TRUTH REGARDING LAL BAHADUR SHASTRI ,SHOCKING FACTS
TRUTH REGARDING LAL BAHADUR SHASTRI ,SHOCKING FACTS இந்தியாவை வடிவமைத்த லால் பகதூர் சாஸ்திரி பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்...! அக்டோபர் 2 ஆம் தேதியை நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுகூறும் பொருட்டு காந்தி ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளானது நமது இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு மாமனிதருக்கும் பிறந்த நாள் ஆகும். அவர்தான் இந்தியாவின் இரண்டாவது பிரதம அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார். இந்தியாவின் வளர்ச்சிக்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். 1962 இல் சீனாவுக்கு எதிரான தோல்வியின் பின்னர் நாட்டின் உடைந்த தன்னம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தவர் மற்றும் 1965 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றவர் மேதகு லால் பகதூர் சாஸ்திரி ஆவார். போர் வெற்றி மட்டுமின்றி இந்தியாவில் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றிற்கு வழிவகுத்ததும் இவர்தான். தகவல் 1 லால் பகதூர் என்பதுதான் இவரின் பெயராகும். இவரின் புலமையின் காரணமாக 1926 இல் காஷி வித்யாபீத் பல்கலைக்கழகம் இ...