TIRUPUR STORY - LABOURERS ARE NOT ALLOWED TO CHANGE NAPKINS
TIRUPUR STORY - LABOURERS ARE NOT ALLOWED TO CHANGE NAPKINS “நேப்கின் பேடுகளைகூட மாற்ற விடமாட்டார்கள்” – வாழ்வாதாரத்துக்காக புலம்பெயர்ந்த இளம் தொழிலாளர்களின் கதை #TamilNaduOnWheels அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் 18 மார்ச் 2021 இடம்: தென்கரும்பலூர் கிராமம், தண்டராம்பட்டு தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம் "என் அப்பாக்கு காது கேக்காது. அம்மா வீட்ல இருக்காங்க. அண்ணனும் சரியில்ல. அதனாலதான் நான் 17 வயசுல வேலைக்கு போனேன். வெளில சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன்" குடும்ப வறுமையில் சிக்கித் தவிக்கும் சௌந்தர்யாவின் வார்த்தைகள்தான் இவை. இவர் தனது குடும்பத்திற்காக சொந்த ஊரைவிட்டு சென்று வெளியூரில் வேலை பார்த்துள்ளார். திருவண்ணாமலை நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தென்கரும்பலூர் கிராமத்தில் இருக்கும் சௌந்தர்யாவின் வீட்டில் ஒரே ஒரு அறைதான். சௌந்தர்யா வீட்டைபோல அப்பகுதியில் இருக்கும் பெரும்பாலானோரின் வீடுகளில் சமையலறை, படுக்கை அறை என அனைத்தும் ஒன்றாகவே இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் என்றால் நமக்கு உடனடியாக மனதிற்கு வருவது கார்த்திகை தீபம், அண்ணாமலையார் கோயில், கிரிவ...