MY FATHER KANNADASAN -DAUGHTER REVATHY SHUNMUGAM
MY FATHER KANNADASAN -DAUGHTER REVATHY SHUNMUGAM சினிமா துறையைப் பத்தி தெரிஞ்சுக்கவும், அவரின் சினிமா பணியை பார்க்கவும் விரும்பமாட்டார். எங்களை சினிமா படம் பார்க்கக்கூட அனுமதிக்காதவர் இப்படி சொன்னவர் - பிரபல சமையல் கலைஞர் ரேவதி சண்முகம். இவர், கவிஞர் கண்ணதாசனின் மகள். "நாளைக்கு அப்பாவோட 91-ம் ஆண்டு பிறந்த நாளை பலரும் கொண்டாடுவாங்க. எனக்கோ அவர் தினசரி துதி'' என்பவர் தன் அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார். "எல்லோரையும்போல எங்களுக்கும் பெற்றோர்தான் ரோல் மாடல். அப்பா எந்த அளவுக்கு பாசமானவரோ அதே அளவுக்குக் கோபக்காரரும்கூட. அவர் சினிமா துறையில இருந்தாலும், அவரோட பிள்ளைகளான நாங்க சினிமா துறையைப் பத்தி தெரிஞ்சுக்கவும், அவரின் சினிமா பணியை பார்க்கவும் விரும்பமாட்டார். எங்களை சினிமா படம் பார்க்கக்கூட அனுமதிக்காதவர். அவர் வெளியூர் போகும் சமயத்துலதான் அம்மா அனுமதியோடு படம் பார்ப்போம். இரவு 11 மணிக்குத் தொடங்கும் அப்பாவோட அந்த உலகம் பற்றி, பலருக்கும் தெரியாது. அது முழுக்கவே எங்களுக்கானது. இன்னைக்கு ஒரு குழந்தை வளர்க்கவே பெருசா சிரமப்படுற காலம். ஆ...