Showing posts with label CASTES. Show all posts
Showing posts with label CASTES. Show all posts

Saturday, 7 March 2020

CASTES AND REVOLUTION IN KERALA




கேரளாவில் உள்ள சாதிகள் மற்றும்
அதன் புரட்சிகள்


இந்திய பெண்கள் தங்களின் மாணத்தை மறைக்க நடத்திய போராட்டங்கள் வரலாற்றின் கருப்பு பக்கங்கள்
காவிகளுக்கு கம்பு சுற்றும் புண்ணார், டுமீலிசைகள் பார்வைக்கு
பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை
இந்து நாடாக' இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்."
இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் முலைகளை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயராக, பாட்டியாக, இருந்தாலும் "முலைகளை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்."
மேலாடையில்லா கீழ் சாதிப்பெண்
இந்த அசிங்கத்தை அவமானத்தை அவலத்தை அடக்குமுறையை எதிர்த்து நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் "கிருத்துவத்திற்கு மாறினார்கள்." அவர்கள் ஜாதிப் பெண்கள் முலைகளை அன்னியரின் பார்வையில் இருந்து மறைக்க போராடினர். இது 'தோள்சீலைப் போராட்டம்' எனப்பட்டது.
இந்த அசிங்கத்தை, அவமானத்தை, அவலத்தை, அடக்குமுறையை நீக்க '37 ஆண்டுகள்' போராட வேண்டியிருந்தது. அப்படியும் நாடார் 'கிருத்தவ பெண்களுக்கு' மட்டும் தான் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது; அப்ப ஹிந்து நாடார் பெண்கள்? ஏனைய ஜாதி பெண்கள்? நம்பூதிரிகளின் அடிமையான திருவிதாங்கூர் அரசா கொக்கா? நம்பூதிரி உக்கார சொன்னா திருவிதாங்கூர் அரசன் படுத்துக்குவான்!

முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டது. என்ன கொடுமை!மிஸ்டர் நம்பூதிரி தனக்கு கீழுள்ள ஜாதியில் இருக்கும் பெணகளை எப்போதும், முக்கியமாக அந்தப் பெண்களின் திருமணத்திற்கு முன், புணர பரி பூரண உரிமை பெற்றவர்கள்.சில ஜாதி ஆண்கள் அது தெய்வ பாக்கியம் என்று சந்தோஷமாக மிஸ்டர் நம்பூதிரி-ஐ புணர வைத்தார்கள்.
கன்யாகுமரியில் மேலாடையில்லா கீழ் சாதி குமரிப்பெண்ணும் சீலை ரவிக்கையுடன் மேல் சாதிப் பெண்ணும் சந்தையில். கீழ் சாதி ஆண்களும் சட்டை போடத் தடை!18 ஜாதியில் பிறந்ததைத் தவிர இந்த பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்?இந்த அவலம் வீட்டிற்குள்ளேயே; அப்போ வெளியில்?
இவ்வளவு பெரிய அயோகித்தனத்தை, கடவுள் பேரை சொல்லி, நாட்டில் உள்ள எல்லா பெண்களையும் 'செய்தவன்' எப்படி உண்மை பேசுவான்? அவன் கடவுளைப் பற்றி சொல்வது எல்லாமே பொய்; அவை யாவும் அவன் வயிறு வளர்க்க! மேலும், தன் உடலை வளர்க்க; பிறன் மனைவிகளை வளைக்க! ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
மேலாடை அணிய வழங்கிய ஆணை
உடை உடுத்த உரிமை
1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று. சுருக்கமாகக் கூறின்
“ “… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”
மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது. அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது
“ “… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity...” No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”.
இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர். ஆனால் இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர். ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர். “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”.இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் புனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை.
எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார்.
ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் இந்து கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”.
ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.
இப்போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர்.










Wednesday, 7 March 2018

CASTES AND ITS REVOLUTIONS IN KERALA



CASTES AND ITS REVOLUTIONS IN KERALA




இந்திய பெண்கள் தங்களின் மாணத்தை மறைக்க நடத்திய போராட்டங்கள் வரலாற்றின் கருப்பு பக்கங்கள்

இந்து நாடாக' இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்."

இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் முலைகளை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயராக, பாட்டியாக, இருந்தாலும் "முலைகளை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்."
மேலாடையில்லா கீழ் சாதிப்பெண்
இந்த அசிங்கத்தை அவமானத்தை அவலத்தை அடக்குமுறையை எதிர்த்து நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் "கிருத்துவத்திற்கு மாறினார்கள்." அவர்கள் ஜாதிப் பெண்கள் முலைகளை அன்னியரின் பார்வையில் இருந்து மறைக்க போராடினர். இது 'தோள்சீலைப் போராட்டம்' எனப்பட்டது.

இந்த அசிங்கத்தை, அவமானத்தை, அவலத்தை, அடக்குமுறையை நீக்க '37 ஆண்டுகள்' போராட வேண்டியிருந்தது. அப்படியும் நாடார் 'கிருத்தவ பெண்களுக்கு' மட்டும் தான் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது; அப்ப ஹிந்து நாடார் பெண்கள்? ஏனைய ஜாதி பெண்கள்? நம்பூதிரிகளின் அடிமையான திருவிதாங்கூர் அரசா கொக்கா? நம்பூதிரி உக்கார சொன்னா திருவிதாங்கூர் அரசன் படுத்துக்குவான்!
முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டது. என்ன கொடுமை!மிஸ்டர் நம்பூதிரி தனக்கு கீழுள்ள ஜாதியில் இருக்கும் பெணகளை எப்போதும்,
முக்கியமாக அந்தப் பெண்களின் திருமணத்திற்கு முன், புணர பரி பூரண உரிமை பெற்றவர்கள்.சில ஜாதி ஆண்கள் அது தெய்வ பாக்கியம் என்று சந்தோஷமாக மிஸ்டர் நம்பூதிரி-ஐ புணர வைத்தார்கள்.
கன்யாகுமரியில் மேலாடையில்லா கீழ் சாதி குமரிப்பெண்ணும் சீலை ரவிக்கையுடன் மேல் சாதிப் பெண்ணும் சந்தையில். கீழ் சாதி ஆண்களும் சட்டை போடத் தடை!18 ஜாதியில் பிறந்ததைத் தவிர இந்த பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்?இந்த அவலம் வீட்டிற்குள்ளேயே; அப்போ வெளியில்?
இவ்வளவு பெரிய அயோகித்தனத்தை, கடவுள் பேரை சொல்லி, நாட்டில் உள்ள எல்லா பெண்களையும் 'செய்தவன்' எப்படி உண்மை பேசுவான்? அவன் கடவுளைப் பற்றி சொல்வது எல்லாமே பொய்; அவை யாவும் அவன் வயிறு வளர்க்க! மேலும், தன் உடலை வளர்க்க; பிறன் மனைவிகளை வளைக்க! ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
மேலாடை அணிய வழங்கிய ஆணை
உடை உடுத்த உரிமை

1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று. சுருக்கமாகக் கூறின்

“ “… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”

மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது. அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது
“ “… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity...” No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”.

இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர். ஆனால் இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர். ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர். “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”.இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் புனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிற
சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை.
எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார்.

ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் இந்து கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”.
ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.

இப்போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர்.
நன்றி...

Tuesday, 7 November 2017

THONDAMAN DYNASTY OF PUDUKOTTAI HISTORY OF KALLAR CASTES



THONDAMAN DYNASTY OF PUDUKOTTAI
HISTORY OF KALLAR CASTES





புதுக்கோட்டை அரச மரபினர் (தொண்டைமான்கள்)

சமஸ்தான பழைய அரண்மனை

புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் தொன்மையானதொரு பரம்பரையினர் ஆவார்கள் எனினும் தொன்றுதொட்டு வந்த அரச மரபினர் அல்லர். தமது வீரத்தாலும் தீரத்தாலும் நாடாள்வோராக உயர்ந்தவர்கள். இவர்கள் பழங்காலத்தில் தமிழகத்தின் வட எல்லையான வேங்கடம் எனப்படும் திருப்பதி மலைப் பகுதியில் இருந்த கள்ளர் மரபினர் வழி வந்தவர்கள். 
யானைப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் சிறந்து                                                                விளங்கியவர்கள்.தலைநகரம் - புதுக்கோட்டை
வரலாறு - நிறுவிய ஆண்டு 1680 
                  கலைக்கப்பட்டது 1947
அரசியலமைப்பு - தன்னாட்சி
மன்னர் - முதலாவது 1680–1730 இரகுநாத தொண்டைமான் 
                 கடைசி 1928–1947 இராஜகோபால தொண்டைமான்
மொழிகள் - தமிழ், ஆங்கிலம்
மதம் - இந்து


தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் வரலாற்றுப் பின்னணியிலிருந்து மறைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விஜயநகர மன்னர்களின் ஆதிக்கம், அவர்களின் மேலாண்மைக்குட் பட்ட நாயக்கர் ஆட்சி முறை, இவற்றால் ஏற்பட்ட புதிய சூழ்நிலைகள், ஆகியவற்றின் காரணமாக வட தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள்(கி.பி 15ம் நூற்றாண்டிலிருந்து) தென் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு அதிக அளவில் குடிபெயரத் தொடங்கினர். அப்படி குடியேறிய இடங்களுள் திருச்சிக்கு அருகிலுள்ள அன்பில் கிராமம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இங்கிருந்த ஒரு பிரிவினர் குடிபெயர்ந்து புதுக்கோட்டையில் தற்போது  ஆலங்குடியைச்  சுற்றியுள்ள பிலாவிடுதி, வடுக்கலூர், கல்லாக்கோட்டை, கறம்பக்குடி, நெல்வேலி, நரங்கியம்பட்டு, அம்மணிப்பட்டு, பந்துவாக்கோட்டை, மங்கள் வெள்ளாள விடுதி ஆகிய ஊர்களில் குடியேறினர். இவர்களுள் கறம்பக்குடியில் குடியேறிய கள்ளர் வகுப்பினர், வீரத்திலும் கடின உழைப்பாலும் சிறந்து விளங்கினர். மேலும் இவர்கள் யானைபழக்குதல் போன்ற வீரசாகசங்களில் சிறப்புப் பெற்றிருந்தாலும், இப்பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரசப் பிரதிநிதிகளின் படைகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்று செல்வாக்கு பெற்றவர்களாக விளங்கினர். இந்தப் பிரிவினரிலிருந்து தோன்றிப் புகழுடன் விளங்கியவர்களே தொண்டைமான் பரம்பரையினர்.

இவர்கள் கறம்பக்குடிப் பகுதியில் நாடாள்வோராக இருந்து படிப்படியாக தங்கள் ஆட்சிப்பகுதியை விரிவாக்கி, தற்போது புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், குளத்தூர், கந்தர்வக்கோட்டை ஆகிய வட்டங்களை உள்ளடக்கியப் பகுதிகளை, புதுக்கோட்டையை தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். அப்போது "பல்லவரையன் சீமை" என்று வழங்கப்பட்ட நாட்டமைப்பில் அடங்கியிருந்த அப்பகுதிகள் பின்னர்  புதுக்கோட்டை  மன்னர்களது தனியரசு "புதுக்கோட்டை சமஸ்தானம்" என்று அழைக்கப்பட்டது.

புதுக்கோட்டை அரச மரபினர்
01.  இரகுநாத தொண்டைமான் (1686 – 1730)
02.  விஜயரகுநாதராய தொண்டைமான் (1730-1769)
03.  இராயரகுநாத தொண்டைமான் (1769 – 1789)
04.  ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் (1789 – 1807)
05.  இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் (1807 – 1825)
06.  ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் (1825 – 1839)
07.  ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான்                        பகதூர் (1839 – 1886)
08.  ஹிஸ் ஹெனெஸ் ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ                                      தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ. (1886 - 1928)
09.  ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் (1928 - 1948).
00.  மாட்சி பொருந்திய விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் (1922 - 1928)

புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சொந்தமாக ஒரு நாணயத்தை வெளியிட்டுக் கொண்டார்கள். அதன் பெயர் அம்மன் காசு.அதன் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும். ஆகையால்தான் 'புதுக்கோட்டை அம்மன் காசு' என்ற பெயர். 'புதுக்கோட்டை அம்மன் சல்லி' என்றும் அழைப்பார்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம். இந்தக் காசை அவர்கள் பெற்ற உரிமையின் அடையாளமாக வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த நாட்டின் அதிபதி பிரகதாம்பாள். அவளுடைய பிரதிநிதியாகத்தான் தொண்டைமான்கள் ஆண்டு வந்தனர். பிரகதாம்பாள்தாச என்றுதான் அவர்களுடைய விருதுகள் தொடங்கும்.


1. இரகுநாத தொண்டைமான். 1686 – 1730

Picture
புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர். மதுரையை ஆண்ட நாயக்கருக்காகத் திருவாங்கூர், மைசூர், தஞ்சாவூர் என்னும் இடங்களில் இருந்த அரசர்கள் மேல் படையெடுத்தச் சென்று அவர்களை வென்றனர். சொக்கநாத நாயக்கர் வலிமை மிகவது கண்டு அச்சமுற்றனராக, அக்கால் அவருக்கு முதல் மந்திரியாய் இருந்த கோவிந்தப்ப ஐயர் சூழ்ச்சியார் இவரது வலி குன்ற நேர்ந்தது, பின்பு, இவர் இராமநாதபுரம், தஞ்சை முதலிய இராச்சியங்களிலிருந்து திருமெய்யம், பட்டுக்கோட்டை முதலிய நகரங்களைக் கைப்பற்றினார். 1717 – 1721 ஆகிய ஆண்டுகளில் நாயக்கராலும் அவரது முதல் அமைச்சர் நாரணப்ப ஐயராலும் மிக்க இடுக்கண்களுக் குள்ளான கிறித்தவர்களும், கிறித்தவப் பாதிரிமார்களும் பதுக்கோட்டையில் அடைக்கலம் பகுந்து அன்புடன் ஆதரிக்கப்பட்ட தலமுற வாழ்ந்து வந்தனர். இம்னமரது நடுவு நிமை கிறித்தவர்களை நடத்தினமுறைமையிலிருந்துஅறியக்கிடக்கின்றது. இவர் வீரத்தாலும், புய வலியாலும் மனவுறுதியாலும். நடுவு நிலையாலும் மிகவும் புகழ்வாய்ந்தவராவர். இவருக்கு ஆறு மனைவியர் இருந்தனர். இவர் காலத்திலேயே இவருடைய பிள்ளைகளெல்லாம் மரித்துவிட்டமையால் இவர் தம்பேர்களில் மூத்தவராகிய விஜயரகநாதராய தொண்டைமானுக்கு முடி சூட்டிவிட்டு 1730-ல் இவ்வுலக வாழ்வு நீங்கினார்.
2. விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769
Picture

இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர், அக்காலத்தில் மொகலாயர் (சந்தாசாகிப்) படையெடுப்பினால் நாயக்கர் அரசாட்சி ஒழிந்தது. புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது ஆதலின் இவர் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞானபுரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து மத விசாரணை செய்து வந்தனர். சதாசிவப்பிரமம் என்று கூறப்படும் பெரியார் ஆசிரியராக வந்து அருள் புரியும் பேற்றினையும் இவர் எய்தினார்.

1733-ல் தஞ்சை அரசரின் சேனைத் தலைவனாகிய ஆனந்தராவ் ஒரு பெரிய சேனையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்துப் போர்புரியமாலே சூழ்ச்சியால் பெரும் பகுதியைப் பற்றிக்கொண்டார் ஆயினும், நெடு நாள் வரை திருமெய்யம் கோட்டையைப் பிடிக்க முடியமையால் முடிவில் புதுக்கோட்டையைக் கைவிட்டு ஓடி விட்டான். ‘கனத்த புகழ்படைத்த காளிக் குடிக்கோட்டையில், ஆனந்தராயனை அதிரவெட்டுந் தொண்டைமான்’ என்று பாடுவதும் உண்டு.

ஐதராபாத்து நைசாம் ( ஹைதராபாத் நிஜாம்) எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்து, திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். அதனையறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர் அவர்களைத் தண்டிக்கமாறு நைசாமால் அனுப்பப்பட்ட படைத்தலைவன் அவர்களிடத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் சமாதானமாய் திரும்பினான்.

மகமதலிக்கும் சந்தாசாகிப்புக்கும் கர்நாடக இராட்சியவிடமாய் நடந்த பெயர் பெற்ற போரிலே இம்மன்னர் ஆங்கிலேயருடன் மகமதலிக்கு துணையாய் நின்று சந்தா சாகிப்பையும் பிரெஞ்சுக் காரரையும் எதிர்த்தனர். இந்த போரின் பயனாக இவருக்கு அனேக நாடுகள் சேர்ந்தன. நாவப்புக்கு திரைக் கொடுப்பதில்லை எனவும் உடன்படிக்கை செய்து கொண்டனர் . இதனாலேயே தஞ்சாவூர் முதலியன அரசிழந்த காலத்திலும் புதுக்கோட்டை தமிழ் நாட்டின் ஒரே அரசாங்கமாக நிலைத்தது. பிரெஞ்சுக் காரருக்கும் ஆங்கிலேயருக்கும் தென்னாட்டில் இடைவிடாது நடந்த போராட்டங்களிலெல்லாம் இம்மன்னர் ஆங்கிலேயரை பிரியாமல் அவர்கட்கே உதவி செய்து வந்தனர். இவர் தமது நுன்னிய அறிவினாலே ஆங்கிலேயரே வெற்றிபெறுவார் என்பதனை தெளிவாக உணர்ந்திருந்தார். புதுக்கோட்டை மேன்மையடைந்தது. ஆங்கில சேனாதிபதியாக (கர்னல்) லாரன்சு ஐரோப்பாவிற்கு புறப்பட்டு போகும் போது இம்மன்னருக்கு ஓர் கடிதம் விடுத்துச் சென்றார். அது

எங்கள் வெற்றிக்கு காரணமான தங்கள் உதவியை நான் ஆங்கில அரசர் திருமுன்பு தெரிவிப்பேன். என்னிடம் தாங்கள் காட்டிய உண்மையான நட்புக் குணத்தை யான் என்றும் மறவேன். நான் தூரதேயத்திற்கு சென்ற விட்டாலும் எனக்கு தாங்கள் புறிந்த நண்மைகளும், உதவிகளும் என் மனதில் நின்றுகொண்டே இருக்கும் என்பது.

இவர் மதவிடங்களில் மிகப்பற்றுடையராயிருப்பது கொண்டே தமது இராச்சியத்தின்உள்விவகாரங்களை மறந்துவிடாது கவனித்து வந்திருக்கின்றார். புதுக்கோட்டை இராச்சியத்தை நிறுவினவர். ராயரகுநாத தொண்டைமான் எனின், அதை வலிமையுறச் செய்தவர் இம்மன்னரேயாவார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரையில் இடைவிடாது போரிலே காலங்கழித்து வந்த இவ்வரசர் 1769-ல் இவ்வுலக வாழ்வை நீத்தனர். இவருடைய மனைவியர் அறுவரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மாஆய் என்பவருக்குப் பிறந்தவர் அடுத்த மன்னராகிய இராயரகுநாத தொண்டைமான் என்பவர்.
3. இராயரகுநாத தொண்டைமான். (1769 – 1789)
Picture

இவர் , 1738-ல் பிறந்தார். தமது முப்பத்தோரவது ஆண்டில் பட்டத்திற்கு வந்தார். தம் முன்னோரைப் போன்றே ஆங்கிலேயரிட த்தில் நட்பு பூண்டிருந்தார்.1780-ல் ஐதரலி கருநாடக சமவெளி மீது ஓர் பேரிடிவிழுந்தாற்போலப் பாய்ந்து வந்த காலையில் ஆங்கிலேயர் இவ்விடுக்கணைத் தடுப்பதற்கு ஓர் உபாயமும் செய்யாதிருந்தனர். தென்னாட்டுத் தலைவர்கள் யாவரும் ஐதலியுடன் சேர்ந்து கொண்டனர். இம்மன்னர் ஒருவரே ஆங்கிலேயர்க்கும், நவாப்புக்கும் உதவியாய் நின்றனர். ஐதரின் சேனையானது ஆதனக் கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டடை நாட்டில் புகுந்தபோது இவருடைய சேனை சோத்துப்பாளை என்றவிடத்தில் அதனை சந்தித்து முறியடித்து ஓட்டிவிட்டது இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார் இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்:

“நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது, தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம்.. தாங்கள் இன்னம் சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு.”

இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று. ஐதர் தான் படையெடுத்துச்சென்ற நாடுகளில் ஊர்களைத் தீயிட்டும், மரங்களை வெட்டியும், பயிர்களையழித்தும் ஏரிகுளய்களின் அணைகளை வெட்டியும் கொடுமைகள் இயற்றிவந்தான். அன்றியும் பெண்டிக்களும் குழந்தைகளும் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளானார்கள். இக்கொடியோனை முற்ற முறியடித்தற்கு இம்மன்னரே காரணமாய் இருந்தார். ஐதரலியின் மகனாகிய திப்புவுக்கு எதிராகவம் இவர் ஆங்கிலேயருக்கு உதவிபுரிந்தார். நவாப்புக்கு இவர் செய்த உதவியின் பயனாகப் பட்டுக்கோட்டடைத் தாலுகாவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக்குள்ளாயிற்று. இவர் ஒன்பது மணம் செய்து கொண்டனர். இவருக்கு ஆண் பிள்ளை இல்லை, ஒரே மகள் தான் உண்டு. 1789 டிசம்பர் 30-ல் இவ்வரசர் விண்ணுலகடைந்தார்.
4. ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் (1789 – 1807)
Picture

இவர், இராய ரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலைத்தொண்டைமானுடைய மூத்த புதல்வராவர். இவர் தமது முப்பதாவது வயதில் பட்டத்திற்கு வந்தார். 1790 ல் திப்புசுல்தான் திருச்சிராப்பள்ளிமேல் படையெடு்த்து வந்தகாலை இம்மன்னர் ஆங்கிலேயருக்குத் துணையாக நன்று அவனை மடக்கியடித்தார்.

1795-ல் ஆற்காட்டு நவப்பாகிய மகமதலி இவருக்கு ராஜாபகதூர் என்னும் பட்டத்தை அளித்தனன். அதனால் 1500 குதிரைப் படையும், கொடியும், முரசும், முடியும், பட்டத்து யானையும் வைத்துக் கொள்ள உரிமையுடையரானார்.

இவர் மூன்று கல்யாணம் செய்துக்கொண்டார். இவரது மூன்றாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளில் உயிருடன் இருந்த விஜயரகநாதராய தொண்டைமானும், ரகுநாததொண்டைமானும் முறையே 1807-லும், 1825-லும் மன்னராயினர்.

இவ்வேந்தர் சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் வானுலகெய்தினர். இவருடைய பத்தினியாராகிய ஆயிஅம்மாள் ஆய் என்பார் உடனட்கட்டையேறிவிட்டார்.
5. இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் (1807 – 1825)
Picture

இவர் பட்டத்துக்கு வந்தபொழுது பத்து வயதுள்ள சிறுவராய் இருந்த படியால் இவருடைய பங்காளி விசய ரகுநாத தொண்டைமான் அரச காரியங்களை நடாத்தி வந்தார், அப்பொழுது புதுக்கோட்டையில் நவாப்புக்குள்ள உரிமை மாறி ஆங்கிலேயரைச் சார்ந்ததனால் இவருடைய அரசவுரிமையை ஒப்புக்கொள்ளும்படி வியரகுநாத தொண்டைமான் ஆங்கில அரசாங்கத்தினரைக் கேட்டுக்கொண்டார். ஒப்புக்கெர்ணபின், இவருக்க முடிசூட்டுவிழா பதுக்கோட்டை நகரில் மிக்க சிறப்புடன்நடைபெற்றது. இவர் காலத்து மேஜர் ப்ளாக்பர்ன் என்னும் ஆங்கிலேயர் புதுக்கோட்டைக்கு ரெசிடெண்டாக இருந்து அரசாங்கத்தைச் சீர்திருத்தி மிகவும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார், கழந்தைகளாகவிருந்த விஜய ரகநாதராய தொண்டைமான், இரகுநாத தொண்டைமான் இருவரும் வடமொழி, மகாராட்டிரம், ஆங்கிலம் முதலான மொழிகளும், குதிரையேற்றமும், வில்வாட் பயிற்சியும் ்பயிற்றுவிக்கப்பெற்றனர்.

இம்மனர் காலத்துத்தான் புதுக்கோட்டை ஐந்து தாலுகாக்ளாகப் பகுக்கப்பட்டது; நீதிமனறங்கள் நிறுவப்பட்டன; வரி வாங்குதற்கு அதிகாரிகள் நியமிக்கப்ட்டனர். அரசாங்கத்திற்கு வேண்டிய மற்றைக் காரியங்களும் செய்யப்பெற்றன.

1812-ல் புதுக்கோட்டை நகர் தீக்கு இரையாயிற்று, இவ் பொழுதுள்ள அழகிய நகரம் பின்பு கட்டப்பெற்றது. 1812-ல் இம்மன்னருக்கும், இவர் தம்பியார்க்கும் மணம் நடைபெற்றது. 1817 முதல் இவர் பூரண சுதந்திரமுடையராய் ஆட்சி புரியலானார். இவருக்கு இருமனைவியர் உண்டு.

இவர் 1825-ல் உலக வாழ்க்கையை நீங்கவே இவரது தம்பியாகிய இரஜநாத தொண்டைமான் முடி சூட்டிக் கொண்டார்.
6. இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் (1825 – 1839)
Picture

இவர் மிகச் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர்.1825 ஜூலை மாதம் 20ம் நாள் ராஜா ரகுநாதத் தொண்டைமான் புதுக்கோட்டை மன்னராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதும் தன் சகோதரரின் நினைவாக புதுக்கோட்டை நகருக்கு கிழக்கே இருபது வீடுகளை ஏற்படுத்தி விஜயரகுநாதபுரம் என்று பெயரும் இட்டார். அடுத்து தன் தந்தையின் நினைவாக இன்னொரு குடியிருப்பையும் ஏற்படுத்தி அதற்கு பிரசன்ன ரகுநாதபுரம் என்று பெயரிட்டார். இப்பெயர்கள் இன்றும் இவ்விடங்களுக்கு வழங்குகின்றன. 

1833ல் ரகுநாதத் தொண்டைமானுக்கு ஹிஸ் எக்சலன்சி என்ற விருது ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்டது. இவரது செல்வாக்கு இதனால் மேலும் உய்ர்ந்தது. 

1838ல் புதுக்கோட்டையில் முதல் தபால் நிலையம் தொடங்கப்பட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் போர் ஏதும் நிகழாமல் அமைதியாக நிர்வாகம் நடை பெற்றது. இசை, நாட்டியம்,இலக்கியம் ஆகியன இவரது ஆட்சியில் நன்கு வளர்ச்சியுற்றன. இம்மனரது காலத்தில் சுங்கவரிகள் எழிமையாக்கப்பட்டு சில வரிகள் ரத்தும் செய்யப்பட்டன். ராஜா ரகுநாத தொண்டைமான் 1839 ஜூலை 13ல் இயற்கை எய்தினார். 

இவரை அடுத்து இவ்ரது மூத்த மகன் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் மன்னரானார்.
7. பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் (1839 – 1886)
Picture

தொண்டைமான் தனது அமைசர்களுடன்
இவர் பட்டத்துக்கு வந்த காலத்தில் ஒன்பது வயதுள்ள சிறுவராயிருந்தார். 1844-ல் இருந்து தாமே அரசாண்டு வந்தார். 1866-ல் நீதிமன்றங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன.
1. அப்பீல் கோர்ட்டு
2. மூன்று ஜட்ஜிகள்உள்ள செஷன்ஸ் கோர்ட்டு
3. ஸ்மால் காஸ் கோர்ட்டு
4. ஐந்து முன்சீபுக் கோர்ட்டுகள்

இலாகாக்கள்
1.வரிவசூல் (ரெவின்யூ).
1. கிராமம்
2. தாலூகா
3. காவல்
4. சிறைச்சாலை
5.தபால்
6.பங்களா
7.மராமத்து
8.உப்பளம்
9.காடு
10.நீதிமன்றம்
11.ஸர்க்கில் ஆபீஸ்

இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபல் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது.

இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்.
8. பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் (1886 - 1928) 
Picture

மார்த்தாண்ட தொண்டைமான்
இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. 1886-ல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது. சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து இராச்சியத்தைத் தாமே பார்த்து வருவாராயினர். குதிரை யேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். மண் உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை அரசாங்கத்தார்க்கும், ஆங்கில அரசாங்கத்தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம் மன்னர் காலத்தில் முடிவுற்றது. இம் முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டு தோறும் முப்பத்தெட்டாயிரம் ரூபாய் இம்மன்னருக்கு கொடுக்கம்படி நேரிட்டது. புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விட்பபட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன. ஆதலால் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனைமேல் இனாம் நிலங்களையெல்லாம் அளந்து சிறிது வரிவித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று. பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு நிலக்காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் பட்டணம் சீர்திருத்தப்பட்டது. கல்லூரி மருத்துவ நிலையம், அலுவலம் இவற்றின் கட்டிடங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. நீதி இலாக்காவும் மீண்டும் திருத்தி அமைக்கப்பெற்றன. இதன் படி மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதி மன்றம் ஆக 1887-ல் அமைக்கப்பட்டது.

உப்பு காய்ச்சலுக்கு ராயலிட்டி கேட்கப்போக இனாம் நிலத்துக்கும் நிலவரி விதித்து விட்டான் வெள்ளையன் பாருங்கள்

1898-ல் இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டியிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் அரசாட்சியை விட்டுச் சென்றனர், ஐரோப்பாவில் பல இடங்களுக்ச் சென்று பிறகு இங்கிலாந்துக்ச் சென்ற பொழுது இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23ந் தேதி வரவேற்று சிறப்பிக்கப்பட்டார், ஜுலை 14ல் மகாராணியார் தமது அரணமனையில் வரவேற்று கெளரவப் படுத்தினார்கள். 1898 நவம்பரில் இவ் வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பி பொழுது மக்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரைவரவேற்று கெளரவப் படுத்தியதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால்) கட்டப்பெற்றது.

1902-ல் 30 உறுப்பினர் அடங்கிய பெருமக்கட் கழகம் (மக்கள் பிரதிநிதிச் சபை) ஒன்று அமைக்கப் பெற்றது. மக்களுடைய குறைகளை யெல்லாம் தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது. 1907ல் இருந்து இதில் 18 உறுப்டபினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். வினைப்பொறுப்புக் கழகம் (காரிய நிர்வாக சபை) ஆனது திவான் , நாட்டுக்காவற் தலைவர் (ஸ்டேட் சூப்பரிண்டெண்ட்) ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இவர்கள் அடங்கியதாகும. இம்மனர்காலத்தில் நாடு பல வழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டுவரப்பட்டது. 1911 டிசம்பர் 12-ல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பெருமான் முடிசூட்டு விழாவுக்க இவ்வரசரும் அழைக்கப்பட்டிருந்தார்.

1913-ல் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாதவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்) என்னும் பட்டம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்டது.

இவ்வரசர் தமது சமஸ்தானத்திற்குச் செய்த சிறப்புடைய நன்மைகளாவன:-

1.புதுக்கோட்டைச் சீமையில் வேளாண்மையை வளம் சேர்க்கும் பொருட்டுக் கால்நடை மருத்துவ சாலையும், கால் நடைக் கண் காட்சியும் ஏற்படுத்தியதுடன், விதையும் உழவு மாடும் வாங்குதற்குக் குடியானவர்களுக்கு வட்டியின்றிப் பணம் கொடுத்துதவ ஏற்பாடு செய்தார்.
2.பல சாலைகளையும் வெள்ளாற்றுப் பாலத்தையும் உண்டாக்கி வாணிகம் பெருகும்படி செய்தார்.
3.பத்திரங்களைப் பதிவு செய்வதற்குத் தொலை விலுள்ளோர் புதுக்கோட்டைக்கு வரும் வருத்தம் நீங்குப்படி காப்புக்களரிகள்(பத்திர பதிவு அலுவலகங்கள்) பல இடங்களிலும் ஏற்படுத்தினார்.
4.புதுக்கோட்டை நகரத்தில் ஓர் பெரிய ஆங்கில மருத்துவ சாலையும் மற்றும் பல வைத்திய சாலைகளும் ஏற்படுத்தினார்.
5.நகரத்தில் வீதிதோறும் குழாய்கள் வைத்துப் புதுக்குளத்திலிருந்து நல்ல தண்ணீர் வரும்படி செய்தார்.
6.குழந்தைகள் சம்பளமின்றிப் படிக்கும்படி ஊர்தோறும் ஆரம்பப் பள்ளிக்கூங்கள் வைத்தார்.
7.தொழிற்சாலை, விவசாயசாலை முதலியன ஏற்படுத்தினார்.
8.எளியவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வாங்காது தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாகக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தினார்.
9.நீதிமன்றத்தில் பெரிய குற்றங்களை விசாரிக்கும் போது நீதிபதிகளுக்கு உதவியாக இரண்டு அல்லது மூன்று அஸெஸர்கள் இருந்து நியாயம் வழங்க ஏற்பாடு செய்தார்.
10.மக்கள் பிரதி நிதிச் சபை ஏற்படுத்தினார்.

இவ்வரசர் மீது ‘ இயன்மொழி வாழ்த்து ‘ என்னும் ஓர் அழகிய தமிழ்ப் பிரபந்தம் ப்னனத்தூர் நாராயணசாமி ஐயர் என்னம் பலவரால் இயற்றப்பெற்று , மகா மகோபத்தியாய உ.வே. சாமிநாத ஐயர் அவரக்ளின் சாத்துக் கவியுடன் வெளிவந்துள்ளது.

அதிலே இவ்வேந்தர் பெருதைமகள்,
‘ தானந் தனியருள் ஞான முதலன
வுரிய நாயக னுத்தம குணநிதி
பெரியநா யகிபதம் பிரியா வுளத்தன்மு
னவிலும் விசயரகு நாதன் மகன் மக
னிவநெனக் கன்ன னிவனென நுவலும்
கராமடிந் திடச்சக் கரப்படை விடுத்த
இராம சந்திர வேநதல்சேயென
ஓராயிரந் தண்கதி ரொன்றா யுதித்தென
அராவணை யமல னருளொருங் குதித்தெனக்
குராவணி குமரவேள் குவலயத் துதித்தெனப்
பாராவருந் தருமம் பாரில் முளைத்தெனச்
சராசன மதனன் றனிவடி வெடுத்தென
இராசமுண் டலத்தி விவற்கிணை யிலையெனச்
சராதி டராசன் றொல்குலம் விளங்கத்
தராதவலம் விளங்கத் தவநெறி விளங்கப்
புராதன நான்மறை மபுவியிசை விளங்க
ஆவிர்ப் பவித்த வாசர் சிகாமணி’

என்று இங்ஙனம் பலவாறு சுறப்பட்டுள்ளன. 

விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் 1922 -1928
Picture

இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவரகள் தமது அரசாங்க நிர்வாகத்தைத் தமையனாராகிய இவரிடம் ஓப்புவித்துவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று விட்டமையால், இவர் 1922 அக்டோபரிலிருந்து தாமே அரசாட்சியை நடத்தி வருகின்றார். இவர் 1872 ஏப்பிரல் 17-ல் பிறந்தவர். காலஞ்சென்ற மகாராஜா இராமச்சந்திர தொண்டைமான் சாகிப் அவர்களின் மூத்த பேரர். இவர் 1898-ல் காரிய நிரவாக சபையில் ஒருவராக அமைந்தனர். 1908-ல் இங்கிலாந்து சென்று திரும்பினர். 1990-ல் திவான் பதவியை ஏற்றுக்கொண்டனர். 1922-ல் அரசாட்சியை ஒப்புக்கொண்ட பின் நாட்டிற்கு அநேக நன்மைகள் புரிவதாக வாக்களித்து அங்ஙனமே செய்து வருகின்றார். இவர் இது காறும் செய்திருக்கிற நன்மைகளில், நகர பரிபாலன சபையில் 8-ஆக இருந்த அங்கத்தினர் தொகையை 12-ஆக உயர்த்தியிருப்பதும், 60 அங்கத்தினர்கள் கொண்ட புதிய சட்ட நிருமாண சபையொன்று ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத் தக்கவைகளாம். 

9. பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் 
1928 - 1948.
Picture

புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.

இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.

1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலைவமதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய சமயத்தில் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றை சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். சமஸ்தானங்கள் அனைத்தும், மன்னர் பதவியையும், சுகபோகம், அதிகாரம், சொத்துக்களையும் இழக்கத் தயாராக இல்லாத நிலையில் தானே விரும்பி இந்தியாவுடன் சேர்ந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை மட்டுமே என்பது ஒரு சிறப்பு மிகு இந்திய வரலாறு.

ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . சிறந்த மோட்டார் வாகன தொழில் நுட்ப வல்லுனராக திகழ்ந்து மிக சாமான்ய மனிதானக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர்1997இல் மறைந்தார்.

ராஜகோபாலத் தொண்டைமானின் மருமகளாகிய திருமதி சாருபாலா தொண்டைமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மேயராக வெற்றி பெற்று உள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்ற இவரும் மக்கள் தொண்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

புதுக்கோட்டைக்கும் இராமநாதபுரத்திற்கும் ஓர் காலத்தில் ஒரு கல்யாண சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மற்றும், புதுக்கோட்டை யரசர்களின் சம்பந்திகளாயுள்ளோர். மாங்காட்டான் பட்டி இராங்கியர், மேலைக் குறிச்சி இராங்கியர், கல்லாக்கோட்டை சமீன்தார் சிங்கப்புலி ஐயா, காட்டுக்குறிச்சிப் பன்றிகொண்டார், நெடுவாசல் சமீன்தார் பன்றிகொண்டார் முதலாயினார் ஆவர்.

புதுக்கோட்டை இராட்சிசயம் சிறிதாயிருப்பினும் தமிழ் நாட்டு முடியுடை வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குப் பின்பு இதுவே தமிழ் நாட்டு அரசாங்கமாக விளங்கிவந்தது. தமிழ் மொழியைப் புரந்த அம்மன்னர்களைப் போலவே இவர்களும் இப் பொழுது புரந்து வருகின்றனர். சர் வில்லியம் பிளாக்பர்ன் கூறிய படி புதுக்கோட்டை மன்னர் மிகவும் அதிகாரமுள்ளவராவர் .


பழமை பாதி... நவீனம் பாதி! புதுக்கோட்டை. 
ராணி ரமாதேவி தொண்டைமான்.
Picture

ராணி ரமாதேவி தொண்டைமான்.
''ஆங்கிலேயர் கால இந்தியாவில் நாடு முழுவதும் இருந்த 537 சமஸ்தானங்களில், ஆங்கிலேயர்களால் சிறப்பு அந்தஸ்து அளிக்கப் பட்ட சமஸ்தானம் என்ற பெருமையுடன் திகழ்ந்தது புதுக்கோட்டை  சமஸ்தானம். 

''பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட் டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப் பட்டது. அந்தப் பெயருக்கு ஏற்றார்போல் அன்றைய காலகட்டத்தில் நவீனத்துக்கு ஓர் உதாரணமாக விளங்கியது புதுக்கோட்டை. தொண்டைமான் மன்னர்கள் உருவாக்கிய இன்றைய நவீனப் புதுக்கோட்டைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர், 1800-களின் இறுதியில் புதுக்கோட்டையின் நிர்வாகப் பொறுப்பை வகித்த சேஷையா சாஸ்திரி.

புதுக்கோட்டை நகரை நவீனமாக நிர்மாணிப் பதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸையும் புதுச்சேரியையும் பார்வையிட்டு வர, தனிக் குழுக்களை மன்னர் அமைத்தார். இதன் தொடர்ச்சியாக நகரின் நடுவில் அரண்மனை, அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் தலா நான்கு அடுக்கு முறையில் 16 வீதிகள், மழை நீரைச் சேமிக்கும் வகையில் மேட்டுப் பகுதியான மச்சுவாடியில் தொடங்கி காட்டுப் புதுக்குளம் வரை 36 குளங்கள் என்று புதுக்கோட்டை உருவானது.

அந்தக் காலத்தில், புதுக்கோட்டையில் குடியிருப்புகளின் முன்புறம் கால்வாய்கள், பின் புறத்தில் கழிவு நீர்க் கால்வாய்கள் இருக்கும்.  இதனால், எவ்வளவு மழை பெய்தாலும் சாலைகளிலோ தெருக்களிலோ புதுக்கோட்டை யில் தண்ணீர் தேங்காது.  அக்காலத்தில் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பல நகரங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த  நகரம் இது.

புதுக்கோட்டைக்கு என்று தனிக் கலாசாரம் உண்டு. பழமையும் நவீனமும் இரண்டறக் கலந்த கலாசாரம். புதுக்கோட்டையில் புழக்கத்தில் இருந்த அம்மன் நாணயங்கள்கூட தனித்துவமானவை. மன்னர் குடும்பத்தோடு இப்பகுதி மக்களுக்கு நெருக்கமான உறவு உண்டு. ஊரின் முக்கிய அடையாளம், திருக் கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில். இங்கு நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழா, சித்திரைத் திருவிழா போன்ற திருவிழாக் காலங்களில், சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து, 10 நாட்கள் தங்கி மன்னர் குடும்பத்தோடு திருவிழாவைக் கொண்டாடிவிட்டு ஊர் திரும்புவது வழக்கம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 3.3.1948-ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜா ராஜகோபால தொண்டைமானால் கஜானா உட்பட அனைத்து நிர்வாகமும் முழுமையாக இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன் றைக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி அலுவலகமாக இருக்கும் இடம், எங்கள் புதிய அரண்மனை. மன்னர் காலத்தில் இப்பகுதி கல்வி வளர்ச்சிக்காகவே  கட்டப்பட்டதுதான் மன்னர் கல்லூரி. அரசுத் தலைமை மருத்துவ மனையும் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இன்றைக்கு சென்னை அருங்காட்சியகத்துக்கு அடுத்து, தமிழகத்திலேயே முக்கியமான அருங்காட்சியகமாகத் திகழும் புதுக்கோட்டை அருங்காட்சியகம், 1910-ம் ஆண்டு மன்னர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இப்படி மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடந்த இடம் புதுக்கோட்டை.

ஒரு காலத்தில் புதுக்கோட்டையின் முக்கியத் தொழிலாக நெசவுத் தொழில் இருந்தது. குறிப் பாக திருவப்பூரில் தயாரிக்கப்படும் சாய வேட்டிக்கு என்று தனி மரியாதை உண்டு.

'எல்லாரும் கட்டும் வேட்டி
அந்த வேட்டி இந்த வேட்டி
என் புருஷன் கட்டும் வேட்டி

புதுக்கோட்டை சாய வேட்டி!’ என்ற தெம்மாங்குப் பாடல் மூலம் புதுக்கோட்டை நெசவுக்கு உள்ள பெருமையை அறியலாம். அதேபோல, மண்பாண்டத் தொழிலும்  பிரசித்திப் பெற்ற ஒன்று. இன்றும் மழையூர், திருவப்பூர் பகுதிகள் மண் பாண்டக் கலையில் தமிழக அளவில் பெயர் பெற்று திகழ்கின்றன.

கலைகள் செழித்த இடம் புதுக்கோட்டை. புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர்கள் தட்சிணா மூர்த்தி பிள்ளை, ரெங்கநாயகி, நாடக மன்னர் பி.யூ.சின்னப்பா, 'காதல் மன்னன்’ ஜெமினி கணேசன், ஏ.வி.எம் ராஜன் ஆகியோரின் சொந்த ஊர் புதுக்கோட்டைதான். தீரர் சத்தியமூர்த்தி, தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி போன்ற வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த மண் இது.

புதுக்கோட்டையின் மிகப் பெரிய கொண் டாட்டங்கள் திருவப்பூர் மாரியம்மன் கோயில் பூத்திருவிழாவும் நார்த்தாமலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவும். இந்தத் திருவிழாக்களின்போது நடக்கும் கரகாட்டம், நாடகங்களுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. உணவு என்று எடுத்துக் கொண்டால், முந்திரிக்கும் மீனுக்கும் முக்கிய இடம் கொடுப்பார்கள் எங்கள் ஊர்க்காரர் கள்.

ஒருபுறம் புதிய நாகரிக மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டாலும் கலாசார அளவில் இன்றும் தங்கள் மரபு களைப் பேணுபவர்கள் நாங்கள். கோயில் திருவிழாக்களில் தொடங்கி, வீட்டு விசேஷங் கள் வரை அனைத்திலுமே, இதைப் பார்க்க முடியும். பழைய பெருமையோடு புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கிறோம் நாங்கள்!''

இந்தியாவிலேயே கடைசியாகக் கட்டப்பட்ட அரச குடும்பத்து அரண்மனை இது தான். இந்தியாவிலேயே முதன் முதலாக கார் வாங்கிய மன்னரும் புதுக்கோட்டை மன்னர்தான். மொத்த இந்தியாவும் ஆங்கிலேயர் வெளியிட்ட அனா, ரூபா புழக்கத்தில் இருந்த போது, சமஸ்தானத்திற்கென்று தனி நாணயம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டதும் இங்குதான், அரண்மனையின் அமைப்பில் எல்லாமே 99ல் வரும்படி அமைக்கப்பட்டிருந்ததும், ராணியம்மா சொல்லாமல் விட்ட செய்திகள் என்பதை சமஸ்தானத்தின் குடி ஒன்றின் வாரிசு என்ற முறையில் சொல்வது எனது கடமை.

கார்த்திக் தொண்டைமான்
Picture

கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் பரம்பரையை சேர்ந்தவர். இவரது தந்தை விஜயரகுநாத தொண்டைமான். தாய் மீனாம்பாள் ராஜாயி. இவர்களது ஒரே மகன் கார்த்திக் தொண்டைமான். இவர் மனைவி சுசிலா. இவர்களுக்கு சங்கமித்ரா, சம்யுக்தா என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது தந்தை விஜயரகுநாத தொண்டைமானும் 3 முறை (1967, 1977, 1980 ஆண்டுகளில்) காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் தொண்டைமான் 1.1.1972 அன்று பிறந்தவர். பி.எஸ்சி. பட்டம் பெற்றவர். 2006-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் உறுப்பினரானார். 2009-ம் ஆண்டில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்றார். கடந்த சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கார்த்திக் தொண்டைமான் 1,01,998 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளரான ஜாகீர் உசைனை விட 71,498 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தார்.

தொண்டை மான் வம்சத்தில் இன்றைய தினம் புதுக்கோட்டை மக்களின் செல்ல பிள்ளையாக விளங்கக்கக் கூடியவர் கார்த்திக் தொண்டைமான் அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்,கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் .இரக்க  சிந்தனை உள்ளம்  கொண்டவர் ,தன்னை தேடி வரும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை   இன்றளவும்  செய்து  கொண்டிருக்க கூடிய  மனித நேயமிக்க மாண்பாளர்.