Biography of Lillian Wald 1867 MARCH 10 -1940 SEPTEMBER 1
Biography of Lillian Wald 1867 MARCH 10 -1940 SEPTEMBER 1 லில்லியன் டி வால்டு (Lillian D. Wald மார்ச் 10, 1867-செப்டம்பர் 1, 1940)என்பவர் ஒரு அமெரிக்கச் செவிலி, மனித நேய ஆர்வலர், அமெரிக்கன் கம்யூனிட்டி நர்சிங் அமைப்பின் நிறுவனர்.[1] பெண்களின் முன்னேற்றம், பெண் தொழிலாளர் உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைக் கல்வி ஆகியவற்றுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வாழ்க்கையும், கல்வியும் இவர் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஜெர்மனியின் யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் படிப்பில் சிறந்து விளங்கினார். பிரெஞ்ச், ஜெர்மானிய மொழிகள் கற்றார். 1891-ல் நியூயார்க் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்றார். பிறகு மகளிர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தார்.[2] செவிலியராக 1893இல் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறி, தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவ முடிவு செய்தார். ஏழை மக்களுக்கு செவிலியர் வகுப்புகள் எடுத்தார். செவிலியராகப் பணிபுரிந்தார். ஹென்றி ஸ்ட்ரீட் செட்டில்மென்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். இவரது சேவைகளை அறிந்த யூதக் கொடையாளி ஒருவர், ஏழை ரஷ்ய யூதர்களுக்கு...