Showing posts with label JANUARY 30. Show all posts
Showing posts with label JANUARY 30. Show all posts

Tuesday, 16 March 2021

THE LAST DAY OF MAHATMA GANDHI JANUARY 30,1948

 


THE LAST DAY OF MAHATMA GANDHI

 JANUARY 30,1948


#காந்தியின் #கடிகாரம்


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் எழுதிய கட்டுரை இது. காந்தியின் இறுதி தருணங்களை கண் முன்னாள் நிறுத்துகிறார் . காந்தி தன் நேரத்தையும் பிறரின் நேரத்தையும் மதித்தவர்.காந்தியின் இறுதி நாட்களை வாசிக்கும் பொழுது ஓர் பெறும் நாவலின் இறுதி பக்கத்தை புரட்டுவது போல் மனம் படபடக்கிறது, கனக்கிறது .காந்தியின் கடிகாரம் வழியாக காலவெளியில் ஓர் பயணம் போல் உள்ளது இக்கட்டுரை.

காந்தியைப் பற்றி வாசிப்பது எப்போதுமே மனநெருக்கத்தைத் தரக்கூடியது. சில வாரங்களுக்கு முன்பு காந்தியின் கடைசி நாளைப் பற்றிய விரிவான குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது காந்தியின் கடிகாரம் பற்றிய ஒரு குறிப்பை வாசித்தேன், அது  Ingersoll ‘Turnip’ pocket watch, என்ற காந்தி கடிகாரம் குறித்த தேடுதலுக்கு என்னை அழைத்துச் சென்றது.


இணையத்திலும் புத்தங்களிலும் தேடி வாசித்த போது காந்தியின் கடிகாரம் ஒரு சிறப்பு அடையாளம் போல மனதில் உருக் கொண்டது.

காந்தி காலத்தில் கடிகாரம் கட்டிக் கொள்வது சராசரி இந்தியர்களின்  இயல்பிலை. லண்டனில் படிக்க சென்றவர் காந்தி என்பதால் அவரது சகோதரர் இங்கர்சால் கம்பெனியின் பாக்கெட் வாட்ச் ஒன்றினை காந்திக்கு வாங்கி தந்திருக்கிறார்

பாக்கெட் வாட்ச்சுகளை உருவாக்கியவர்கள் ஜெர்மனியர்கள். தங்க மூலாம் பூசப்பட்ட பைக் கடிகாரங்கள் பிரபுக்களின் தனித்துவ அடையாளமாக கருதப்பட்டது. அதன்பிறகு ஸ்விட்சர்லாந்தில் பாக்கெட் கடிகாரங்கள் தயாரிப்பது அதிகமானது. ஆனால் அதன் விலை மிக அதிகம். 


1881 ல் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பாக்கெட் கடிகாரங்களை  தயாரிக்க  Robert H. Ingersoll  என்பவரது அமெரிக்க நிறுவனம் முன்வந்தது. குறிப்பாக ரயில்வே தண்டாவளங்களை அமைக்கும் தொழிலாளர்களையும் அடித்தட்டு மக்களையும் மனதில் கொண்டு  இங்கர்சால் உருவாக்கிய பாக்கெட் கடிகாரங்கள் விலை மலிவானவை.  ஒரு டாலர்  விலை. ஒரு லட்சம் கடிகாரங்களை விற்று  அந்த நிறுவனம்  உலகெங்கும் பிரபலமாகியது. 

1908ல் அந்த நிறுவனம் லண்டனில் தன் விற்பனையை துவக்கியது. அங்கு அதன் விலை எட்டு ஷில்லிங். காந்தி பயன்படுத்திய பாக்கெட் கடிகாரம் அத்தகையதே. இந்தக் கடிகாரத்தில் நொடி முள் கிடையாது. 


காந்தி கடிகாரத்தை ஒரு நூலால் இணைத்து தன் இடுப்பில் சேர்த்து கட்டிக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார்.  பலநேரங்களில் அவரது வேஷ்டி மடிப்பினுள் கடிகாரம் மறைந்து கிடந்திருக்கிறது. நேரம் தவறாமை என்பதை வாழ்நாள் முழுவதும் கறாராக கடைபிடித்தவர் காந்தி.

காந்தி தன் ரயில் பயணங்களில் கூட நேரத்தை வீணடிப்பதில்லை. மாறாக அவர் கடிதம் எழுதுவதற்கும், அறிக்கைகள் உருவாக்குவதற்கும் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள கூடியவர். அப்படி ஒரு முறை ரயிலில் பயணம் செய்யும் போது அவருடன் இருந்த உதவியாளரிடம் நேரம் என்னவென்று கேட்டிருக்கிறார். 

உதவியாளர் தன் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு ஐந்து மணி என்று சொன்னார். காந்தி அதை நம்பாமல் தன்னுடைய கடிகாரத்தை எடுத்து சரி பார்த்தார். மணி ஐந்தாக இன்னும் ஐந்து நிமிசங்கள் இருந்தன. உடனே உதவியாளரிடம் இன்னும் ஐந்தாகவில்லையே என்றதும் அவர் ஆமாம் தற்போது நாலு ஐம்பத்தைந்து என்றார். 

அதை கேட்டதும் காந்தியின் குரல் கடுமையாகியது.  ஐந்து நிமிசம் என்பது இந்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. அந்த ஐந்து நிமிசத்தில் எது வேண்டுமானாலும் நடந்துவிடலாம். ஒரு நிமிசத்தில் எவ்வளவோ வெற்றி தோல்விகள் மாறியிருக்கின்றன. ஆகவே கையில் கடிகாரம் கட்டிக் கொண்டும் சரியான நேரம் சொல்ல  தவறிய உங்களை என்ன செய்வது, எதற்காக உங்களுக்கு கடிகாரம் என்று கடிந்து கொண்டிருக்கிறார்.

மணி ஐந்தை நெருங்கி கொண்டிருக்கும் போதோ ஐந்தாகிவிட்டது என்று சொல்வது பொது வழக்கம். ஆனால் காந்தி ஒவ்வொரு நிமிசமும் மிக முக்கியமானவை என்பதை உணர்ந்தவர். ஆகவே அதை கண்டித்திருக்கிறார். அந்த அளவு கால கண்டிப்பு கொண்டவர். 

லண்டனில் அவரோடு இணைந்திருந்த கடிகாரம் இறுதி நிமிசம் வரை கூடவே பயணம் செய்திருக்கிறது. இடையில் ஒரு முறை அந்த கடிகாரத்தை ரயிலில் வரும்போது யாரோ திருடி விட்டார்கள். காந்தி அதற்கு அடைந்த துயரம் அளவிட முடியாதது. ஆனால் திருடியவன் சில நாட்களில் அவனே தேடி வந்து காந்தியின் கடிகாரத்தை திரும்ப ஒப்படைத்துவிட்டான்.

சச்சரவும் வீண்விவாதங்களும் ஏற்படும்நேரங்களில் காந்தி தன் கடிகாரத்தை எடுத்து பார்த்து பிரார்த்தனைக்கு உரிய நேரமாகிவிட்டது என்று எழுந்து கொண்டதால் பல பிரச்சனைகள் ஆரம்ப நிலையிலே முடிந்து போயிருக்கின்றன. அவரளவில் அந்த கடிகாரம் ஒரு வலிமையான ஆயுதம். அதன் துல்லியம் அவரது நாளை நிமிச நிமிசமாக ரசித்து கடந்து செல்ல வைத்திருக்கிறது.

காந்தி கொல்லபடும் தினத்தில் அவர் காலையிலிருந்து தொடர்ந்த பணியில் இருந்திருக்கிறார். அவருக்கு இரண்டு நாட்களாகவே இருமல் இருந்திருக்கிறது.இயற்கை வைத்தியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் அதற்கான மருந்தாக அவரே தயாரித்த கிராம்பு பொடி மருந்து தீர்ந்து போய் அன்றைய இரவுக்கான மருந்து தேவையாக இருந்திருக்கிறது. அதை உடனே தயாரிக்கும்படி அவரது பேத்தியான மனுவை ஏற்பாடு செய்கிறார்.

அன்று காலை 7 மணிக்கு காந்தியை சந்திக்க முதல் பார்வையாளராக வந்தவர் ராஜன். அமெரிக்கா செல்ல இருந்தவர் என்பதால் அவரோடு சில நிமிசங்கள் காந்தி செலவிடுகிறார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் காந்தியின் உடல்நிலை நலிவடைந்திருந்தது. அதிகம் காற்றுள்ள வெட்டவெளியில் அவர் நிற்பது கூட சிரமம் தருவதாகயிருந்தது. 

அதையும் மீறி அன்று அவர் தனியாக நடந்து கழிப்பறை வரை சென்று வந்தார். ஏன் தங்களை அழைக்கவில்லை என்று அவரது மெய்செவிலிகள் போலிருந்த மனுவும் ஆபாவும் கேட்ட போது தனியே நடக்குமளவு உடலில் தெம்பு வந்துவிட்டது பார்த்தீர்களா என்று கேலி செய்தார் காந்தி

அதன்பிறகு பியாரிலாலுக்கு காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய தீர்மானங்களை தந்து முழுமையாக பார்வையிட்டு வேண்டிய திருத்தங்கள் செய்யச் சொல்கிறார். வெளியே காலையில் இருந்தே குளிராக இருந்த காரணத்தால் அறை எங்கும் கணப்பு அடுப்புகள் எரிந்து கொண்டிருக்கின்றன. 

தினசரி நாளிதழ்களை காந்தி வாசித்து முடிக்கிறார். அன்றாடம் அவருக்கு அளிக்கபடும் மசாஜ் நடக்கிறது. அதன்முடிவில் பியாரிலால் திருத்தங்களை மேற்கொண்டுவிட்டரா என்று விசாரித்துவிட்டு மதராஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுபாடு குறித்து உரிய கவனம் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்பதை நினைவுறுத்துகிறார்.

காந்தியை குளிக்க அழைத்து செல்கிறார் மனு. குழந்தையை போல அவர் காந்தியை கவனித்து கொள்ளக்கூடியவர். காந்தி இளவெந்நீரில் குளிக்கிறார். அதன் பிறகு உடலை முழுமையாக துடைத்துக் கொண்டு திரும்புகிறார். அவரது உடல் எடை சோதிக்கபடுகிறது. அன்று அவர் 109 பவுண்ட் எடையிருக்கிறார்.

காந்தி அப்போது பெங்காலியில் எழுதக் கற்றுக் கொண்டிருந்தார். ஆகவே அன்றும் அவர் பெங்காலி மொழியில் சில வாக்கியங்கள் எழுதி பயிற்சி செய்கிறார்.

9.30 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறார் காந்தி.  ஒரு டம்ளர் ஆட்டுபால். நான்கு ஆரஞ்சு பழங்கள். காரட் சாறு, வேகவைத்த காய்கறிகள், இஞ்சி கலந்த எலுமிச்சை சாறு. சாப்பாட்டின் போதும் பியாரிலாலோடு தீர்மானங்கள் பற்றி உரையாடுகிறார். நவகாளியில் ஏற்பட்டு வரும் கலவரத்திற்கு பிறகான மாறுதல்கள் குறித்து ஆழ்ந்த அக்கறையுடன் விசாரிக்கிறார்.

அதன்பிறகு காந்தி தென்னாப்பரிக்காவில் இருந்தபோது அவரோடு நண்பராகயிருந்த ருஸ்தம்  சோராப்ஜியின் குடும்பத்தினர்களை சந்திக்கிறார். பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். அவர்கள் சென்றபிறகு சிறிது நேரம் ஒய்வு கொள்கிறார். 

தேன்கலந்த வெந்நீர் ஒய்விற்கு பிறகு தரப்படுகிறது. அதை குடித்துவிட்டு அடுத்த பணியான இஸ்லாமிய தலைவர்களோடு உள்ள சந்திப்பிற்கு தயார் ஆகிறார். தொடர்ந்து நடைபெறும் வன்முறை மற்றும் கலவரங்கள் குறித்த தனது மனவேதனையை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். மத ஒற்றுமை குறித்து கருத்துகளை கேட்டு அறிகிறார். தான் வார்தா புறப்பட போவதை பற்றி தெரிவிக்கிறார். 

இதற்கிடையில் நேரு பட்டேல் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மனவிரிசல் மற்றும் அதிகாரசண்டை குறித்து உதவியாளர்களிடம் காந்தி ஆதங்கபடுகிறார். இருவரையும் தனித்தனியே சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். அன்றிரவு 7 மணிக்கு நேரு சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கபடுகிறது. நாலு மணிக்கு பட்டேல் சந்திப்பதற்காக சொல்கிறார்.

மதியம் தன் உடலில் களிமண் பூசிக் கொண்டு இளவெயிலில் மண்சிகிட்சை செய்து கொள்கிறார் காந்தி. மனுவும் ஆபாவும் அவரது கால்களை தேய்த்துவிடுகிறார்கள்.  பிரட்ஜ் கிருஷ்ணா நாளிதழ் செய்தி ஒன்றை வாசித்து காட்டுகிறார். அதில் காந்தி அரசியலை விட்டு விலகி  இமயமலையில் சென்று ஒய்வெடுத்து கொள்ள வேண்டும். அவரால் தான் இத்தனை பிரச்சனையும்  என்று வெளிப்படையாக   தாராசிங் என்பவர் அறிவித்திருக்கிறார் . முதல்நாள் இதுபோன்று ஒரு அகதி ஒருவனும் அவருக்கு நேராக கத்தியது நினைவிற்கு வருகிறது. காந்தியின் முகத்தில் கலக்கமும் யோசனையும் ஒடுகின்றன. 

மதியம் 2. 30 க்கு வழக்கமான அவரது நேர்காணல்கள் சந்திப்புகள் தொடர்கின்றன. ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து வந்த இரண்டு பஞ்சாபிகள் அவரை நேர்காணல் செய்கிறார்கள். இலங்கையிலிருந்து வந்த பிரதிநிதி ஒருவர் தன்மகளோடு காந்தியை சந்திக்கிறார்.  அந்தபெண் காந்தியிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொள்கிறாள். அது தான் காந்தி கடைசியாக போட்ட கையெழுத்து என்பதை அப்போது அந்தப் பெண் அறியவில்லை. 

மூன்று மணி அளவில் ஒரு பேராசிரியர் காந்தியை சந்தித்து புத்தர் காலத்திலிருந்து வரும் போதனை முறை பற்றி விவாதிக்கிறார். அதன்பிறகு 3.15க்கு பிரெஞ்சு புகைப்படகலைஞர் ஒருவர் தன் புகைப்படங்களை காந்தியிடம் காட்டி விவரிக்கிறார். நான்கு மணிக்குள் அவரது நேர்காணல்கள் நிறைவடைகின்றன

பட்டேலை சந்திப்பதற்கு தயார் ஆகிறார் காந்தி. இடையில் ஏதோ யோசனையுடன் சனிக்கிழமை வார்தா செல்வதற்கான ரயில்பயண ஏற்பாடுகளை கவனிக்க சொல்கிறார். நடந்து கழிப்பறைக்கு செல்கிறார்.

பட்டேல் அவரது மகள் மற்றும் உதவியாளர் மணி வந்து சேர்கிறார்கள்.

கழிப்பறையிலிருந்து காந்தி வரும்வரை அவர்கள் கிருஷ்ணாவோடு  பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  காந்தி பட்டேல் சந்திப்பு துவங்குகிறது. நேரடியாக மனதில் உள்ளதை அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். தான் நேருவிடம் பேசுவதாக வாக்குறுதி அளிக்கிறார் காந்தி.

அந்த உரையாடலின் நடுவே கந்தியவாரிலிருந்துவந்திருந்த இரண்டு தலைவர்கள் காந்தியை சந்திக்க இயலுமா என்று காத்திருக்கிறார்கள். மனு உள்ளே நுழைந்து அதைப்பற்றி கேட்கிறார். உடனே காந்தி பிரார்த்தனை முடிந்தவுடன் சந்திப்பதாக சொல்லி அவர்களையும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள சொல்கிறார் .

காந்திக்கு மீண்டும் கேரட் சாறும் வேகவைத்த காய்கறிகளின் சாறும் ஆரஞ்சு பழச்சாறும் தரப்படுகிறது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்துகிறார். தனது ராட்டையை கொண்டு வரச்சொல்லி சில நிமிசங்கள் நூல் நூற்கிறார். அதுவரை அவரது எல்லா நாளும் போலவே இயல்பாக கடந்து செல்கிறது காலம்

அதே நாளின் காலையில் முப்பத்தியேழு வயதான கோட்சே, பழைய டெல்லி ரயில்வே நிலைய தங்குமிடத்தின் ஆறாம் எண் அறையில் விழித்து எழுகிறான். அன்றைக்கு அவனுக்கு முக்கியமான பணியிருக்கிறது. அவனை நாராயன் ஆப்தேயும், விஷ்ணு கர்கரேயும் சந்திக்கிறார்கள். 

காந்தியை கொலை செய்ய போகின்ற சதியில் எட்டு பேர் ஈடுபட்டிருந்தார்கள். அதில் இவர்கள் முக்கியமானவர்கள். ஒருவேளை கோட்சே காந்தியை கொல்ல தவறினால் அவரை கொல்வதற்கான இரண்டாவது குழு மக்களோடு கலந்திருக்க வேண்டும் என்பதை பற்றி திட்டமிடுகிறார்கள். 

கோட்சே துப்பாக்கி சுடுவதில் அதிக பயிற்சி இல்லாதவன். அவனிடம் ஏழ குண்டுகள் போடப்படும் துப்பாக்கி இருந்தது. அதை காலையில் ஒருமுறை எடுத்து பார்த்து கொண்டான். முந்தைய இரவு சரியான உறங்கமின்மைக்கு அவன் ஆட்பட்டிருந்தான். அந்த சோர்வு அவன் முகத்திலிருந்தது. தன் மனக்கலக்கதை அவன் முகம் காட்டிக் கொள்ளவில்லை. 

பின்மதிய நேரத்தில் அவர்கள் பிர்லாமந்திருக்கு சென்றார்கள். இரண்டுபேரும் சாமி கும்பிட்டார்கள். கோட்சே சாமி கும்பிடவில்லை.  4.30 மணியளவில் கோட்சே தயார் ஆனான். புதிதாக வாங்கியிருந்த காக்கி உடையை அணிந்து கொண்டான். 

ஜனவரி 20ல் காந்தியை கொல்ல செய்யப்பட்ட ஏற்பாடு ஒன்று தோற்றுபோகவே அன்றிலிருந்து  காந்தியின் பாதுகாப்பிற்காக சீருடை அணியாத காவலர்கள் முப்பது பேர் பிர்லா மாளிகையில் காவல் இருந்தார்கள்.

அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருப்பார்கள் என்பதை பற்றி கோட்சேயுடன் மறுமுறை விவாதித்து கொள்கிறார்கள். பாதுகாப்பு சோதனை கடுமையாக இருக்குமா என்ற அச்சம் அவர்களுக்குள் தலையெடுக்கிறது. அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

கோட்சே ஒரு குதிரைவண்டியில் சென்று பிர்லா மாளிகையில் இறங்குகிறான். சில நிமிசங்களுக்கு பிறகு இன்னொரு வண்டியில் ஆப்தேயும கர்கரேயும் வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல பாதுகாப்பு சோதனையில்லை. பிரார்த்தனைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

காந்தி உள்ளே ஒரு அறையில் பட்டேலுடன் பேசிக்கொண்டிருப்பதை அறியாமல் ஏன் தாமதமாகிறது என்று கோட்சே அங்கிருந்த மக்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

பட்டேலுடன் பேச்சுவார்த்தை நீண்டு போகிறது. பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்று மனு தலையிட்டு சொல்கிறாள். காந்தி எழுந்து கொள்கிறார். பத்து நிமிசம் தாமதமாகியிருப்பது தெரிய வருகிறது. காந்தி தன் கடிகாரத்தை தேடுகிறார். காணவில்லை. அது ஆபா கையிலிருந்தது, அதற்குள் அவர்கள் காந்தியை அழைத்துக் கொள்கிறார்கள்.

காந்தி தனக்கு தாமதம் என்பது பிடிக்காது என்று கடிந்து கொண்டபடியே செவிலிகள் கடவுளே குறுக்கே நின்றாலும் நோயாளிகளை நேரம் அறிந்து மருந்து தந்து கவனிக்கவேண்டும். நீங்களும் அப்படி பட்டவர்கள் தான் என்று சொல்லியபடியே நடக்கிறார். வெளியே குளிர்காற்று அடிக்கிறது. குளிர்கால சூரியன் வெளிறிப்போய் ஒடுங்கிக் கொண்டிருந்தது. வெண்ணிற சால்வையை தோளோடு சேர்த்து போர்த்திக் கொள்கிறார். 

வலது பக்கம் மனு இடது பக்கம் ஆபா இருவரும் காந்தியை தாங்கி பிடித்துக் கொள்கிறார்கள். காந்தி மெதுவாக நடந்து வருகிறார். மனு கையில் காந்தியின் கண்ணாடி கூடு குறிப்பேடு மற்றும் சில அத்யாவசிய பொருட்கள் இருந்தன. காந்தியின் பின்னால் பிர்லா குடும்பத்தினர் சிலரும் கத்தியவார் தலைவர்கள் இருவரும் வருகிறார்கள். 

எப்போதும் காந்திக்கு முன்னால் நடந்துவரும் சுசிலாநய்யார் அன்று வரவில்லை. காந்தியின் பாதுகாவல் போல தினசரி முன்னால் நடந்து செல்லும் குருபஷன் சிங்கூட அன்று வரவில்லை. காந்தி ஏன் அன்று தாமதமாக பிரார்த்தனைக்கு வருகிறார் என்று எவருக்கும் தெரியவில்லை.

காந்தி தன் சாவை நோக்கி நடக்க துவங்குகிறார். போர்பந்தரின் வீதியில் துவங்கிய அவரது நடை இறுதிநாள் வரை நீண்டு கொண்டே சென்றது. எவ்வளவு தூரம் எத்தனை ஆயிரம் மைல்கள் அந்த பாதங்கள் கடந்து சென்றிருக்கின்றன. ராஜ்கோட்டிலிருந்து லண்டனுக்கு சென்றிருக்கிறது. லண்டனிலிருந்து இந்தியா திரும்பியிருக்கிறது. அங்கிருந்து தென்ஆப்ரிக்கா. அங்கிருந்து மீண்டும் இந்தியா. அதன்பிறகு கன்யாகுமரிவரையான முழுஇந்திய பரப்பை சுற்றியலைந்திருக்கிறது. வன்முறை, கலவரம், மதக்கலவரம் அத்தனையின் ஊடேயும் காந்தி நடந்திருக்கிறார். அவர் கால்கள் சரித்திரசாட்சி கொண்டது.

அவ்வளவு நடந்து அலைந்த கால்கள் கடைசியாக சாவை நோக்கி நடக்க துவங்கின. வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி பசுந்தரை வழியாக வேகமாக அந்த கால்கள் சாவை நோக்கி முன்னேறுகின்றன. அவர் மனது லகுவாக இருக்கிறது. தன்னை கேரட் தின்னும் ஆடுமாடு போலாக்கிவிட்டீர்களே என்று தன்னோடு வரும் மனுவிடம் கேலி செய்கிறார். 

காந்தி நடந்துவருவது கோட்சே கண்களில் தென்படுகிறது. அவன் முன்னேறி செல்வதா வேண்டமா என்ற தயக்கம் கொள்கிறான். காந்தியின் சால்வை காற்றில் அசைவது அவன் கண்ணில் படுகிறது. சுற்றிலும் பார்க்கிறான். காந்திக்கும் அவனுக்கும் இருநூறு அடி இடைவெளியே இருக்கிறது. கூட்டத்தை விலக்கி கொண்டு முன்னேறி செல்கிறான்.  நூற்றுக்கணக்கான மக்கள் பிரார்த்தனைக்காக காத்திருக்கிறார்கள்.

காந்தி சாவை நெருங்கி அடுத்த அடியை எடுத்து வைக்கிறார். அதே நேரம் நேரு தன் அலுவலகத்தில் பணியில் இருக்கிறார். பட்டேல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். மவுண்ட்பேட்டன்  தன் வசிப்பிடத்தில் உரையாடிக்கொண்டிருக்கிறார். மீராபென் இமயமலையில் உள்ள ஆசிரமத்தில் இருக்கிறார். லைப் இதழின் புகைப்பட நிபுணர் மார்க்ரெட் புருக் சில தெருக்கள் தள்ளியிருந்த விடுதியில் காத்திருக்கிறார். வின்சென்ட் சீன் என்ற அமெரிக்கபத்திரிக்கையாளர் காந்தியின் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கபட்டு பிரார்த்தனை முடிந்து காந்தி வரட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

வழக்கமாக காந்தியின் குறுக்கே வரும் பார்வையாளர்கள் அன்றில்லை. காந்தி பிரார்த்தனை மேடையை நெருங்கி செல்கிறார். 

கோட்சே தனது இத்தாலிய பெர்தா துப்பாக்கியை தொட்டுப்பார்த்துக் கொள்கிறான். அது காத்துக் கொண்டிருக்கிறது. காந்தியின் முன்னால் போய் நிற்கிறான். அவனது உதடுகள் நமஸ்தே காந்திஜி என்று முணுமுணுக்கின்றன.

காந்தியின் கைகள் கூப்புகின்றன. வணக்கம் சொல்கிறார்.  மனு அந்த மனிதன் காந்தியின் கால்களில் விழுந்து வணங்க போகிறானோ என்று நினைக்கிறாள். அது காந்திக்கு பிடிக்காத செயல் என்பதால் அவனை தவிர்க்க அவரை சிரமப்படுத்தாதீர்கள் சகோதரா என்று சொல்கிறாள் 

காந்தியின் கண்களை கோட்சே எதிர்கொள்கிறான். சலனமற்ற கண்கள். கோட்சேயின் வலது கை துப்பாக்கியை எடுக்கிறது. இடது கையால் மனுவை தள்ளிவிடுகிறான். அவள் தடுமாறுகிறாள். கையிலிருந்த பொருட்கள் கிழேவிழுகின்றன. அவளுக்கு ஏதோ நடக்க போகிறது என்று புரிகிறது. அதற்குள் கோட்சேயின் வலது கை துப்பாக்கியை ஏந்துகிறது.

காந்தியின் கண்கள் துப்பாக்கியை எதிர் கொள்கின்றன. கோட்சே துப்பாக்கியை இயக்குகிறான். மூன்று முறை வெடிக்கிறது. அடிவயிறு இதயம் என தோட்டா பாய்கிறது. காந்தி தான் சுடப்பட்டோம் என்பதை உணர்ந்தபடியே நிற்கிறார். அந்த கண்கள் உலகை கடைசி முறையாக காண்கின்றன. அவரது உடல் சரிகிறது. கால்கள் நடக்க மறுத்து ஒடுங்குகின்றன.  புகையின் நடுவில் கூக்குரல் எழுகிறது. காந்தி மண்ணில் சரிகிறார். அவரது உதடு முணுமுணுக்கிறது. ஆஸ்திரேலிய கம்பளியால் தயாரிக்கபட்டிருந்த அவரது வெண்ணிற சால்வை ரத்தகறை படிகிறது. கூச்சலும் சப்தமும் அதிகமாகிறது. காந்தியின் கடிகாரம் தரையில் விழுந்து அப்படியே நிற்கிறது. அப்போது மணி 5.17. அதன் பிறகு அந்த கடிகாரம் ஒடவேயில்லை.

லண்டனில் தனித்திருந்த நாட்களில் துவங்கி இறுதி நிமிசம் வரை அவரோடு இருந்த கடிகாரம் இன்று வெறும்காட்சிப்பொருளாக உள்ளது. ஆனால் ஒடாத அந்த கடிகாரத்தில் இந்தியாவின் சரித்திரம் புதையுண்டு உள்ளது.

காந்தியின் கொலைச்சதி விசாரணையின் போது சதிவழக்கில் குற்றசாட்டப்பட்ட கோட்சேயின் சகோதரன் நீதிமன்றத்தில் நாங்கள் செய்தது கொலையில்லை. அது ஒருசேவை. குற்றமாக அதை நாங்கள் நினைக்கவில்லை. ஒருவேளை அவரது கடிகாரத்தை  திருடி பிடிபட்டிருந்தால் அதை குற்றம் என்று சொல்வோம். இது அப்படியானதில்லை என்று குறிப்பிடுகிறார்

அங்கும் காந்தியின் கடிகாரம் குறிப்பிடப்படுகிறது.

தன்வாழ்நாளில் காந்தி ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்ததில்லை. எவருக்காகவும் நேரத்தை வீண் அடித்ததில்லை. அவரது எளிமை இன்று பரிகசிக்கபடுகிறது.ஆனால் அதன் வலிமையும் சிறப்பும் நம்மால் கைக்கொள்ள முடியாது. 

காந்தியை நினைவு கொள்வோம். காந்தியை பயில்வோம். செயல்படுத்துவோம். அதற்கான தேவையும் அவசியமும் இன்று அதிகமிருக்கிறது.

#நன்றி -எஸ்.#ராமகிருஷ்ணன்



Sunday, 31 January 2021

CHARLES I WAS BEHEADED 1649 JANUARY 30

 

CHARLES I WAS BEHEADED 1649 JANUARY 30




1649 ஜனவரி 30 -முதலாம் சார்லஸ் மன்னனுக்கு பகீரங்கமாக மக்கள் முன் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.



முதலாம் சார்லசு (Charles I, 19 நவம்பர் 1600 - 30 சனவரி 1649[1] இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் அரசராக 1625 மார்ச் 27 முதல் 1649 இல்சனவரி 30 கோடரியால் தலை துண்டிக்கப்படும் வரை வரை பதவியில் இருந்தவர்.
சார்ல்சு இசுக்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்சு மன்னரின் இரண்டாவது மகன் ஆவார். ஆனாலும், தந்தை ஜேம்சு இங்கிலாந்தின் ஆட்சியை 1603 இல் பெற்றதை அடுத்து சார்லசு இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்து, மீதமுள்ள தனது வாழ்க்கையை அங்கேயே கழித்தார்.[2] 1612 இல் ஜேம்சு மன்னரின் மூத்த மகன் இளவரசர் என்றி பிரெடெரிக் இறந்ததை அடுத்து,[3] சார்ல்சு இங்கிலாந்து, ஐயர்லாந்து, இசுக்கொட்லாந்து இராச்சியங்களுக்கு முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டார். 1623 இல் சார்ல்சிற்கு எசுப்பானிய ஆப்சுபூர் இளவரசி ஒருவரைத் திருமணம் செய்து வைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.[4] பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்சின் என்றியெட்டா மரியா என்பவரை சார்ல்சு திருமணம் புரிந்தார்.[5]
தந்தையின் இறப்பிற்குப் பின்னர், முதலாம் சார்லசு 1625 இல் மூன்று இராச்சியங்களுக்கும் அரசனாக முடிசூடினார். சார்லசு மன்னரின் சிறப்புரிமை அதிகாரத்தைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து நாடாளுமன்றம் முனைந்ததை அடுத்து சார்லசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையில் மோதல் வெடித்தது. அரசர்களின் தெய்வீக உரிமையில் நம்பிக்கை கொண்டிருந்த சார்லசு, தனது மனசாட்சியின் படி ஆட்சி முடியும் என நினைத்தார். அரசரின் பல கொள்கைகளை நாடாளுமன்றத்தினர் எதிர்த்தனர், குறிப்பாக நாடாளுமன்ற அனுமதி இன்றி வரி வசூலித்தல், மற்றும் ஒரு கொடுமையான, கேட்பாரற்ற அரசரின் நடவடிக்கைகள் அவருக்கு எதிராகத் திரும்பின. உரோமன் கத்தோலிக்கப் பெண்ணை மணந்தமை, மற்றும் அவரது கத்தோலிக்கம் சார்பான கொள்கைகள் கரஞ்சீர்திருத்தச் சமயவாதிகள் (பியூரித்தான்கள்), மற்றும் கால்வினீஸ்து சீர்திருத்தவாதிகள் அவர் மீது அவநம்பிக்கை கொள்ள வைத்தன.[6] ரிச்சார்டு மொன்டேகு, வில்லியம் லோட் போன்ற உயர் திருச்சபைத் தலைவர்களை அவர் ஆதரித்தாலும், முப்பதான்டுப் போரில் சீர்திருத்தவாதிகளின் சக்திகளுக்கு உதவத் தவறினார்.[7] இசுக்கொட்லாந்து திருச்சபையினர் ஆங்கிலிக்க நடைமுறைகளைப் பின்பற்ற சார்ல்சு கட்டாயப்படுத்தியமை ஆயர்களின் போருக்கு வழிவகுத்தது. இவை அனைத்தும், ஆங்கிலேய, இசுக்கொட்லாந்து நாடாளுமன்றங்களை வலுப்படுத்தவும், மற்றும் அவரது சொந்த வீழ்ச்சிக்கும் மட்டுமே உதவியது.
1642 முதல், இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் போது சார்ல்சு ஆங்கிலேய, இசுக்கொட்லாந்து நாடாளுமன்றங்களின் இராணுவத்தினருடன் போரில் ஈடுபட்டார். இப்போரில் 1645 ஆம் ஆண்டில் தோல்வியடைந்ததை அடுத்து, சார்ல்சு இசுக்கொட்லாந்துப் படையினரிடன் சரணடைந்தார். அவர்கள் அவரை இங்கிலாந்து நாடாளுமன்றத்திடம் கையளித்தனர். கடத்தியவர்களின் அரசியல்சட்ட முடியாட்சிக் கோரிக்கைக்கு சார்ல்சு இணங்க மறுத்தார். 1647 நவம்பரில் சிறையில் இருந்து தப்பி வெளியேறினார். ஆனாலும், வைட்டுத் தீவில் அவர் மீண்டும் பிடிபட்டார். 1648 இறுதியில் ஆலிவர் கிராம்வெல்லின் புதிய முன்மாதிரியான இராணுவம் இங்கிலாந்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சார்ல்சு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1649 சனவரி 30 கோடரியால் தலை துண்டிக்கப்பட்டார் . இங்கிலாந்தில் முடியாட்சி அகற்றப்பட்டு, பொதுநலவாய இங்கிலாந்து என்ற புதிய குடியரசு அறிவிக்கப்பட்டது. ஆனாலும், 1660 இல் முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டு முதலாம் சார்லசுவின் மகன் இரண்டாம் சார்லசு அரசரானார்.

பாராளுமன்றத்திற்கும் சார்லஸ் மன்னனுக்கும் நடந்த 'இங்கிலிஷ் சிவில் வார்'. அரச விசுவாச படைக்கும் ஆலிவர் கிராம்வெல் தலைமையிலான படைக்கும் நடந்த யுத்தம்.

நல்ல குளிர் காலம் அது.

குளிர் என்றால் வாட்டுகிற குளிர்.தனக்கு நிறைவேற்றப்படபோகும் மரண தண்டனையின் போது தான் பயந்து நடுங்கியதாக ஒரு பிம்பம் மக்கள் மனதில் ஏற்பட்டு விடக்கூடாது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது அரசன் சார்லஸ்அரண்டு மிரண்டு போயிருந்தான் என மக்கள் பேசி விடக்கூடாது.குளிரைத் தாங்கும் படியாக இரட்டை ஆடைகளை அணிந்து கொண்டு தான் கொலைக்களத்திற்கு கிளம்பி வந்திருந்தான்.

லண்டன் ஒயிட் ஹாலில் இருந்த மரண மேடை.


பிஷப் கையில் வைத்திருந்த தன் தொப்பியைக் கேட்டு வாங்கி அணியும் போது கொலையாளியைப் பார்த்து " என் தலை முடி உனக்கு தொந்தரவாக இருக்குமா?" என்று கேட்கிறான் மன்னன்

முதலாம் சார்லஸ். கொலையாளி யின் பதில்-

'தலைமுடி மொத்தமும் தொப்பிக்குள் அடங்கி விட்டால் தலையை த் துண்டிக்க வசதியாக இருக்கும்.'

தலைமுடி முழுவதும் தொப்பிக்குள் செலுத்தும் முயற்சியில் சார்லஸிற்கு பிஷப், கொலையாளி இருவரும் உதவி செய்கிறார்கள்.

மன்னன் நிதானமாக 'I go from a corruptible to an incorruptible crown; where no disturbance can be, no disturbance in the world.'


பிஷப் பதில் - 'You are exchanged from a temporal to an eternal crown, - a good exchange.'

தலையைத் துண்டிக்கப் போகும் கோடரியை வைத்திருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற இருக்கும் கொலையாளியிடம் சார்லஸ்"'You must set it fast.''

"தலையை பீடத்தில் வைத்த பின் நான் பிரார்த்தனை செய்து விட்டு என் கைகளை விரித்து உயர்த்துவேன். அது தான் உனக்கு சிக்னல்.Stay for the sign."

கைகளை விரித்துக் காட்டிய அரசன் முதலாம் சார்லஸ் தலை கண நேரத்தில் துண்டிக்கப்பட்டு உடனே எல்லோரும் பார்க்கும்படியாக ரத்தம் சொட்ட சொட்ட அந்தத் தலை உயர்த்திக் காட்டப்படுகிறது.

WRITTEN BY

R.p. Rajanayahem'

Saturday, 30 January 2021

Dorothy Dell was born 1915 ,january 30 met car accident.the age of 19 , 1934 june 8

 

Dorothy Dell  was born 1915 ,january 30 met car accident.the age of 19 , 1934 june 8





Dorothy Dell was born to Elbert and Lillan Goff in Hattiesburg, Mississippi on January 30, 1915. She won the most beautiful baby in Hattiesburg beauty contest when she was thirteen months old. She lived in New Orleans from the age of ten. She attended the Sophie Wright High School for girls. Winning the Miss New Orleans title, when she was fifteen, she went on a Fanchon and Marco vaudeville tour for six months. She got a job with the Ziegfield Follies of 1931 when she arrived in New York City. She sang a solo, "Was I Drunk?", in the production. All of her films at Paramount were released in 1934. She died that year in an automobile accident on June 8, 1934, She had left an all-night party at an inn in Altadena and was going to Pasadena in the wee hours when the car left the highway, hit a telephone pole, bounced off a palm tree and hit a boulder. Miss Dell was killed instantly. Her date, Dr. Carl Wagner, who was driving, died several hours later.



Dorothy Dell was born Dorothy Dell Goff in Hattiesburg Mississippi, on January 30, 1915. She was named the most beautiful baby in Hattiesburg. Her mother claimed to be a descendant of Jefferson Davis, the Confederate President. The family moved to New Orleans, Louisiana in 1925. She became best friends with Dorothy Lamour and the two girls dreamed of being actresses together. Dorothy started entering beauty pageants when she was a teenager. After winning the Miss New Orleans pageant she was crowned Miss Universe in 1930. Then she began performing in vaudeville. Florenz Ziegfeld saw her on stage and asked her to join the Ziegfeld Follies. She was known for her lovely singing voice and perfect legs. In 1931 she was critically injured in a car accident and had to be hospitalized for two months. Dorothy fell in love with singer Russ Columbo but he broke up with her. She made her film debut in the 1932 short Passing The Buck. The beautiful blonde was signed by Paramount Studios in October of 1933. She was given a supporting role in the drama Wharf Angel.


Her performance earned rave reviews and critics predicted she would become a big star. Dorothy costarred with Shirley Temple in Little Miss Marker and with Lew Cody in Shoot The Works. She had a brief romance with boxer Jack Demspey. In the Spring of 1934 it was announced she would play the lead in Now and Forever. Dorothy's career was taking off and she had finally found true love. She was engaged to caricaturist named Nat Carson and had started planning their wedding. On June 8, 1934 she attended a party in Altadena with her friend Dr. Carl Wagner. While driving home at 1:00 AM the car hit a telephone pole and flipped over several times. Dorothy was killed instantly. She was just nineteen years old. Dr. Wagner, who was driving the car, died several hours later. She is buried at Metairie Cemetery in New Orleans, Louisiana. Her role in Now And Forever was given to Carole Lombard.





Dorothy Dell was a Ziegfeld Follies showgirl who seemed destined for stardom before dying young in a car accident.


She was born Dorothy Dell Goff in Hattiesburg Mississippi, on January 20, 1915. Dorothy was named the most beautiful baby in Hattiesburg. Her mother claimed to be a descendant of Jefferson Davis, the Confederate President. The family moved to New Orleans, Louisiana in 1925. She became best friends with Dorothy Lamour and the two girls dreamed of being actresses together. Dorothy started entering beauty pageants when she was a teenager. After winning the Miss New Orleans pageant she was crowned Miss Universe in 1930. Then she began performing in vaudeville. Florenz Ziegfeld saw her on stage and asked her to join the Ziegfeld Follies. She was known for her lovely singing voice and perfect legs. In 1931 she was critically injured in a car accident and had to be hospitalized for two months. Dorothy fell in love with singer Russ Columbo but he broke up with her. She made her film debut in the 1932 short Passing The Buck. The shapely blonde was signed by Paramount Studios in October of 1933. She was given a supporting role in the drama Wharf Angel.



Dorothy DellDorothy Dell


Dorothy Dell


Her performance earned rave reviews and critics predicted she would become a big star. Dorothy costarred with Shirley Temple in Little Miss Marker and with Jack Oakie in Shoot The Works. She had a brief romance with boxer Jack Demspey. In the Spring of 1934 it was announced she would play the lead in Now and Forever. Dorothy's career was taking off and she had finally found true love. She was engaged to caricaturist named Nat Carson and had started planning their wedding. On June 8, 1934 she attended a party in Altadena with her friend Dr. Carl Wagner. While driving home at 1:00 AM the car hit a telephone pole and flipped over several times. Dorothy was killed instantly. She was just nineteen years old. Dr. Wagner, who was driving the car, died several hours later. She is buried at Metairie Cemetery in New Orleans, Louisiana. Her role in Now And Forever was given to Carole Lombard.




Trivia (16)

Stage actress.

Was Miss New Orleans, 1930. She beat out 74 other contestants, including a pre-fame Dorothy Lamour, who would win the title the following year. The two would become long-term friends.

Attended the wake for Lew Cody in Los Angeles, shortly before her own untimely death.

Two years after her death, it was reported that Dressing Room Number 101 on the Paramount lot was still vacant. The dressing room, originally built for Pola Negri, had acquired a "bad-luck" reputation. Irene Dunne and Gladys Swarthout both declined to use it.

Nearly two years after her death, Dell was still receiving fan mail at the Hollywood Post Office.

News of Dell's unexpected death devastated Shirley Temple, causing production of Now and Forever (1934) to be temporarily suspended.

Signed a long-term contract with Paramount pictures October 17, 1933.

Worked with famous choreographic duo Fanchon & Marco in 1930, appearing in pre-film dance prologues at Fox-Wilson Theater in Fresno, California.

Was related to the late U.S. Senator Guy Shepard Goff of West Virginia and Judge John W. Goff of the Supreme Court of New York. Her great grandfather was reportedly a cousin of Jefferson Davis.

Services were held for her in Hollywood on June 10, where her old friend Ruth Etting sang "The Rosary.".


At the time of her death she had been next scheduled to star opposite Gary Cooper in another Shirley Temple vehicle, Now and Forever (1934). The part went to Carole Lombard instead.

She announced her engagement to caricaturist Nat Carr just days before her death.

She was crowned Miss Biloxi when she was briefly a resident of nearby Gulfport, Mississippi.

According to newspaper reports of her death, Dell's mother had recently undergone surgery at the hands of Dr. Wagner, the driver of the automobile involved in the fatal crash.

Her father, lumberman Elbert E. Goff, claimed to be a direct descendant of one of the men who owned the Pilgrim ship, the Mayflower.

Her signature song in the Ziegfeld Follies was titled, "Was I Drunk, Was He Handsome, and Did My Ma Give Me Hell?".

Personal Quotes (1)

[in 1930] I am going to be a real actress. Not just one more actress, but a real, honest-to-goodness actress like Marie Dressler.


Friday, 2 October 2020

MAHATMA GANDHI , THE MAN OF 20 TH CENTURY BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30

.


MAHATMA GANDHI , 

THE MAN OF 20 TH CENTURY  

BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30




20 ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மனிதர் மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 இல்பிறந்தார்


தென் ஆப்பிரிவிக்காவில் அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார்? சத்குருவின் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அந்த அற்புத உண்மை… படித்து மகிழுங்கள்…

சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்… மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையான வழக்கறிஞரும் அல்ல. நீதிமன்றத்தில் தைரியமாக எழுந்து சரளமாக பேசக்கூடியவரும் அல்ல. ஆனால் ஒரே ஒரு சம்பவம், திடீரென அவருடைய அடையாளங்கள் கழன்றுவிட்டன. தென் ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்தபோது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், காந்தியிடம் ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் அவர் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார். காந்தி மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து காந்தியை அவருடைய உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார்.




அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த காந்தி பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. “எனக்கு இது ஏன் நடந்தது? நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்? இதற்கு வழி காண வேண்டும்” என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள, காந்தி மகாத்மாவாய் மலர்ந்தார். சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் மகாத்மாவானார். மகாத்மா காந்தியைப் போல் வேறு யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு மனிதர்களை வழிநடத்தியதில்லை. அதுவும் மிக எளிய வழிகளில். இந்த நாட்டில் நன்றாக வேர் ஊன்றியிருந்த அன்னியரை போர், வன்முறை போன்ற எந்த வழிகளுமின்றித் துரத்தினார். இந்தப் பிரபஞ்சத்தில் இதற்கு முன் நடந்திராத அதிசயம் இது. இந்த நாட்டை வென்றவர்கள் அதற்கென்று சில விலை கொடுத்துதான் இந்த நாட்டைக் கைப்பற்றினர். அவர்களும் எளிதாகப் போய்விடவில்லை. ஆனாலும், சண்டையில்லாமல், துப்பாக்கி ஏந்தாமல், வன்முறையைக் கடைப்பிடிக்காமல் அவர்களைத் துரத்தியடித்தார் மகாத்மா. இந்த நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது. காவலர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஒரு விஷயம். அவர்கள் மீது குண்டு எறிவது மற்றொரு விஷயம், ஆனால் நிராயுதபாணிகளாகத் தெருவில் சென்று தலையில் அடிவாங்கி மண்ணில் வீழ்வது முற்றிலும் வேறு விஷயம். முதல் பகுதி மக்கள் அடிபட்டு வீழ்ந்தவுடன் அடுத்த குழுவைச் சார்ந்த மக்கள் அடிவாங்கப் போய் நிற்பது என்பது மிகவும் வேறுவிதமான வலிமையான விஷயம். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் அப்படிச் செய்வதற்கு மிகவும் ஆழமான மன வலிமை வேண்டும். லட்சக்கணக்கான மக்களை அவரால் அப்படி ஈடுபடுத்த முடிந்தது.







தான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையை விட்டுவிட்டு அப்போது சமூகத்தில் நிலவிவந்த மக்களின் முக்கியப் பிரச்சனைகளோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சிறிய அடையாளம் சிதறியது. எனவே நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று நிர்ணயித்து ஓர் எல்லைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களால் செய்ய முடிந்த எதையும் செய்யுங்கள். செய்ய முடியும் என்று நினைக்கும் எதையும் செய்யுங்கள்!

.


மகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்


ஆன்மிகத்தின் அடிப்படை

* உண்மையை மறைக்காமல் சொல்லும் மன வலிமை வேண்டும்.

* நமது ஒவ்வொரு எண்ணத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.

* நல்ல நட்பைப் பெற வேண்டுமானால், நீயும் நல்ல நண்பனாக இரு.

* உடல்சோர்வு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் பலவீனம்.

* தொண்டு தான் உண்மையான அன்பை வெளிப்படுத்துமே தவிர, வெறும் வாய்ச்சொல்லால் பயனில்லை.

* பொய்மை ஒருநாள் மறைந்து போகும். உண்மையே மேலே உயர்ந்து நிற்கும்.




* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை.

* மனப்பூர்வமாக உள்ளம் கனிந்து செய்யும் பிரார்த்தனையை இறைவன் ஏற்க மறுப்பதில்லை.

* உலகிலுள்ள எல்லா சக்திகளையும் விட, ஆன்மிக சக்தியே அதிக பலம் வாய்ந்தது.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

"அவன்' பார்த்துக் கொள்வான்

* உண்மை இருக்கும் இடத்தில் தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவனின் உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது.

* பிரார்த்தனை என்பது தன்னடக்கம் நிரம்பியதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.

* உங்களுடன் பேசாதவர்களிடமும், முகம் கொடுத்துப் பேச முற்படுங்கள்.

* நல்ல நண்பனைப் பெற விரும்பினால், நீங்களும் நல்ல நண்பனாக இருக்கப் பழகுங்கள்.




* நம் எண்ணம் முழுவதையும் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், அந்த வினாடியே நமக்கு விடுதலை கிடைத்து விடும்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால், நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.

* இதயத்தில் தூய்மையுடன் செய்யும் வழிபாடு, தியானத்தை கடவுள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.

* எவ்வளவு குழப்பம் நேர்ந்தாலும், பொய் ஒருநாள் காணாமல் போகும். உண்மையோ என்றென்றும் நிலைத்து நிற்கும்.

விவேகத்தால் சாதிக்கலாம்

* கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லி முறையிடுவது வெறும் மூடநம்பிக்கை அல்ல.

* பலம் என்பது உடல்வலிமை மட்டுமல்ல. மனவுறுதியே உண்மையான பலம்.

* நேர்மையாக வியாபாரம் செய்வது கடினம். ஆனால் அது முடியாத செயல் அல்ல.

* தேவைகளைப் பெருக்கிக் கொள்வது அநாகரிகம். குறைத்துக் கொள்வதே நாகரிகம்.

* நற்செயல்கள் அனைத்தும் இறுதியில் ஒருநாள் பலன் அளித்தே தீரும் என உறுதியாக நம்புங்கள்.

* வேகத்தால் எதையும் சாதிக்க முடியாது. விவேகமானவனோ வாழ்வில் நிறைய சாதிப்பான்.




* தெய்வத்தின் கணக்குப் புத்தகத்தில் நம் செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. நாம் பேசியவையும், படித்தவையும் அல்ல.

* பாவத்தை மனதில் மறைத்து வைக்காதீர்கள். அது உடலில் மறைந்து கொல்லும் நஞ்சு போன்றது.

* பாவத்தை வெறுக்கலாம். பாவியை வெறுக்காதீர்.

* வாழ்நாள் முழுவதும் பழகி வந்த பழக்கத்தை நொடியில் விட்டு விட முடியாது.

தியாக மனம் வேண்டும்

* கடமையைச் சரியாக நிறைவேற்றினால் உரிமை தானாகவே வந்து சேரும்.

* கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பது சிறந்தது.

* தேவைக்கு அதிகமாக செல்வம் சேர்த்து வைப்பது, ஒருவகையில் திருட்டு தான்.

* கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்ளும் சக்தியை தகுந்த பயிற்சியின் மூலம் பெற முடியும்.

* பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்வது கடவுளுக்கு எதிரானது.

* பிறருக்காக தியாகம் செய்யும் மனநிலை கொண்டவனால், தனக்காக எதையும் தேட நேரம் இருக்காது.

* மனிதனின் இதயத்தில் மறைந்து கிடக்கும் நல்ல சக்திகளை மலரச் செய்வதே கலை.




* கலைஞர்கள் அவரவர்க்குரிய கலைகளால் மனிதர்களை நல்வழிப்படுத்த முயலவேண்டும்.

* மனிதர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதே உண்மையான கல்வியின் பயன்.

* ஏளனம் என்பது பேசும் நாவை இழிவுபடுத்துமே அன்றி, ஏசப்பட்டவனை இழிவுபடுத்துவதில்லை.

நாளை அவன் கையில்!

* அவசியமில்லாத பொருளை நமக்குத் தேவை என்று வைத்துக் கொண்டிருப்பது கூடாது. சொல்லப்போனால் அதுவும் ஒரு திருட்டு தான்.

* உலகத்திலுள்ள எல்லா சக்திகளையும்விட ஆன்மிக சக்தியே மிக பலம் கொண்டது.

* உங்களிடம் பேசாதவர்களிடம் பேசுங்கள். வராதவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். கோபித்தவர்களைச் சமாதானப்படுத்துங்கள். விட்டுக்கொடுத்து வாழப் பழகுங்கள்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார். நிம்மதியாக வாழ்வதற்கு இதுவே நல்வழியாகும்.

* என்ன தான் குழப்பம் நேர்ந்தாலும் பொய்மை ஒருநாள் மறைந்துபோகும். ஒருநாள் மெய்மை மேலே உயர்ந்து நின்று தர்மத்தை நிலைநாட்டும்.

* நம்முடைய ஒவ்வொரு அந்தரங்கத்தையும் கடவுள் அறிவார் என்பதை உணர்ந்தால் போதும். அந்த விநாடியே நமக்கு விடுதலை கிடைத்துவிடும்.

அச்சத்தை அறவே தவிர்!

* அன்புணர்வு வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் போதாது. சுயநலமற்ற சேவையால் அதை வெளிப்படுத்த வேண்டும்.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும்.

* உடலுக்கு உணவு, உயிருக்கு பிரார்த்தனை.

* உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள் பார்த்துக் கொள்வார்.

* நல்ல நண்பனைப் பெற விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள்.

* நம் மனதில் எழும் எண்ணம் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நாம் உணர வேண்டும்.

* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்குமரம் ஏற வேண்டியிருந்தாலும் அஞ்சாமல் சொல்லுங்கள்.

* அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.

சிறந்த வழிபாடு எது?

* ஒரு செயல் நீதிக்கும், தர்மத்திற்கும் உடன்பட்டதா என்பதை செயலாற்று பவனின் நோக்கத்தைக் கொண்டே அறிய முடியும்.

* வீடுகளில் கூட்டுப்பிரார்த்தனை மிக அவசியமானது.

* மிதமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின்னும் கொஞ்சம் பசி உணர்ச்சி இருப்பது உடல்நலனுக்கு தேவையானது.

* இறைவனோடு இரண்டறக் கலக்கும் நோக்கத்தோடு செயலாற்றுவதே வைராக்கிய வாழ்வாகும். இந்நிலை பெற மனமும் உடலும் நல்லவிஷயங்களில் மட்டுமே ஈடுபடுதல் வேண்டும்.

* பெண்ணைப் பலமற்றவள் என்று கூறுவது அவளை நிந்திப்பதாகும். பெண்ணுக்கு உடல்பலம் குறைவு என்றாலும் ஆன்மபலம் மிக அதிகம்.

* ஏழைகளுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு உலகில் வேறு கிடையாது.

* ஆழ்ந்த நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. வழிபாட்டின் திறவுகோலாக பிரார்த்தனை அமைந்துள்ளது.

அன்பு தோற்பதில்லை

* முன் நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது வைராக்கிய வாழ்வுக்கு அவசியமான பழக்கம்.

* அறிவால் கடவுளை அறிய முடியாது. ஆழ்ந்த நம்பிக்கை, அனுபவம் இரண்டும் நம்மைக் கடவுளிடம் அழைத்துச் சென்று விடும்.

* சத்தியக் கோயிலை அடைய விரும்புபவர்கள் அகிம்சை என்னும் பாதையில் நடை பயில வேண்டும்.

* நமக்கு கடவுளே மூலமாக இருக்கிறார். அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்.

* அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. பகையுணர்வோ, மனிதனை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

* கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திப்பதால், மனதை லட்சியத்தை நோக்கி குவிக்கச் செய்ய முடியும்.

* கடவுள் என்ன நோக்கத்துடன் உயிர்களைப் படைத்தார் என்பதை நம்மால் அறிய முடியாது. படைப்பின் ரகசியத்தைக் கடவுள் மட்டுமே அறிவார்.

* அகிம்சையால் வெல்ல முடியாமல் போனால், அதற்குக் காரணம் நம் மனபலவீனமே ஆகும்.

சவால்களை சந்தியுங்கள்

* கருத்து ஒற்றுமை கொண்டவர்களிடம் விட்டுக்கொடுப்பது பெரிதல்ல. முரண்பட்ட கருத்து உடையவர் என்றாலும் விட்டுக் கொடுப்பதே சகிப்புத்தன்மை.

* கோழைத்தனம் நீங்குவதற்காக சிலர் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சவால்களை எதிர்கொண்டு வாழக் கற்றுக் கொள்வதே சரியான மருந்து.

* கடவுள் பொறுமையோடு அனைத்தையும் சகித்துக் கொள்கிறார். ஆனால், அவருடைய பொறுமைக்கும் எல்லையுண்டு.

* கோயில்கள் வெறும் கண்காட்சிக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. தெய்வீக உணர்வை மக்களிடம் பரப்பும் பணியை மேற்கொண்டிருக்கின்றன.

* தீய செயல்களைச் செய்பவரை விட, தீய எண்ணங்களுக்கு இடம் தருபவன் அதிக தீமையைச் செய்து கொண்டிருக்கிறான்.

* குறை இல்லாத மனிதன் இல்லை. ஆனால், எதிராளியின் குறைகளை மட்டுமே மிகைப் படுத்துகிறோம். இதனால் வெறுப்புணர்வு அதிகமாகிறது.

மனம் சுத்தமாக இருக்கட்டும்!

* உண்ணாவிரதம் இருக்காமல் பிரார்த்தனை செய்ய முடியாது, பிரார்த்தனை செய்யாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது.

* கடவுளிடம் காணும் பரிபூரணத்துவத்தை வணங்குவதே தூய வழிபாட்டு நெறிமுறை. அவர் மட்டுமே சத்தியமானவர்.

* வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் நாம் சிறு துளியே. எனவே, அனைத்து உயிர்களுடனும் ஒன்றுபட்டு ஒரே அம்சமாகத் திகழ வேண்டும்.

* பகவத்கீதையை கிளிப்பிள்ளையைப் போல பாராயணம் செய்வதால் பலனேதும் இல்லை. அதுகாட்டும் உபதேசப்படி நடந்து காட்ட வேண்டும்.

* யாரை வழிபடுகிறோமோ, அந்த தெய்வம் காட்டியே வழியில் நடப்பதே உண்மையான வழிபாடு. மற்ற பிரார்த்தனைகள் எல்லாம் , நம்முடைய நேரத்தை வீணடிப்பதாகும்.

* மனதைச் சுத்தமாக வைத்துக் கொண்டால், இறைவன் நம் பிரார்த்தனையை அவசியம் கேட்பான்.

* மனதை அலைய விடாமல் கட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான வழிபாடாகும்.

- காந்திஜி

.கொள்கை இல்லாத அரசியலும்

இரக்கமற்ற மதமும் ஒழிக்கப்பட வேண்டியவை

காந்தி

குறிக்கோள் இல்லாத வணிகமும்

மனிதத்தன்மை இல்லாத

விஞ்ஞானமும் பயனற்றது

காந்தி

அறிவு இருந்தும் நல்ல குணம் இல்லாமை

கண்மூடித்தனமான இன்பங்கள் வருந்த தக்கது

-காந்தி


வேலை செய்யாமல் குறுக்கு வழி சம்பாத்தியம்

இந்தியாவை தள்ளாட வைக்கும்

-காந்தி

மகாத்மாவை ஏளனமாக பார்க்கும்

நீங்கள் எந்த அளவுக்கு முட்டாள்கள்

என்பது உங்கள் சிரிப்பின் நீளத்தை

பொறுத்தது

Wednesday, 31 January 2018

OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS DIED 1838 JANUARY 30






OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS
DIED 1838 JANUARY 30





ஒசியோலா, OSCEOLA தொல்குடி அமெரிக்க இனங்களில் ஒன்றான செமினோலேயின் போர்த் தலைவன் ஆவான்.DIED 1838 JANUARY 30

அமெரிக்க அரசு, செமினோலே இனத்தவரை அவர்களுடைய தாயகப் பகுதிகளைவிட்டு வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட இரண்டாவது செமினோலேப் போரில், 100 பேருக்கு மேற்படாத வீரர்களைக் கொண்ட படையொன்றுக்குத் தலைமைதாங்கிப் போரிட்டான். செமினோலேக்களின் அதியுயர் தலைவனான மிக்கானோப்பியிடம் ஒசியோலாவுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.

பிறப்பும் இளமைக் காலமும்[மூலத்தைத் தொகு]

ஒசியோலா, 1804 ஆம் ஆண்டு அலபாமாவில் உள்ள தலஸ்சீ என்னும் இடத்தில் இன்றைய மக்கான் கவுண்டிப் பகுதியில் பிறந்தான். இவனது தாயார் பொல்லி காப்பிங்கர் (Polly Coppinger) முஸ்கோஜீ இனக்குழுவைச் சேர்ந்த ஆன் மக்குயீனின் மகள். ஒசியோலாவின் தந்தை ஒரு ஆங்கிலேய வணிகரான வில்லியம் பவெல் (William Powell) எனப் பலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஒசியோலாவின் தந்தையார் தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களுள் ஒன்றான கிறீக் இனக்குழுவைச் சேர்ந்தவர் என்றும், ஒசியோலா பிறந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறுவர். பின்னரே அவனது தாய் ஆங்கிலேயரான வில்லியம் பவெலை மணந்து கொண்டாராம். இதனால் பல ஆங்கிலேயர் இளம் ஒசியோலாவை பில்லி பவெல் என்றே அழைத்து வந்தனர். ஒசியோலா, தான் ஒரு முழு முஸ்கோஜீ எனக் குறிப்பிட்டாலும், அவனது தலை முடி எனக் கருதப்படும் மாதிரிகளைக் கொண்டு செய்யப்பட்ட மரபியல் சோதனைகள் அவன் ஒரு கலப்பு இனத்தவன் எனவே காட்டுகின்றன.

ஒசியோலாவின் தாய்வழிப் பேரனான ஜேம்ஸ் மக்குயீன் (James McQueen) அலபாமாவில் இருந்த கிறீக் (Creek) இனத்தவருடன் வணிகம் புரிந்த தொடக்ககால ஆங்கில வணிகருள் ஒருவர். 1714 ஆம் ஆண்டளவில் அலபாமாவிலேயே தங்கிவிட்ட அவர், அடுத்த பல பத்தாண்டுகளுகளாக ஒரு வணிகராகவும், கிறீக் இனத்தவரின் தலைவராகவும் விளங்கினார். ஜேம்ஸ் மக்குயீனின் மகளான ஆன் என்பவரை ஜோஸ் காப்பிங்கெர் மணந்து கொண்டார். அவர்கள் இருவரதும் மகளே ஒசியோலாவின் தாயார் ஆவார். 1814 ஆம் ஆண்டில் ஒசியோலாவும் அவவது தாயும் ஏனைய கிறீக் இனத்தவருடன் புளோரிடாவுக்கு வந்தனர்.

அரச எதிர்ப்பும், போர்த்தலைவன் ஆனதும்[மூலத்தைத் தொகு]
1832 ஆம் ஆண்டில் சில செமினோலேத் தலைவர்கள், தமது தாயகத்தை அரசுக்குக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக மிஸ்சிசிப்பி ஆற்றுக்கு மேற்குப் புறமாக உள்ள நிலப்பகுதியொன்றைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர். மிக்கனோப்பி உட்பட்ட ஐந்து முக்கியமான செமினோலே தலைவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதற்குப் பதிலடியாக, தொல்குடி அமெரிக்கர்களுக்கான அமெரிக்கப் பிரதிநிதியான விலே தாம்சன் என்பான் அத் தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனப் பணித்தான். செமினோலேக்களுடனான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியபோது அவர்களுக்கான துப்பாக்கிகள், அவற்றுக்கான குண்டுகள் என்பவற்றை செமினோலேக்களுக்கு விற்பதையும் அவன் தடை செய்தான்.
WIFE AND CHILD

ஒசியோலா, ஒரு இளம் வீரனாக வெள்ளைக்காரரால் அறியப்படத் தொடங்கிய காலம் அது. தாம்சனின் நடவடிக்கைகளால் ஒசியோலா கோபம் அடைந்தான். செமியோலேக்களை தாம்சன் அடிமைகளைப் போல் நடத்துவதாக அவன் எண்ணினான். ஒசியோலாவின் மனைவி ஒரு கறுப்பு இனப்பெண். அவன் அடிமைத் தனத்தை தனது இறுதிவரை எதிர்த்து வந்தான். இருந்தும் தாம்சன் ஒசியோலாவைத் தனது நண்பனாகக் கருதி அவனுக்கு ஒரு சுழல் துப்பாக்கியையும் கொடுத்தான். பின்னர், ஒசியோலா குழப்பங்களை உண்டாக்குகிறான் என்னும் குற்றச்சாட்டில் அவனைக் கிங் கோட்டையில் ஓரிரவு அடைத்து வத்தான். விடுதலை பெறுவதற்காக, அரசாங்கம் சில செமினோலேத் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதிப்பதாகக் கூறி அடுத்த நாளே அவன் வெளியே வந்தான்.

1835 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி ஒசியோலாவும் அவனைப் பின்பற்றியோர் சிலரும் மறைந்திருந்து தாம்சனையும், வேறு ஆறு பேரையும் கிங் கோட்டைக்கு வெளியே சுட்டுக் கொன்றனர்.

ஏமாற்றிக் கைது செய்தமை[மூலத்தைத் தொகு]

ஒசியோலா. (1838 ஆண்டு அச்சுப்பிரதி)
1837 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, அமெரிக்கத் தளபதி தாமஸ் சிட்னி ஜெசப் என்பவனின் ஆணையின் பேரில், ஒசியோலாவை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு என ஏமாற்றி அழைத்துக் கைது செய்தனர். அவன் புளோரிடாவில் அகஸ்ட்டீன் என்னும் இடத்தில் இருந்த, மரியன் கோட்டையில் அடைக்கப்பட்டான். இவ்வாறு ஒசியோலாவை ஏமாற்றிக் கைது செய்தமை வெள்ளையர் மத்தியிலும் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. அடுத்த டிசம்பரில் ஒசியோலாவும் அவனது ஆதரவாளர்களும் தென் கரோலினாவில் உள்ள மோல்ட்ரீ கோட்டைக்கு மாற்றப்பட்டனர். அங்கே ஜார்ஜ் கட்லின் என்னும் ஓவியர் ஒசியோலாவைச் சந்தித்து அவனது படத்தை வரைவதற்கு ஒப்புக்கொள்ள வைத்தார். அங்கே அவ்வோவியர் இரண்டு படங்களை வரைந்தார். இந்தப் படங்களுக்குப் பின்னர் இப்படங்களை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வரையப்பட்டன.

1838 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி, பிடிபட்ட மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே, மலேரியா நோய் வாய்ப்பட்ட ஒசியோலா சிறையிலேயே மரணம் அடைந்தான். அவர் படைத்துறை மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டான்.

ஒசியோலாவின் நினைவுப் பொருட்கள்[மூலத்தைத் தொகு]
GRAVE

ஒசியோலாவின் மறைவுக்குப் பின்னர், படை மருத்துவரான பிரடெரிக் வீடன் என்பவர், அவனது தலையை எடுத்துப் பதப்படுத்தி வைத்தார். அவனது முகத்தை அச்செடுத்து வைக்கவும் ஏனைய செமினோலேத் தலைவர்களை உடன்படச் செய்தார். அத்துடன் ஒசியோலா அவருக்குக் கொடுத்த பல பொருட்களையும் அவர் தன்னுடன் வைத்துக் கொண்டார். கப்டன் பிட்கைன் மொரிசன் (Pitcairn Morrison) என்பவன், இந்த முக அச்சையும், பிற பொருட்களையும் எடுத்து வாஷிங்டனில் இருந்த ஒரு படை அலுவலருக்கு அனுப்பினான். 1885 ஆம் ஆண்டளவில் இப் பொருட்கள் சிமித்சோனியன் நிறுவனத்தின் மானிடவியல் சேமிப்புகளுடன் சேர்க்கப்பட்டன. இன்றும் அப்பொருட்கள் அங்கே உள்ளன. மருத்துவர் வீடன் ஒசியோலாவின் பதப்படுத்தப்பட்ட தலையைத் தனது மருமகனான டானியல் வைட்ஹர்ஸ்ட் என்பவருக்கும் கொடுத்தார். அது பின்னர் 1843 இல் நியூ யார்க் மருத்துவரான வலண்டைன் மாட் (Valentine Mott) என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைத் தனது அருங்காட்சியகத்தில் வைத்தார். 1866 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அத்தலை அழிந்து போய்விட்டதாகக் கருதப்படுகிறது.