Showing posts with label MGR. Show all posts
Showing posts with label MGR. Show all posts

Sunday, 19 December 2021

MGR AND NSK

 

MGR AND NSK



வள்ளலாக வாழ்ந்த கலைவாணரும், எம்.ஜி.ஆரும்!

https://thaaii.com/.../10/article-about-mgr-and-kalaivanar/

எம்.ஜி.ஆர். அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர்.

ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான்.

ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார்.

அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார்.

‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம்.

தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்தப் பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.

என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம்.

அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாகக் கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர்.

அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.

உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன்.

அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு.

‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பி வெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போய்விட்டார்.

அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாகப் பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம்.

பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது.

வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.

தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன்.

அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே. என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.

என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.

என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டிப் பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.

என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..

‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’

பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்…

‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது…”

உடனே, ‘‘சரிதான்… சரிதான்….’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.

புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.



Tuesday, 10 August 2021

MGR ,SOMETHING SPECIAL

 


MGR ,SOMETHING SPECIAL



மக்கள் திலகத்தை
பற்றி...
நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன்
ஒரு துக்க வீட்டிற்கு ஹைதராபாத் சென்றிருந்தப் பொழுது ,
அங்கேயே மாரடைப்பால் காலமானார் .
அவரது மறைவுச் செய்தி மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .
தேங்காய் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு மரியாதை செலுத்த வரும் நிலையில் மக்கள் திலகத்தின் உடல் நிலை இல்லை என்பதால் , ஜானகி அம்மையார் மட்டும் மரியாதை செலுத்த வருவார் என்றும் , அது வரை இறுதி ஊர்வலம் கிளம்ப வேண்டாம் என்றும் முதலில் தெரிவிக்கப் பட்டது .
ஆனால் திடீர் என்று , மக்கள் திலகமே வருகிறார் என்று தெரிவித்தனர் , அவரும் வந்தார் , நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்தப் பொழுதும் , அங்கே அவர் வந்து தேங்காய் ஸ்ரீநிவாசனுக்கு மரியாதை செலுத்தியதுடன் , அவரது முகத்தை பார்த்தப் படி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் .
பின்னர் கிளம்பும் பொழுது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகனை மட்டும் தனது காருக்குள் ஏறச் சொன்னார் ... இந்த நேரத்தில் எங்கே அழைத்துச் செல்கிறார் முதல்வர் என்று அனைவரும் புரியாமல் திகைத்து நிற்க , கார் சற்று தூரம் சென்று நின்றது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகன் இறங்கி வந்தார் , அவர் கையில் பொட்டலம் கட்டிய படி பணக் கட்டு
உலகம் சுற்றும் வாலிபன் , படபிடிப்பு , ஹாங்காங்கில் , யார் யாருக்கு என்றைக்கு பிறந்த நாள் என்று மக்கள் திலகம் டைரியில் குறித்து வைத்திருப்பார் , அன்று , நாகேஷின் பிறந்த நாள் ...
அனைவரையும் அழைத்தார் மக்கள் திலகம் , " இன்று இரவு 10 மணிக்கு சின்ன பன்க்ஷன் இருக்கு , எல்லோரும் கலந்துக் கொள்ள வேண்டும்" என்றார் .... என்ன பன்க்ஷன் என்பதையும் அவரே விவரித்தார் .
ஆனால் அன்று இரவு நடந்ததோ , பெரிய பங்க்ஷன் , பணத்தை பற்றியெல்லாம் மக்கள் திலகம் கவலை படவில்லை , நாகேஷுக்கு 9 கற்கள் பதித்த வைர மோதிரத்தை பரிசாக அளித்தார் ...
அதை நாகேஷ் தான் இறக்கும் வரை கையில் அணிந்திருந்தார்
எங்க வீட்டு பிள்ளை , படத்தை தயாரித்தவர் நாகிரெட்டி , படம் 100 நாட்களையும் தாண்டி மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விட்டது ... இவ்வளவு பெரிய வெற்றியாக இந்தப் படம் அமைந்திடும் என்று எதிர்பார்கவில்லை , அதனால் உங்களுக்கு பேசிய சம்பளத்தை விட அதிகமாக தனியாக ஒரு தொகையை தரப் போகிறேன் , நீங்க அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் திலகத்திடம் நாகி ரெட்டி வற்புறுத்த ...
"சரி , அந்தத் தொகையை வாகினி ஸ்டுடியோ ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுங்கள் " என்று கூறி விட்டார் மக்கள் திலகம்
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும் பொழுதும் , தன்னுடைய சம்பளத்தை பெறுவதற்கு முன்னர் , திரைப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து ஊழியர்கள் , நடிகர்கள் , டெக்னீஷியன்களையும் தனித் தனியே அழைத்து , அவர்களுக்கான சம்பளம் எவ்வளவு , அது முழுவதுமாக வந்து விட்டதா என்று விசாரிப்பார் மக்கள் திலகம் ...
அதுமட்டுமில்லாமல் , சம்பளம் 5000 என்றால் , தயாரிப்பாளரை அழைத்து 7000 என்று கொடுக்கச் சொல்வார் ,
அதை எந்த தயாரிப்பாளரும் மீற முடியாது ...
அனைவருக்கும் சம்பளம் வந்து விட்டது என்று அறிந்துக் கொண்ட பின்னரே , தனது சம்பளத்தை பெற்றுக் கொள்வார் மக்கள் திலகம்

Monday, 19 July 2021

MGR AND THENGAI SEENIVASAN

 


MGR AND THENGAI SEENIVASAN



"தேங்காய் சீனிவாசன் மறைந்தபோது எம்.ஜி.ஆர் கொடுத்த நீண்ட தந்தி"

#

பழம்பெரும் நடிகர்களில் தேங்காய் சீனிவாசன் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவராக இருந்தார். 

வில்லனாக, நகைச்சுவையாக, குணச்சித்திரமாக நாயகனாகக்கூட நடித்து அசத்தியவர்.

காமெடியில் தனக்கென்று தனி பாணியை கடைபிடித்து ரசிக்க வைத்தவர். அவரது குடும்பத்திலிருந்து அவரது பேரன் ஆதித்யா நடிக்க வந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் தேங்காய் சீனிவாசனின் மகன் சிவசங்கர் அவரது தந்தையின் நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

“சின்ன வயசில் அப்பாவை நாங்கள் அதிகமாகப் பார்க்க முடியாது. பயங்கர பிஸியாக இருப்பார்.

70 களில் பல படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.

அம்மாதான் எங்களைப் பார்த்துக்கொள்வார்கள். ஆன்மீகத்தில் அப்பாவுக்கு அதிகமான ஈடுபாடு. கோவில் கோவிலாக டூர் போகும்போது மட்டும் தான் நாங்கள் அப்பாவோடு இருப்போம்.

வீட்டில் இருக்கும்போது தரையில் பாய் போட்டு உட்கார்ந்து கொண்டு, நண்பர்களோடு அரட்டையடிப்பது அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.

அவருக்கு சினிமாவும் நண்பர்களும்தான் முக்கியமாக இருந்தது. மேஜர் சுந்தர்ராஜன், வெண்ணிறஆடை மூர்த்தி, ஜெய்சங்கர், நாகேஷ், சுருளிராஜன், அசோகன் போன்றோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் அனைவரும் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.

நாங்கள் குழந்தைகளாக இருப்பதால் கதவுக்கு பின்னால் இருந்து பயந்து கொண்டு பார்ப்போம். ஒவ்வொருத்தருக்கும் பெரிய ரசிகர்கள் செல்வாக்கு இருந்தாலும் எளிமையாகப் பழகுவார்கள்.

சென்னைக்கு வெளியே காரில் போய்க்கொண்டிருக்கும் போது வழியில் எங்காவது வயல் வெளியைப் பார்த்து காரை நிறுத்தி தலையில் துண்டை போட்டுக்கொண்டு பம்ப் செட்டில் குளிப்பார். 

இளநீர் வெட்டிக் கொடுப்பார்கள் அதை சாப்பிட்டு விட்டு வருவோம். எங்காவது மசால் வடை வாசம் வந்தால் காரை நிறுத்தி சாப்பிட்டுவிட்டுதான் வருவார்.

ஒருநாள் ‘தர்மயுத்தம்’ படத்தில் நடித்த சமயத்தில் அந்த கோட் சூட்டோடு விட்டுக்கு வந்தார். நான் அழுது அடம் பிடித்தேன்.

அப்பா இந்த ட்ரெஸ்ஸில் உங்களைப் பார்த்தால் என் பிரண்ட்ஸ் எல்லாரும் சிரிக்கிறாங்கப்பா என்று அழுதேன். ஊரே  என்னைப் பாராட்டுது நீ என்னடான்னா அழற என்று கேட்டு சிரித்தார்.

ஒரே வருஷத்துல 35 படங்களில் நடித்துக் கொடுத்தார். நாலு மணிநேரம் ஒருகால் ஷீட், ஒரே ஸ்டுடியோவில் மாறி மாறி நடித்துக் கொடுத்தார்.

மேக்கப் போடும்போது உதவி இயக்குநர்கள் வந்து கேரக்டரைச் சொல்லி விட்டுப்போய் விடுவார்கள். ஸ்பாட்ல போய் தன் பாணியில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

சம்பளம் கூட கறாராகப் பேசி வாங்க மாட்டார். தயாரிப்பாளர் வந்து அண்ணே இந்தப் படம் சரியா போகலைண்ணே என்று சொன்னால் சரி பராவாயில்லை என்று விட்டு விடுவார்.

எம்.ஜி.ஆர். கூட நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். ஆனால் எந்தப் பதவியும் கேட்காமல் தேர்தல் நேரத்தில் அவருக்காகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

கடைசிக் காலங்களில் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ள படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். வருஷம் ஒரு முறை படம் தயாரிக்கலாம் என்று நினைத்திருந்தார்.

அப்பா தயாரித்த முதல் படம் ‘கிருஷ்ணன் வந்தான்’. சிவாஜி, மோகன் ஆகியோர் நடித்திருந்தர்கள். அப்பாவிடம் சிவாஜி சம்பளம் வாங்கவே இல்லை.

அதே போல இளையராஜா சார் ‘கிருஷ்ணன் வந்தான்’ படத்திற்கு இசையமைத்தபோது அப்பாவிடம் “அண்ணே நான் உங்களிடம் சம்பளம் வாங்க மாட்டேன்.

நீங்கள் நாடகம் போட்டபோது நான் ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு இசையமைத்திருக்கிறேன் அதை மறக்க மாட்டேன்.”  என்று சொன்னார்.

ஆனாலும் முதல் படம் விற்கமுடியாமல் போனது. இதனால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாகி விட்டது. அப்புறம் ரஜினி சார் அப்பாவுக்காக ஒரு படம் பண்ணித் தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் அதற்குள் அப்பா மறைந்து விட்டார்.

அப்பா நவம்பர் 87-ல் மறைந்தார். அந்த நாளில்  எம்.ஜி.ஆரிடமிருந்து ஒரு பக்கத்துக்கு தந்தி வந்திருந்தது. அப்போது எம்.ஜி.ஆர். உடல்நிலை மோசமாக இருந்தது.

அதனால் தந்தி அனுப்பியிருந்தார். ஆனால் உடலை எடுக்க வேண்டிய நேரத்திற்கு முன்பு வீட்டுக்கு போலீஸ் வந்தது.

முதல்வர் வீட்டுக்கு வர இருக்கிறார். பாடியை மாடியிலிருந்து கீழே கொண்டு வந்து வைங்க என்றார்கள். நாங்களும் ஏற்பாடு செய்தோம்.

எம்.ஜி.ஆர். வந்து அப்பாவுக்கு பெரிய மாலையைப் போட வந்தார். அப்போது ஒரு செக்யூரிடி ஆபீஸர் மாலையை வாங்க வந்தார். ஆனால் அதை மறுத்து அவரே மாலையைப் போட்டார்.

அப்பா இறந்த அடுத்த டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மறைந்து விட்டார். சினிமாவில் அப்பாவுக்கு வேண்டாதவர்களே கிடையாது.” என்று தேங்காய் சீனிவாசனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சிவசங்கர்


MGR IN SALEM -MATTUKARAVELAN 100 TH DAY

 

MGR IN SALEM -MATTUKARAVELAN 100 TH DAY




'மாட்டுக்கார வேலன்' படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சேலத்தில் நடந்தது. மக்கள் திலகமும் வந்திருந்தார். 

அவ்வாறு விழாவை நடந்திய திரையரங்கத்தின் முதலாளி, ஒரு மூதாட்டியை மக்கள் திலகத்திடம் அழைத்து வந்தார்...

"படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல... 

மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்....

வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல், அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் புரட்சித்தலைவர்.




"விதவையாகி 30 வருஷம் ஆச்சு. பிள்ளைங்க இருந்தும், இல்லை. கீரை வித்து வித்தை வயித்த களுவுரேன். அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும். அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன்" என்றார்..

"எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும்?" என்று மக்கள்திலகம் வினவ...

"உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்கலப்பா. அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன். அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க.  எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா" என்றார் .

"அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க" என்றார் மக்கள் திலகம்

"யப்பா, உனக்கு அம்மான்னா உசிராமே. ஒரு தாய், தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன? வச்சுக்கோ. ஆண்டவன் கொடுக்குறது போதும்" என்றார் அந்த மூதாட்டி ...

சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....


MGR IN CALCUTTA

 

MGR IN CALCUTTA



‘மும்பையில் மாதுங்கா, டெல்லியில் கரோல்பாக் போல கொல்கத்தா நகரில் லேக் ஏரியா. இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி.
1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.
அந்தக் கட்டிடம் எழும்ப மூல காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர்.தான். கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.
விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்.ஜி.ஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது.
இரண்டு நாட்கள் அங்கு தங்கினார். அப்போது, மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார்.
எம்.ஜி.ஆர். அப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து அதி காரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குதான் இரண்டு நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவதாக ஏற்பாடு. பிரம்மாண்டமும் ஆடம் பரமுமான ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், தான் தங்க வேண்டிய இடத்தை சுற்றிப் பார்த்தார் 10 நிமிடங்களில் .
‘‘இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம் என்று கூறி புறப்பட்டு விட்டார்.
மேற்குவங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒருபுறம், வியப்பு மறுபுறம்.
‘‘ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே
என்று கேட்டுக் கொண்டனர்.
எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடியே...
‘‘தங்களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால், நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள், கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது, அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும் என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.
ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் ‘டல்ஹவுசி சதுக்கம்’ என்ற பகுதியிலேயே இருந்த ஒரு ஓட்டலில் தங்கினார். தன்னுடன் வந்த உதவியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார்.
அரசு சார்பில் ராஜ போகங்களுடன் இலவசமாக தங்குவதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்.ஜி.ஆர் அவர்கள்.
அவர் வரும் தகவல் பற்றி பெரிய அளவில் கொல்கத்தாவில் விளம்பரம் செய்யப்படவில்லை. இருந்தாலும் தன்னைப் பார்க்க தமிழர்கள் வருவார்கள் என்ற எம்.ஜி.ஆரின் கணிப்பு தவற வில்லை.
கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்.ஜி.ஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர்.
அப்படி வந்தவர்களில் பெரும் பாலனோர் சாதாரண மக்கள். எம்.ஜி.ஆரை விழிகளால் விழுங்கியபடியே அவரது கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.
அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திச் சென்றனர்.
தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு மறுநாள் காலை, திடீரென தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலையில் இறங்கி எம்.ஜி.ஆர். நடக்க ஆரம்பித்து விட்டார்.
அங்கு வந்திருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் எம்.ஜி.ஆரோடு நடந்தனர். சாலையில் கொய்யாப் பழம் விற்றுக் கொண்டிருந்த வயதான தமிழ்ப் பெண்ணிடம்
‘‘பழம் என்ன விலை?’’ என்று ஜாலியாக கேட்டார்.
அந்த மூதாட்டியும் சளைக்கவில்லை. எம்.ஜி.ஆரை பார்த்த மகிழ்ச்சியில் அந்த மூதாட்டி,
‘‘உனக்குப் போய் விலை சொல்ல முடியுமாய்யா? எல்லாமே உனக்குத்தான் எடுத்துக்கோ’’ என்று கூறினார்.
அந்த மூதாட்டி நினைத்துப் பார்க்காத தொகையை அவர் கையில் திணித்த எம்.ஜி.ஆர்., கூடையில் இருந்த பழங்களை எடுத்து அருகே இருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த மூதாட்டியிடமும் பழத்தைக் கொடுத்து
‘‘நீயும் சாப்பிடு’’ என்றார்.
அந்த மூதாட்டிக்கு அழுகையே வந்துவிட்டது.
‘‘நீ நல்லா இருக்கணும் ராசா’’
-என்று கூறிக் கொண்டே காலில் விழ முயன்றவரை தடுத்து அணைத்து ஆறுதல் கூறினார் எம்.ஜி.ஆர்.!
‘நாடோடி மன்னன்' படத்தில் நாடோடியாக இருந்த எம்.ஜி.ஆர், சூழ்நிலை காரணமாக மன்னனாக நடிப்பார். ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். பேசும் புகழ் பெற்ற வசனம் இது: ‘
‘நீங்கள் மாளிகை யில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன்.’’
நன்றி. - தி இந்து



எஸ். ராமசாமி என்ற மூத்த பத்திரிகையாளர் ,
எம்.ஜி.ஆருடனான தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார் :
“1980-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். எம்.ஜி.ஆரின். பிரசாரத்தைக் குறிப்பெடுப்பதற்காகக் கூடவே சென்றேன். பிரசாரத்தின்போது, உடன் வரும் செய்தியாளர்களுடன் சேர்ந்து உணவருந்துவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.
.
ராணிப்பேட்டையில் இரவு நீண்டநேரம் எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். இரவு உணவுக்காக, அதிகாலை 3 மணி அளவில் அமர்ந்தோம். அனைவருக்கும் இலை வைத்து உணவு பரிமாறப்பட்டது. கோழிக்கறி, ஆட்டுக்கறி என வகை வகையாக உணவுகள் பரிமாறப்பட்டன.
எல்லோரும் சாப்பிட ஆரம்பித்த சமயத்தில், ஓர் இலை மட்டும் காலியாக இருந்ததை எம்.ஜி.ஆர். கண்டுவிட்டார். அது என்னுடைய இலை. ‘நீங்கள் சைவமா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன்.
‘இவருக்கு உடனடியாக சைவ உணவு தயார் செய்து வாருங்கள். அதுவரை நான் உணவருந்த மாட்டேன்’ என்று கூறிவிட்டார்.
.
அதிகாலை 3 மணிக்கு எங்கே உணவு கிடைக்கும்? எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டாரே! மேலும் அவரும் சாப்பிடாமல் காத்திருக்கிறார். கட்சிக்காரர்கள் ஓடிப்போய் எங்கேயோ பக்கத்து வீட்டில் இட்லி, சட்னி தயார் செய்துகொண்டு வந்து கொடுத்தனர். அதன் பிறகுதான் எம்.ஜி.ஆரும் சாப்பிட்டார்.”
.
# இந்த அனுபவத்தைப் படித்தபோது ,
எம்.ஜி.ஆரின் மேஜிக் ரகசியம் புரிந்தது..!
.
அது - அன்பு....!
தன்னைப் போல் பிறரையும் எண்ணும் , தன்னலமற்ற அன்பு...!
.
# நண்பர் எழுதியது நினைவுக்கு வந்தது:
“தாய்மையைப் படைத்த பின்னர் தன்னலமற்ற அன்பு கொஞ்சம் மிஞ்சி விட்டது....
பார்த்தான் இறைவன்...
படைத்து விட்டான் எம்.ஜி.,ஆரை...!”
.
102
7 Comments
17 Shares
Like
Comment
Share

Saturday, 10 July 2021

VAIKO AND MGR

 

VAIKO  AND MGR




M.G.R.மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்!

பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோவுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதையும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. எம்.ஜி.ஆருக் கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.

பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.

இந்திய அமைதிப்படையின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட்டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப்பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோவின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.

எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்கமாக உள்ளனர். திமுக தலைமை யோடும் நீங்கள் நெருக்கமாக இருக்க லாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.

அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதியாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிடணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.

முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங்களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை"" என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டு வைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோவின் மனதில் எவரெஸ்ட் சிகரமாய் உயர்ந்தார் எம்.ஜி.ஆர்.!

மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்றுவித்த ஆரம்ப காலத்தில், எம்.ஜி.ஆர். மீது பிரபாகரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங்களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். ‘‘தமிழகம் வந்த சில காலத்துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண்டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!

முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.

‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப்போது புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.


எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உபசரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப்போது நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர்பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!

பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக்கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபாகரன் கூறியிருக் கிறார்.

தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!

‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவிகளைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடுவது கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது.


**********


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நமது நாளிதழில் வெளியிடப்பட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளும் அவரது படங்களைப் போலவே, இன்றோடு 100 நாட்கள் ஓடியிருக்கின்றன. இந்த அளவுக்கு தொடர் வெற்றிகரமாக வர காரணம் வாசகர்கள்தான்! தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே ஏராளமான வாசகர்களும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் கடிதம், தொலைபேசி, இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவையும் வரவேற்பையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர். ஆர்வத்துடன் தகவல்களையும் நூல்களையும் கொடுத்து பலர் உதவினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி!


தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதே கடினம். ஆனால், திரைப்படம், அரசியல் என இரு துறைகளிலும் ஈடு, இணையற்ற வெற்றியைப் பெற்று  அவற்றில் முதலிடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.! 




வெற்றி பெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் கடினம். கடைசிவரை முதலிடத்திலேயே இருந்ததுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் அதிசயம்!



இப்போதும் அரசியல் கட்சிகள் அவரது பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கின்றன. மறுவெளியீட்டு படங்களைப் பட்டியலிட்டால் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டு மக்களால் விரும்பிப் பார்க்கப்படு கிறது. 2014-ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு உலக சாதனை!


திரைப்பட வெற்றி ஒரு சாதனைக் குறியீடு தான். அதைத் தாண்டிய விண்ணைத் தொடும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு அவரிடம் நிறைந்திருந்த மனிதாபிமானமும் மக்கள் சேவையும்தான் காரணம்!




 அப்படிப்பட்டவருக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளியிட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளை சிறப்பு மரியாதையாகக் கருதுகிறோம். இந்தக் கட்டுரைகள் அவரது பல்வேறு சிறப்புகளின் ஒரு துளிதான். தொடர் முடியலாம்; எல்லையற்ற பிரபஞ்சம் போல விரிந்து பரந்திருக்கும் அவரது புகழுக்கு முடிவேது?




எம்.ஜி.ஆர். இன்னும் மறையவில்லை; தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…


‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!


நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!


காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!


கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க!