Posts

Showing posts with the label SOMETHING

MGR ,SOMETHING SPECIAL

Image
  MGR ,SOMETHING SPECIAL மக்கள் திலகத்தை பற்றி... நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் ஒரு துக்க வீட்டிற்கு ஹைதராபாத் சென்றிருந்தப் பொழுது , அங்கேயே மாரடைப்பால் காலமானார் . அவரது மறைவுச் செய்தி மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது . தேங்காய் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு மரியாதை செலுத்த வரும் நிலையில் மக்கள் திலகத்தின் உடல் நிலை இல்லை என்பதால் , ஜானகி அம்மையார் மட்டும் மரியாதை செலுத்த வருவார் என்றும் , அது வரை இறுதி ஊர்வலம் கிளம்ப வேண்டாம் என்றும் முதலில் தெரிவிக்கப் பட்டது . ஆனால் திடீர் என்று , மக்கள் திலகமே வருகிறார் என்று தெரிவித்தனர் , அவரும் வந்தார் , நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்தப் பொழுதும் , அங்கே அவர் வந்து தேங்காய் ஸ்ரீநிவாசனுக்கு மரியாதை செலுத்தியதுடன் , அவரது முகத்தை பார்த்தப் படி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் . பின்னர் கிளம்பும் பொழுது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகனை மட்டும் தனது காருக்குள் ஏறச் சொன்னார் ... இந்த நேரத்தில் எங்கே அழைத்துச் செல்கிறார் முதல்வர் என்று அனைவரும் புரியாமல் திகைத்து நிற்க , கார் சற்று தூரம் சென்று நின்றது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகன் இறங்கி வந்தார் ...