நான் எழுதிய வார பத்தி ஒன்று, நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பு மக்களிடையேயும் அது தொடர்பான விவாதம் நிலவி வந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. சிலர் நான் வலுவான முறையில் அக்கருத்தினை கூறியவன் என்றும் வேறு சிலர் முட்டாள்தனமாக நான் கருத்தைக் கூறி முடிவுக்கு வந்துவிடுவதாகவும் கூறினர். சிலர் இத்துடன் எனது அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கணித்தனர்.
எனக்கு வெறுப்புகலந்த எண்ணற்ற மெயில்கள் வந்தன. எனது வாட்ஸ்அப் பாராட்டியும், மோசமாக திட்டியும் பலவித எதிர்வினைகளுடன் கூடிய செய்திகளால் நிரம்பியிருந்தது. தொலைக்காட்சி சானல்கள் முடிவேயில்லாமல் விவாதித்துக் கொண்டிருந்தன. செய்தித்தாள்கள் தலையங்கத்தை எழுதிக் கொண்டிருந்தன. மூத்தபத்திரிக்கையாளர்கள் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தனர். ஆனால் நான் அமைதியாக இருந்தேன்.

எனது கட்டுரை தேசத்தந்தையான மகாத்மா காந்தியைப் பற்றியதல்ல. ஆனால், சுதந்திர காற்றை சுவாசிக்க இந்தியர்களுக்கு அதிகாரத்தை வாங்கித் தந்த அந்த மகாத்மாவைப் பற்றி ஒரு குறிப்பு அதில் உள்ளது. அவர் மகாத்மா காந்தி என அழைக்கப்படுகிறார். நான் காந்தியை பற்றி எழுதும் விமர்சன கருத்துக்கள் தேவையற்றது என்றும் அந்த மாமனிதரை இழிவுப்படுத்தும் வகையில் எழுதுவதாக சில விமர்சகர்கள் கூறினர். நீண்ட காலங்களுக்கு முன் இந்தியாவில் உள்ள எவரும் அவரைப் பற்றி பேசிவிட முடியும். அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் பெருமகன்களில் ஒருவர் அவரைப் பற்றிக் கூறுகையில், “தனிப்பட்ட முறையில் காந்தியைப் பற்றி தெரிந்து கொண்ட பாகியசாலி நான். அவர் ஒரு பரிசுத்தமான மனிதர் என்றும், உயர்ந்த மனிதர் என்றும், துணிச்சல்மிக்கவர் என்றும் இந்த பூமியில் இதுவரை இல்லாத மேன்மைமிகு மகாத்மாவாகவும் இருந்தார் என உங்களுக்கு என்னால் கூற முடியும். அவர் மனிதர்களுக்குள் சிறந்த மனிதர், வீரர்களுக்குள் ஒரு சிறந்த வீரர். தேசபக்தர்களில் ஒரு சிறந்த தேசபக்தர். அவர் மூலம் இந்திய மனிதம் உன்னதமான நிலையை அடைந்துள்ளது எனக் கூட நாம் கூறிவிட முடியும்.” இந்த வார்த்தைகளை கூறியவர் மற்றொரு சிறந்த மனிதரான கோபால கிருஷ்ண கோகலே ஆவார்,

எனது கட்டுரை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக சிலர் கருதுகின்றனர். அது உண்மையா? மற்றொரு நாள் அதைப் பற்றி நான் விவாதிப்பேன். ஆனால், நான் எப்போதும் மதித்துப் போற்றும் ஒரு தனி நபர் உண்டென்றால் அவர் காந்தி மட்டும் தான். நான் சமய மரபுகளை பின்பற்றுபவன் அல்ல. அதுபோலவே, நான் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவனும் அல்ல. ஆனால், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்தியர்களை எழுச்சி கொள்ள செய்வதில் வெற்றி பெறச் செய்த பெருமைக்கு தகுதியுடையவர் ஒருவர் உண்டென்றால் அவர் காந்தியடிகள் மட்டும் தான் என்பதாகவே நான் கருதுகிறேன். அது போன்றே இந்தியாவின் கூட்டு மனசாட்சியை தட்டியெழுப்பியவர் என்றால் அதுவும் மகாத்மா காந்தி மட்டுமே. அதனை அவர் வழக்கத்துக்கு மாறான முறையில் செய்தார். வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் முழுவதும் வன்முறைகளால் நிரம்பி வழியும் போது காந்தியடிகள் அதனை மற்றொரு வழியில் நடைமுறைப்படுத்தினார். வன்முறையில்லா முறைகளை தனது வாழ்வில் நடைமுறைப்படுத்தியதோடு, அவற்றை பிரச்சாரமும் செய்தார்.

ஒரு காலத்தில் அவர் வன்முறைக்கு ஆதரவாளராக இருந்தார் என்பது தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரே இதனை ஒப்புக் கொள்ளுகிறார். “நான் இங்கிலாந்திற்கு சென்ற போது, வன்முறையின் ஆதரவாளனாக இருந்தேன். அதன் மீது எனக்கு நம்பிக்கையும், வன்முறையில்லாமையின் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன்”. ஆனால் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் அவரை மாற்றியது. காந்தி கபடற்றவராக இருந்தார். “1906 இல் எனக்கொரு முக்கிய பணி வந்தது. வன்முறையில் நம்பிக்கை கொண்டு வாழும் மனிதர்களிடையே, வன்முறையற்ற, அமைதியான வாழ்க்கைமுறையை பற்றி எடுத்துறைக்கும் பணி அது.” என 1942 இல் எழுதினார்.
வன்முறை கவர்ச்சிகரமானது. உணர்ச்சிமிக்கதும் கூட. அது மனோவசியப்படுத்துவது. வரலாறு முழுவதும் வன்முறை நிகழ்ச்சிகள் நிறைந்துள்ளன. பல்வேறு காலக்கட்டங்களில் வன்முறை எப்படி மாறியுள்ளது என்றும் வரலாறு போதிக்கிறது. 


1917 இல் நடந்த ரஷ்ய புரட்சி சமீபத்திய வளர்ச்சி. இந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் மார்க்ஸிஸமும் கம்யூனிசமும் உலகம் முழுவதும் பூத்து குலுங்கியது. அது பல புத்திசாலியான தலைவர்களை உற்பத்தி செய்தது. மார்க்ஸிசம் பாட்டாளி வர்க்கத்தின் பெயரால், உழைக்கும் மக்களுக்காக, வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்க,வர்க்க எதிரிகளுக்கு எதிர்வினையாற்ற, முதலாளித்துவத்தின் அடிமைத் தனத்திலிருந்து மக்களை விடுவிக்க வன்முறை அவசியம் என நியாயப்படுத்துகிறது. ஜார் மன்னனை லெனின் அப்புறப்படுத்தியது சமீபத்திய வன்முறை முறையை மெய்ப்பித்துக் காட்டுகிறது. ஆனால், இது போன்ற உதாரணங்களால் கவரப்பட காந்தி ஒரு சாதாரண மனிதரல்ல.
அவர் வன்முறையற்ற போராட்ட முறைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார். சத்யாகிரக போராட்டம் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கான தீப்பந்தமாக இருந்தது. மதன் லால் திங்க்ராவால் சர் கர்சன் வில்லி படுகொலை செய்யப்பட்ட போது ஒட்டுமொத்த இந்தியாவும் அதனை நியாயப்படுத்தி கொண்டிருந்த போது காந்தியடிகள் அதனை கண்டிக்க தயங்கவில்லை.
“கொலையாளிகள் கறுப்பர்களாகவோ வெள்ளையர்களாகவோ என யாராக இருந்தாலும் இந்தியா இத்தகைய கொலையாளிகளின் ஆதிக்கத்தால் எந்த பயனையும் பெறப் போவதில்லை. இது போன்றவர்களின் ஆதிக்கம் ஏற்படுமானால் இந்தியா பாழாகி வீணாகிப் போய்விடும்,” என்று காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி தான் எழுதிய ’மோகன் தாஸ்’ என்ற நூலில் எழுதினார்.

 சவார்க்கர் காந்தியை கொலை செய்ய முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டார். காந்தியின் சிறப்பு, பிரச்சாரங்களில் மட்டும் இருந்துவிடவில்லை. தான் பிரச்சாரம் செய்வதை தானே பின்பற்றுவதிலும், தான் பிரச்சாரம் செய்யும் கொள்கைகளில் உண்மை தன்மையுடன் இருத்தலிலுமே இருந்தது. தான் தனது சொந்த வாழ்வில் பின்பற்றாத எதையுமே அவர் பிரச்சாரம் செய்ததில்லை. இதன் காரணமாகவே அவரது குடும்பம் சில விவகாரங்களை சகிக்க வேண்டியதாக இருந்தது. அவரது மனைவி அதிக நெருக்கடிகளைத் தாங்க வேண்டிய நபராக இருந்தார். 

அவரது தென்னாப்பிரிக்க வாழ்நாட்களில் ஒரு சத்தியாகிரக போராட்டத்தில் காந்தி கைது செய்யப்பட்ட போது கஸ்தூரிபாய் நோய்வாய்ப்பட்டார். அவரது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது பரோலில் சென்று மனைவியை கவனித்துக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் காந்தி அதனை மறுத்தார். நவீனகாலத்தில் எந்த கணவனும் எழுதாத ஒரு கடிதத்தை காந்தி எழுதினார். ‘இந்த செய்தியால் தனது இதயம் துண்டிக்கப்பட்டாலும், சத்யாகிரகம் தன்னை அவரிடம் செல்வதில் இருந்து தடுக்கிறது. தனது மனைவி தைரியத்தை காத்து, போதிய சத்தான உணவுகளை உண்டால் அவரால் பழைய நிலைக்கு திரும்பிவிட முடியும். ஆனால் அதிர்ஷ்டம் வேறு மாதிரி இருந்தாலும், அவர் நான் அருகில் இருக்கும்போது இறந்தால் எப்படி இருக்குமோ அதே மனநிலையை நான் இல்லாத போதும் கொண்டிருக்கவேண்டும்,’ என்று எழுதினார்.”

அவரது மகன் ஹரிலால், தனது நடவடிக்கைகளால் கசப்பான உணர்வை ஏற்படுத்தினார். உண்மையில் பிற்காலத்தில், ஹரிலால் தனது தந்தையிடம் மிகுந்த கோபத்துடனும், அவருடனான உறவை துண்டித்துக்கொண்டார். தனது தந்தையார் தனது கல்வியை அலட்சியப்படுத்தினார் என்பதுடன் தன்னை இங்கிலாந்துக்கு சென்று, தான் விரும்பியபடி சட்டம் படிக்க அனுமதிக்கவில்லை என்பதிலும் காந்தியடிக மீது கடும் கோபத்தில் இருந்தார். ஒவ்வொரு தந்தையரும், ஹரிலால் தனது தந்தை காந்திக்கு எழுதிய கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வரியை படிக்க வேண்டும். “நீங்கள் எங்களை அறிவில்லாதவர்களாக உருவாக்கியுள்ளீர்கள்.” இதிலிருந்து, ஒரு தந்தையாக காந்தியடிகள் தோற்றுப் போனார் என ஒருவர் கூறிவிட முடியும். ஆனால் உண்மை என்னவெனில், காந்தியடிகள் தனது மகனுடைய விவகாரத்தில் கூட சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை என்பதே. ஒவ்வொருவருடனும் அவர் கண்டிப்பாக இருந்தாரென்றால், தனது மகனிடம் கூட அவர் அவ்வாறே இருந்தார்.

சமகால இந்தியாவில், ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகளை மட்டுமே ஊக்குவித்து வரும் நிலையில் காந்தியடிகள் ஒரு ஒளிரும் உதாரணமாக இருந்து வருகிறார். அனைவரும் சமம் என்றும் சமமாகவே பாவிக்கப்பட வேண்டும் என்றே அவரது கருத்தாக இருந்தது. இங்கிலாந்திற்கு சென்று கல்வி உதவித் தொகை பெற்று சட்டம் படிக்க, ஹரிலாலை விட சஹன் லாலே தகுதியானவர் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அதனால் தான் சஹன் லால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காந்தியடிகள் எளிமையானவராக இருந்தார். அவர் சிக்கலான நபராக இருக்கவில்லை. அவரது மெய்மை வெள்ளை அல்லது கறுப்பாக இருந்தது. அவரது வாழ்க்கையில் சாம்பல் நிறத்துக்கு இடம் இல்லாமல் இருந்தது. அவரை பொறுத்த வரை சத்தியம் என்பது ஒரு சமூகம் மட்டுமல்லாமல் தனி நபருக்கும் கூட உண்மையான சோதனையாக இருந்தது. 

ஆனால், துரதிருஷ்டவசமாக சத்தியம் என்பது பின்னிருக்கைக்கு தூக்கி வீசப்பட்டு, விமர்சனங்கள் எல்லாம் இழிவுபடுத்தும் சொற்களாக திரித்துக் கூறப்படும் காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். காந்தி எப்போதுமே சிறந்தவராக இருந்தார். அவர் சிறந்தவராகவே தொடருவார். ஒரு கட்டுரை வரலாற்றில் அவருக்குள்ள இடத்தை குறைத்துப் போட்டுவிட முடியாது. மாறாக, அவரது காலத்தையும், வாழ்வையும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் போது, வரலாறு மேலும் செறிவூட்டப்படும். விவாதம் அதனடிப்படையிலேயே தொடர வேண்டும்.
கட்டுரையாளர்: அசுடோஷ்

Sunday, 2 October 2016

தேசப்பிதா மகாத்மா காந்தி 
பிறப்பு அக்டோபர் 2, 1869



மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" 


[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
இளமை[மூலத்தைத் தொகு]

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.


இளமை வயதில் காந்தியடிகள், வயது 7, 1876

இளமை வயதில் காந்தியடிகள், வயது 7, 1876

பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.


தென்னாப்பிரிக்காவில்[மூலத்தைத் தொகு]

இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.

தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)

அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். 


பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.


தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். 

காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.

1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். 

தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

மும்பை துறைமுகத்தில்[மூலத்தைத் தொகு]

1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.

அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகின்றது)[2]

இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.[3][4]

இந்திய விடுதலைப் போராட்டத்தில்[மூலத்தைத் தொகு]

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.





1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.


உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)

பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)
 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.


காந்தி-ஜின்னா (காங்கிரஸ்-முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை)

காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.

இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

உண்ணாநிலைப் போராட்டங்கள்[மூலத்தைத் தொகு]

முதன்மைக் கட்டுரை: காந்திஜியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்

காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார்.[5]அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார்.

மகாத்மா[மூலத்தைத் தொகு]

காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர்

மறைவு[மூலத்தைத் தொகு]

பிர்லா மாளிகை (காந்தி சமிதி


MKGandhi assassination spot.jpg
Gandhi death.jpg


மகாத்மா காந்தியின் அஸ்தி அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு காட்சி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தியின் புதல்வர்கள் ராம்தாஸ் (கலசத்துடன்) மற்றும் தேவ்தாஸ் ஆகியோருடன்
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

நினைவு நாள்[மூலத்தைத் தொகு]
ஜனவரி 30 இந்தியாவில் தியாகிகள் தினமாக நடத்தப்படுகிறது.

கொள்கைகள்[மூலத்தைத் தொகு]

பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். 




சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார்.

 இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.


சுயசரிதை[மூலத்தைத் தொகு]

காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும்[9] An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

தமிழ்நாடு நினைவுச் சின்னங்கள்[மூலத்தைத் தொகு]

மகாத்மா காந்தி நினைவு மண்டபம் கன்னியாகுமரி

மகாத்மா காந்தி நினைவு மண்டபம் கன்னியாகுமரி
மகாத்மா காந்தி அருங்காட்சியகம்-மதுரை

மகாத்மா காந்தி அருங்காட்சியகம்-மதுரை

தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.[10] இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.[11]

மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் ஏலம்[மூலத்தைத் தொகு]
இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி), அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது. இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும் எந்த தடையும் இந்திய அரசு ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம் செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப் பொருட்களுக்கு ஏற்பட்டது.[12]



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காந்தியும் அம்பேத்கரும்  (பிற்சேர்க்கை)
------------------------------------------------------------------ 

காந்தி சம்பந்தமாய் விக்கிபீடியா பார்த்த போது ஆலய பிரவேசத்தில் காந்திக்கு இஷ்டம் இல்லை என்று அம்பேத்கர் தவறாக குற்றம் சாட்டியிருந்தார் ஏனென்றால் அம்பேத்கர் ஒரு வக்கீல் எப்படிவேண்டுமானாலும் அபாண்டம் பழி சொல்லக்கூடியவர் 
இன்றைக்கு லஞ்சம் பெருகி வளர்வதற்கு இவரும் இவரது இட  ஒதுக்கீட்டு கொள்கையுமே காரணம் 




தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் எழுந்த பொழுது, 
அனைவரும் இந்து மதத்தின் அறத்தைப் பேண வேண்டும் என காந்தி சொன்னார் இட  அம்பேத்கர் எழுதி உள்ளார்.[6]









ஆனால் உண்மை யாதெனில் பழனியில்  உரையாற்றும்போது இப்படி சொன்னார்  மேலும் ஒரு தகவல் காந்தி பலமுறை உருவ வழிபாட்டில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பலமுறை கூறி வந்திருக்கிறார் 
பொதுவாக பிரார்தனையோடு சரி கோவிலுக்கு செல்லும் வழக்கம் காந்தியிடம் இல்லை 


ஆனால் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போகவேண்டும் என்று பிரியப்பட்டார் எனவே மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு வெளியில் வரும் வரை எதோ தனக்குள் முணுமுத்தாரே தவிர யாரிடமும் எதுவும் பேசவில்லை இது நடந்தது
 1946 பிப்ரவரி 2

மறுநாள் பழனியில் 1946 பிப்ரவரி 3 நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போது மதுரையில் ஸ்ரீ மீனாக்ஷியம்மன் கோவில் அரிஜனங்களுக்கு திறந்து விடைப்பெற்றதனால் தான் அங்கு சென்று வழிபட்டேன் அவ்வாறு வழிபட்டபோது ஒரு புது ஆன்மீக முக்கியத்துவத்தையும் உணர்ந்தேன் என்று உரையாற்றினார் 


மேலும் அம்பேத்கர் போன்ற சுயநல ஜாதிய தலைவர்கள் இதுமாதிரி துவேஷங்களை தூண்டி விட்டு பலன் அடையப்பார்க்கிறார்கள்