IN SEARCH OF MOTHER LOVE
IN SEARCH OF MOTHER LOVE சென்னை 2018 ஜீன் மாசம் 1ம் தேதி எனக்கு சம்பளம் வந்துடுச்சு.. அப்போ ஐபிஎம்ல வேல பாத்தேன்.. அம்மாவுக்கு மாத்திரை வாங்க காசு போடனும்னு நினைச்சிகிட்டே நைட் சிப்ட் முடிச்சிட்டு கேன்டின்ல டி சாப்டு நானும் என் கூட வேலபாக்குறவரும் வெளில வந்தோம்.. ஆபிச விட்டு வெளிய வரப்ப வீட்லேருந்து போன்... அம்மா நம்மள விட்டு போயிடுச்சுன்னு அக்கா சொல்லுது.. எனக்கு அந்த நமிஷம் அது கனவா இருக்கூடாதான்னு ஒரு ஒரு சாமியையும் வேண்டுனேன்.. பதட்டத்துல என்ன பன்றது ஏது பன்றதுன்னு எதுவுமே தெரியல... அம்மாவோட சடலத்ததான் பாக்க முடிஞ்சது... அம்மான்னாலே எல்லாருக்கும் ஸ்பெஷல்தான்.. எனக்கும் அப்படிதான்.. வெள்ளந்தியான கிராமத்து அம்மா.. கல்யாணம் ஆனதுலேருந்து அப்பாவோட டார்ச்சர்ல பிள்ளைங்கள வளக்கனும்னு ரொம்ப போராடி எங்கள வளத்துச்சு.. அம்மா ஒரே பொண்ணு.. நல்ல வசதி..செல்வாக்கா வளந்த ஆளு.. சிங்கபூர் வரை போன ஆளு.. நூறு பவுன் நகை செய்து அம்மாவ கல்யாணம் பன்னி கொடுத்தாரு எங்க தாத்தா. தாத்தா சிங்கபூர் சிட்டிசன்.... அதுனால வசதிக்கு பஞ்சமில்லை.. பிறந்த வீடு சொர்க்கமாகவும் புகுந்த வீடு நகரமாவும் இருந்தது அம்...