JERUSALEM - A HISTORY OF 4000 YEARS BEHIND
JERUSALEM - A HISTORY OF 4000 YEARS BEHIND ஜெருசலேம் - ஒரு நகரத்தின் நான்காயிரமாண்டு வரலாறு ஜெருசலேம் : உலகத்தின் வரலாறு’ என்னும் இந்தப் புத்தகத்தின் நவீன ஜெருசலேம் நகரத்தின் வரலாற்றைச் சொல்லும் புத்தகம். இது கிறித்துவத்தையோ யூதத்தையோ இஸ்லாத்தையோ சித்திரிப்பது அல்ல. மாறாக நவீனக் காலகட்டத்தின் ஜெருசலேத்தின் வரலாற்றை மட்டும் சொல்கிறது. பிரிட்டிஷ் பத்திரிகையாளர் சைமன் சிபாக் மாண்டிஃபையர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 2011-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் புத்தகம் இப்போது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டித் தமிழில் சந்தியா வெளியீடாக வரவுள்ளது. அதன் முன்னுரையில் இருந்து ஒரு பகுதி... தேவாலயம் கட்டுவதற்குத் தோண்டும் இடத்தில் குளங்குளமாக எலும்புகள். தளபதிகளும் பணியாட்களும் தம் ராஜ விசுவாசத்தை அரசருக்கு நிரூபிக்க விரல்களை வெட்டிப் பரிசளிக்க வேண்டும். அவருக்குக் கோபம் வந்தால் மூக்கறுத்தல், காதறுத்தல், கையை, புஜத்தைத் தரித்து எறிதல் என்பது வேந்தரின் பொழுதுபோக்கு. அந்த அரண்மனையில் அங்கம் சிதைவுபடாமல் முழு உடலுடன் இருப்பவர் அரசனைத் தவிர வேறு யாரும் இல்லை என்கிறார் அந்த அரசவைக்குச் சென்றுவ...