FREEDOM FIGHTERS - PREFACE
FREEDOM FIGHTERS - PREFACE எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒரு அறிமுகம் 1498 மே மாதம் 17 ஆம் நாள். அன்றுதான் பார்த்தலோமிய டயஸ் காட்டியிருந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டு, நன்னம்பிக்கை முனையைத்தாண்டி, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம், கேரளப் பகுதியின், கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு)வாஸ்கோடகாமா எனும் போர்த்துக்கீசியர் முதன் முதலில் வியாபாரப் படையெடுத்து வந்து சேர்ந்த தினம். 1471ல் தனது பயணத்தை துவக்கி 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னர் இந்தியாவை வந்தடைந்த போர்ச்சிகீசியன் அவர். பின்பு பல நாடுகளை சார்ந்த வெள்ளையர்கள் இங்கு வந்தனர். வெள்ளையர்களுக்கு முன்பு இந்தியாவை நோக்கி முகலாயர்கள் வந்தார்கள். தங்கள் ஆட்சியை நிறுவினர். ஆனால் அவர்கள் இங்கேயே நிறந்தரமாய் தங்கினர், தங்கள் தலைமுறையை இங்கே நிறுவினர். அவர்களது பரம்பரையினர் இந்திய மக்களாகவே வாழ்கின்றனர். இதுதான் அவர்களது தாய்நாடானது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக இன்னுயிர் இழந்த இஸ்லாமியர்கள் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர். ஆனால் நமது வரலாறு ஏதோ...