S.V.SUBBAIAH ,EXCELLENT ACTOR BORN 1920 OCTOBER 20 -1980 JANUARY 29
S.V.SUBBAIAH ,EXCELLENT ACTOR BORN 1920 OCTOBER 20 -1980 JANUARY 29 பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையாவுக்கு இன்று (20/10/2020) நூறாவது வயது. இவர் 1920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி பிறந்தார். கப்லோட்டிய தமிழன் படத்தில் பாரதியாராக நடித்து அந்த வேடத்திற்கு பெருமை சேர்த்தவர். பாரதியின் இயற்பெயர் சுப்பையா. அந்த சுப்பையாக வேடத்தில் இந்த எஸ்.வி.சுப்பையா நடித்தி ருந்தார். எஸ்.வி.சுப்பையாவின் சொந்த ஊர் அப்போதைய நெல்லை மாவட்டம்(தற்போது தென்காசி மாவட்டம்) செங்கோட்டை ஆகும். இவர் பாவூர்சத்திரம் அருகே பனையேறிப்பட்டி என்ற கிராமத்தில் வசித்தார். கலைத் துறையில் ஆர்வம் கொண்ட எஸ்.வி.சுப்பையா முதலில் டி.கே.எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1952-ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்க தொடங்கினார். எஸ்.பாலசந்தர்-பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும், டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார். தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம், ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்க...