COINS MAKES HISTORY - ARUMUGA SEETHARAMAN
COINS MAKES HISTORY இந்தியச் சரித்திரத்தைக் காசுகள்தான் திறந்து வைத்தன. கல்வெட்டானது ‘தேவனாம்பியதசி’ என்ற மெளரிய மன்னன் வெட்டியது என உலகத்துக்குச் சொன்னபோதுதான் அசோகன் தெரியவந்தான். அசோகன் பிறந்தான், புத்தர் அடையாளம் கண்டறியப்பட்டார். எழுநூறு ஆண்டுகளுக்கு முன் சுல்தான் ஃபெரோஷ் ஷா துக்ளக்கால் பெரிய தூண் கல்வெட்டொன்று மீரட்டிலிருந்து டில்லிக்குக் கொண்டுவரப்பட்டது. எவ்வளவு போராடியும் அக்காலத்தைய பேரறிஞர்களால் அந்தக் கல்வெட்டினைப் படிக்க முடியவில்லை. பின்னர் வந்த அக்பர், வடமொழி வல்லுனர்களைத் திரட்டி அதைப் படித்துவிட வேண்டுமென்று தன்னால் முடிந்ததெல்லாம் செய்தார். எல்லா முயற்சிகளும் வீணாகின. ஆனால், 1836-ல் ஆங்கிலேய வரலாற்றாய்வாளர் ஜேம்ஸ் பிரின்செப், ஒருவராலும் படிக்க முடியாத அந்தக் கல்வெட்டை படித்துச் சொன்னார். பிரின்செப்பால் மட்டும் எப்படி படிக்க முடிந்தது? காசின் ஒருபுறம் கிரேக்க எழுத்துகளும் மறுபுறம் பிராமி எழுத்துப் பொறிப்புகளும் இருந்ததை வைத்து கிரேக்க மொழிக்கு நேரான பிராமி எழுத்தில் இருந்த பிராகிருதத்தைப் படித்துவிட்டார். ரோசட்டா கல்லைக் கொண்டு பிரமீடுகளிலிருந்...