Posts

Showing posts with the label CART

குதிரை வண்டி! ஆர்னிகா நாசர் சிறுகதை

Image
குதிரை வண்டி! ஆர்னிகா நாசர்  சிறுகதை  சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் - பிரதான நடைமேடையில் காத்திருந்தேன். இரவு, 8:15 மணிக்கு, செந்துார் விரைவு ரயில் வந்து சேர்ந்தது. எனக்கான பெட்டியில் ஏறி, என் இருக்கையை தேடி, பக்கவாட்டு கீழ் படுக்கையில் போய் அமர்ந்தேன். எப்போது ரயில் பயணம் என்றாலும், பக்கவாட்டு கீழ் படுக்கையை முன்பதிவு செய்வது வழக்கம். காரணம், சரிவாய் அமர்ந்து குளிர் காற்று முகத்தில் அறைய, இரவு வானத்தை ரசிப்பேன். சக பயணியரின் நடை, உடை பாவனை, பேச்சுகளை ஆராய்வேன். டிக்கெட் பரிசோதகர் வந்தார்; பயணச் சீட்டையும், ஆதார் அட்டையையும் ஒரு சேர நீட்டினேன். பயணம் செய்வோர் பட்டியலில் என் பெயரை, 'டிக்' செய்து, ஆதார் எண்ணை எழுதி, பயணச் சீட்டை என்னிடம் கொடுத்துவிட்டு அடுத்த பயணியிடம் நகர்ந்தார். இருக்கையில் சரிந்து படுத்தேன். பல்கலை பணியிலிருந்து ஓய்வுபெற இன்னும் சில மாதங்களே உள்ளன; மீதி வாழ்நாளில் நான் செய்ய விரும்பும் பத்து காரியங்களை பட்டியலிட்டு இருந்தேன். அதில் ஒன்று, நான் பிறந்து, வளர்ந்த மதுரைக்கு சென்று, நகர் முழுக்க குதிரை வண்டி சவாரி செய்ய வேண்டும் என்பதே! நான் பிறந்...