Posts

Showing posts with the label KODAIKANAL

KODAIKANAL ,PRINCESS OF MOUNTAIN

Image
KODAIKANAL ,PRINCESS OF MOUNTAIN கோடை சுற்றுலா என்றதும் நம் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். கொடைக்கானலில் ஏரி, பிரயன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் தவிர வேறு என்ன இடங்கள் இருக்கின்றன? வட்டக்கானல் மலைப்பாதை நடைப்பயணம் கொடைக்கானலில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வட்டக்கானல் அருவி. குற்றாலம் போல மிகப் பெரியது இல்லை. என்றாலும் ரம்மியமானது. அருவியின் பாதையைப் பிடித்துச் சென்றால் வழியில் சிறுசிறு அருவிகளைக் கடந்து, ஒரு சிறிய குகையைக் காணலாம். 'சிங்கக் குகை' என்று இதற்குப் பெயர். குகை பயணம் வேண்டாம் என்பவர்கள் அருவியை ஒட்டிச் செல்லும் சிறிய சாலையில் இயற்கையை ரசித்தவாறு நடக்கலாம். இரண்டு கி.மீ. கடந்த பிறகு, சைக்கிள்கூட செல்ல முடியாத பாதை கீழே இறங்கும். எங்கெங்கோ இருக்கும் மரங்களின் வேர்கள் பாறையையும், மண்ணையும் நரம்புகளாகப் பின்னிப் படர்ந்து, படிகளை ஏற்படுத்திச் செல்லும். மூச்சிறைக்கும் நடைப்பயணம்தான்; தாகம் எடுக்கும்; இருந்தாலும், ஆங்காங்கே இருக்கும் கூல் டிரிங்க்ஸ் கடைகளை நம்பி தைரியமாகப் பயணிக்கலாம். பாதைக்கு இருபுறமும் வேலியிடப்பட்ட தனியார் தோ...