MANAPAD ,SEA SHORE VILLAGE ,NEAR TUTICORIN
MANAPAD ,SEA SHORE VILLAGE ,NEAR TUTICORIN மணப்பாடு (Manapad) தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இது மணவை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இக்கிராமமானது மீன் பிடிப்பையும், பனை மரத்தின் பொருட்களையும் வெகுவாக சார்ந்திருக்கிறது[4][5], முன்னொரு காலத்தில், இலங்கையிலும், பர்மாவிலும் தொழில் புரிந்த இவ்வூரைச் சேர்ந்த வணிகர்களினால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தது. மேலும், இங்கு இருபதாம் நூற்றாண்டின் நடுவில் நிறுவப்பட்ட கல்விக் கூடங்கள் உள்ளூரில் பலரும், வெளியூர்களிலிருந்து மேலும் பலரும் கல்வி பெறக் காரணமாக விளங்கின. கவிதையும், இசையும், நடிப்பும், ஓவியமும், சிற்பக் கலைகளும் இவ்வூரில் வளர்ந்தன.இருப்பிடம் தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில், குலசேகரன்பட்டினத்திற்குத் தெற்கேயும், பெரியதாளைக்கு வடக்கேயும் வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளது. மூன்றுபக்கமும் கடலால் சூழப்பட்டு ஒரு தீபகற்பம் போல காட்சியளிக்கிறது. குலசேகரன்பட்டினத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இயற்கையும், சூழலியலும் வடக்கில் சிற்றாறு ஒன்று கடலில் சேரும் கழிமுகத்தில் ஊர்...